Leo முதல் நாள் வசூல்..! சென்னையில் மட்டும் இத்தனை கோடியா?
லியோ திரைப்படம் முதல் நாளில் சென்னையில் மட்டும் எத்தனை கோடி வசூல் செய்திருக்கிறது தெரியுமா?
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று வரும் லியோ படத்தின் முதல் நாளிலேயே 120 கோடி வசூலைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. அதாவது உலகம் முழுவதும் முதல் நாளிலேயே 120 கோடி ரூபாய் வசூலைத் தாண்டிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் சென்னையில் பெரிய அளவுக்கு வசூல் இல்லை என்று கூறப்படுகிறது. அதிகாலை காட்சிகள் இல்லாமல் போனது இதற்கு காரணமாக கருதப்படுகிறது.
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள லியோ திரைப்படம் முதல் நாளே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. ஒவ்வொரு காட்சிக்கு ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் படத்தைப் பார்த்துவிட்டு திரும்பி வருகிறார்கள். ஒரு சிலர் சில குறைகளைச் சொன்னாலும், படத்துக்கு, பலத்த எதிர்பார்ப்புகளுடன் ரசிகர்கள் திரையரங்குகளுக்கு படையெடுத்து வந்த வண்ணம் இருக்கின்றனர்.முதல் நாள் 5 காட்சிகள், இன்றைய தினம் இப்போது வரை 2 காட்சிகள் முடிந்துள்ள நிலையில் படம் பிளாக்பஸ்டர் ஹிட் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் படத்தின் முதல் நாள் வசூல் ஒட்டுமொத்தமாக 120 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதில் உலக அளவில் இந்தியா தவிர்த்த நாடுகளில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கிறதாம். இந்தியாவில் மட்டும் 60 கோடி ரூபாய் வசூல் வேட்டை நடத்தியிருக்கிறது. ஆனால் சென்னையில் இதைவிட அதிக வசூலை எதிர்பார்த்திருந்தார்கள். அதிகாலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டதால் எதிர்பார்த்த வசூல் கிடைக்கவில்லை என்கிறார்கள்.
சென்னையில் வசூல்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய், திரிஷா, கௌதம் மேனன், ப்ரியா ஆனந்த், மிஷ்கின், மன்சூர் அலிகான், அர்ஜூன், சஞ்சய் தத் உள்ளிட்டோர் நடித்துள்ள திரைப்படம் லியோ. இந்த படத்துக்கு இசை அனிருத், ஒளிப்பதிவு மனோஜ் பரமஹம்சா, படத்தொகுப்பு ஃபிலோமின் ராஜ்.
மாஸ்டர் திரைப்படத்துக்கு பிறகு இரண்டாவது முறையாக விஜய்யுடன் இணைந்துள்ளார் லோகேஷ் கனகராஜ். இந்த படமும் கைதி - விக்ரம் யூனிவர்ஸில் இருக்குமா இல்லையா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே மிகப் பெரிய அளவில் எழுந்துள்ளது. இதனால் இந்த படத்துக்கு விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி மற்ற ரசிகர்களும் ஆர்வமாக காத்திருந்தார்கள்.
சென்னையில் அதிகாலை 4 மணி காட்சியும், 7 மணி காட்சியும் கிடைக்கவில்லை என்பதால் எதிர்பார்த்த அளவு வசூலைப் பெற முடியவில்லை என்கிறார்கள். முதல் நாளில் 5 காட்சிகளுக்கும் சேர்த்து கிடைத்த வசூல் 2 கோடி என்கிறார்கள். இது ஒப்பீட்டளவில் பெரிய தொகை தான் என்றாலும் 3 கோடி ரூபாய் வசூலைப் பெறும் என நினைத்திருந்த இடத்தில் இது குறைவு என்கிறார்கள். ஆனால் லியோ திரைப்படத்துக்கு அதிக கட்டணம் வசூலிக்கக் கூடாது என அரசு தரப்பில் கடுமையான உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
மற்ற மாநிலங்களிலும் வரவேற்பு
முதல் நாள் முதல் காட்சி தொடங்கி, இரவு வரை பலர், திரும்ப இரண்டாவது முறை பார்த்து ரசிக்கும் வகையில் இந்த படம் இருந்தது. தியேட்டர் எக்ஸ்பீரியன்ஸுக்காக இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர். இதுமட்டுமின்றி பெங்களூரு, கொச்சி, ஹைதராபாத் உள்ளிட்ட நகரங்களிலும் இந்த படத்துக்கு ஏகப்பட்ட வரவேற்பு கிடைத்து வருகின்றது.
படம் நல்ல எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி அதோடு விட்டுவிடாமல் நல்ல வரவேற்பையும் பெற்றிருக்கிறது. படத்தில் விஜய்யின் நடிப்பு, திரிஷாவின் அழகு, அர்ஜூன், சஞ்சய் தத், மிஷ்கின், சாண்டி ஆகியோரின் நடிப்பு வெகுவாக பாராட்டுகளைப் பெற்று வருகின்றன.
படத்தில் ஏகப்பட்ட சர்ப்ரைஸ் தருணங்கள் இருப்பதாக படம் பார்த்தவர்கள் கூறி வருகின்றனர். படம் எல்சியூவில் இருக்கிறதா இல்லையா என்பதை ரசிகர்கள் பார்த்து தெரிந்துகொள்ளட்டும் என விட்டுவிட்டார்கள். படத்தில் கௌதம் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோருக்கு மிகவும் வலிமையான கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 1 | Leo box office Chennai Day 1 - 2 கோடி ரூபாய்
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 2 | Leo box office Chennai Day 2
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 3 | Leo box office Chennai Day 3
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 4 | Leo box office Chennai Day 4
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 5 | Leo box office Chennai Day 5
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 6 | Leo box office Chennai Day 6
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 7 | Leo box office Chennai Day 7
லியோ பாக்ஸ் ஆபிஸ் வசூல் நாள் 8 | Leo box office Chennai Day 8