விஜய் - அனிருத் சாம்ராஜ்யம் ! பெரிய விலைக்கு போன லியோ படத்தின் ஆடியோ உரிமம் !
லியோ படத்துக்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் வேல்யூ இந்திய அளவில் மிகப்பெரியதாக மாறும் என்று அவர்கள் கணித்திருப்பதுதான் என்கிறார்கள்.
தமிழ் சினிமாவின் மிகப் பெரிய பிசினஸ் இப்போது விஜய் படங்களுக்குத்தான் இருக்கிறது. சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் பிசினஸ் பெரிதாக இருக்கிறது என்று கூறப்பட்டாலும் அது மிகப் பிரம்மாண்டமாக எடுக்கப்படும் பல மொழிகளில் உருவாகும் ஒரு படமாக இருக்கிறது. ஆனால் விஜய் என்ற பெயருக்காகவே லியோ படத்தின் உரிமைகள் பல கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தில் விஜய் ஜோடியாக திரிஷா, இவர்களுடன் ப்ரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், கௌதம், மிஷ்கின், மன்சூர் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகின்றது.
தமிழ் சினிமாவின் அதிக பிசினஸ் செய்த படங்களில் ஒன்றாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த படத்துக்கு பிறகு விஜய் நடிக்கும் புதிய படத்துக்கான அறிவிப்பும் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்துக்கு விஜய் வாங்கிய சம்பளம் தென்னிந்திய அளவில் மிகப்பெரிய விசயமாக பேசப்பட்டு வருகிறது.
விஜய் தற்போது தளபதி 68 படத்துக்காக 200 கோடி ரூபாய் சம்பளம் வாங்க இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் ஏஜிஎஸ் பட நிறுவனம்தான். அவர்கள் ஆரம்பத்தில் 175 கோடி ரூபாய் என பேசத் தொடங்கி 200 கோடி ரூபாயில் இறுதி செய்துள்ளனர். இதற்கு காரணம் லியோ படத்துக்கு பிறகு விஜய்யின் மார்க்கெட் வேல்யூ இந்திய அளவில் மிகப்பெரியதாக மாறும் என்று அவர்கள் கணித்திருப்பதுதான் என்கிறார்கள்.
லியோ படத்தின் ஆடியோ உரிமை மட்டும் 15 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளதாம். இத்தனைக்கும் படத்தில் இரண்டு பாடல்கள்தான் என்றும் 3 இசைக்கோர்வை வரும் என்றும் கூறப்படுகிறது. வெறும் 2 பாடல்களை 15 கோடிக்கு வாங்கியிருக்கிறார்கள் என்றால் அது விஜய் மற்றும் அனிருத் மீதான நம்பிக்கைதான். இவர்கள் தனித்தனியே இருந்தாலே மிகப் பெரிய வைரலாகிவிடும் பாடல்களைக் கொடுப்பார்கள். இருவரும் இணைந்தால் சொல்லவே வேண்டாம் என்கிறார்கள். இதனாலேயே விஜய்க்கு 200 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாம்.