Leo Audio Launch மதுரையில் நடைபெறுமா? என்ன சொன்னார் தளபதி?

கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டார். விக்ரம் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்துக்கு லியோ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொடுத்துவிட்டு அடுத்ததாக இந்த படத்துக்கு வந்திருக்கிறார் தளபதி விஜய்.

Update: 2023-04-29 13:15 GMT

கமல்ஹாசனை வைத்து விக்ரம் படத்தைக் கொடுத்த லோகேஷ் கனகராஜ் உலகம் முழுக்க பிரபலமாகிவிட்டார். விக்ரம் படத்தைத் தொடர்ந்து தளபதி விஜய் நடிக்கும் புதிய படத்தை இயக்கி வருகிறார். அந்த படத்துக்கு லியோ என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்து கொடுத்துவிட்டு அடுத்ததாக இந்த படத்துக்கு வந்திருக்கிறார் தளபதி விஜய்.

லோகேஷ் கனகராஜ், விஜய் இருவரும் கடந்த படத்தில் மிகப் பெரிய வெற்றியைப் பதிவு செய்துள்ளனர். இவர்கள் இருவரும் இணைந்து முன்னதாக வெளியான மாஸ்டர் திரைப்படமும் மிகப் பெரிய வரவேற்பை பெற்றிருந்ததால் இந்த படத்தின் மீது இயல்பாகவே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சென்னையில் முதல் ஷெட்யூல் நடந்தாலும் 60 நாட்கல் ஷெட்யூலுக்காக காஷ்மீருக்கு படக்குழு சென்ற போதுதான் உண்மையான ஷூட்டிங் நடந்தது. தளபதி விஜய், திரிஷா, பிரியா ஆனந்த் உள்ளிட்டோர் காஷ்மீரில் முக்கிய காட்சிகளில் நடித்துள்ளனர்.

விஜய், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்டோர்கள் நடித்த காட்சிகள், சண்டைக் காட்சிகளும் படமாக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து ஹைதராபாத் மற்றும் சென்னையில் இரண்டு ஷெட்யூல்களாக மொத்தம் 60 நாட்கள் நடப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில் இரண்டையும் ஒரே இடத்தில் எடுத்து முடிக்க திட்டமிட்டுள்ளதாம்.

அடுத்த 60 நாட்கள் விஜய், அர்ஜூன், சஞ்சய் தத், திரிஷா உள்ளிட்டோருடன் நடைபெறவுள்ள இந்த படப்பிடிப்பு வரும் மே மாத இறுதியில் அல்லது ஜூன் மாத துவக்கத்தில் முடிவடையும் எனத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் காஷ்மீர் ஷெட்யூலில் கொஞ்சம் அதிகமாக களைப்படைந்த குழு, இரண்டாவது ஷெட்யூலை லேட்டாக துவங்க முடிவு செய்துள்ளதாம்.

படப்பிடிப்பு முடிந்ததும், அடுத்து டப்பிங் உள்ளிட்ட போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்குவார்கள். அதற்கு ஒரு 30 நாட்கள் என திட்டமிட்டுள்ளனர். அனிருத் இசையில் முதல் பாடல் உருவாக்கப் பணிகள் நடைபெற்று வருகின்றதாம். தளபதி விஜய் பிறந்தநாளில் முதல் சிங்கிளை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.

லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா மிகப் பெரிய நிகழ்வாக நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள். இதுவரை தளபதி விஜய் படங்களுக்கு நடைபெற்ற விழாக்கள் எல்லாமே சென்னையிலேயே நடைபெற்றிருக்கிறது. இதனால் தென் தமிழக ரசிகர்கள் இதில் கலந்து கொள்வது கொஞ்சம் சிரமமான விசயமாக பார்க்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இம்முறை தளபதி விஜய் அரசியல் கட்சி துவங்குவதை மனதில் கொண்டு படத்தின் இசை வெளியீட்டு விழாவை கோயம்புத்தூர் அல்லது மதுரையில் நடத்த திட்டமிடுங்கள் என்று கூறியிருக்கிறாராம்.

2026ம் ஆண்டு அரசியல் கட்சி துவங்கும் யோசனையில் இருக்கும் விஜய், இதனை இப்போதே திட்டமிட்டு கணக்கு போட்டு அதன்படி நடக்க முயற்சி செய்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Tags:    

Similar News