ரசிகர்களுடன் 'பொன்னியின் செல்வன்' படம் பார்த்த குந்தவை..!

இன்று வெளியாகிய 'பொன்னியின் செல்வன்' படத்தில் குந்தவையாக நடித்த த்ரிஷா ரசிகர்களுடன் திரையரங்கில் படம் பார்த்தார்.;

Update: 2022-09-30 09:20 GMT

பைல் படம்

அமரர் கல்கியின் வரலாற்றுப் புதினமான 'பொன்னியின் செல்வன்' , இயக்குநர் மணிரத்னத்தின் இயக்கத்தில் இரண்டு பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 'பொன்னியின் செல்வன்' படத்தின் முதல்பாகம் இன்று(30/09/2022) உலகமெங்கும் திரையரங்குகளில்  வெளியானது. அதிகாலை 4 மணியில் இருந்து சிறப்புக் காட்சிகளுடன் படம் வெளியிடப்பட்டது. உலகெங்கும் உள்ள ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பு மற்றும் இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில், படத்தில் பங்காற்றிய கலைஞர்கள் எல்லோரும் இன்று திரையரங்கங்களில் சென்று ரசிகர்களோடு படத்தைப் பார்த்து ரசித்துள்ளனர். அவ்வகையில், படத்தில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்த த்ரிஷா, ரசிகர்களுடன் சேர்ந்து சென்னை ஐமேக்ஸ் திரையரங்கில் 'பொன்னியின் செல்வன்' படத்தைப் பார்த்தார்.

திரையரங்கில் த்ரிஷாவைக் கண்ட ரசிகர்கள் உற்சாகத்தோடு அவரிடம் பேசியும் வாழ்த்துகள் தெரிவித்தும் அவரோடு செல்ஃபி எடுத்துக்கொண்டும் தங்களது மகிழ்வான தருணம் இது என்று கொண்டாடினர். ரசிகர்களுடனான த்ரிஷாவின் அந்த இனிய சந்திப்பை பலர் விடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர். அந்த விடியோ காட்சிகளை த்ரிஷாவின் ரசிகர்கள் பகிர்ந்து கொண்டாடி வருகின்றனர்.

Tags:    

Similar News