KGF 3ல் அஜித்... வடிகட்டுன பொய்... புரளியாம்ப்பா!
இரண்டாவது படம், பிரசாந்த் நீல் உருவாக்கிய பிரபலமான ‘கே.ஜி.எஃப்’ பிரபஞ்சத்தின் நீட்சியாக இருக்கலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.;
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் அஜித்குமார், இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் இரண்டு படங்களில் நடிக்க உள்ளதாக வெளியான தகவல், திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அது புரளி என்பது தற்போது தெரியவந்துள்ளது.
இரண்டு கதைகள், இரண்டு உலகங்கள்
இந்த திரைப்படங்கள் இரண்டும், தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் வகையில் இரு வேறு களங்களில் அமைய உள்ளதாக தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.. முதல் படம், அஜித்தின் தனித்துவமான அதிரடி ஆக்ஷன் பாணியில் உருவாகும் எனவும். இரண்டாவது படம், பிரசாந்த் நீல் உருவாக்கிய பிரபலமான ‘கே.ஜி.எஃப்’ பிரபஞ்சத்தின் நீட்சியாக இருக்கலாம் என்று அந்த செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டம்
கோலார் தங்க வயல்களின் கதையை உலகறியச் செய்த 'கே.ஜி.எஃப்' படங்களைத் தயாரித்த ஹோம்பாலே பிலிம்ஸ் நிறுவனம், இந்த இரண்டு புதிய திட்டங்களையும் தயாரிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த பிரம்மாண்ட கூட்டணியின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் அடுத்த ஆண்டு (2025) வெளியாகும் எனவும் செய்திகள் பரவின.
'விடாமுயற்சி' இடைவேளை - அஜித் - பிரசாந்த் சந்திப்பு
அஜித் தற்போது நடித்து வரும் 'விடாமுயற்சி' படத்தின் படப்பிடிப்பின்போது, இயக்குனர் பிரசாந்த் நீல், அஜித்தை சந்தித்ததாகவும், கதை விவாதம் நடத்தியதாகவும் கூறப்படுகிறது. அப்போது, இரண்டு படங்களில் நடிக்க அஜித் சம்மதம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் உண்மை இல்லை என்பது தெரியவந்துள்ளது. ஆனால் விரைவில் அஜித்தை பிரசாந்த் நீல் சந்திக்க இருப்பதாகவும் தகவல் உண்டு.
'தல 64' - தனித்துவமான ஆக்ஷன் என்டர்டெயினர்
இந்த இரு பட கூட்டணியில் உருவாகும் முதல் படம், தற்காலிகமாக 'தல 64' என குறிப்பிடப்படுகிறது. அஜித்தின் 64வது படமாக உருவாகும் இந்த திரைப்படம், 2025 ஆம் ஆண்டு தயாரிப்பு தொடங்கி, 2026 ஆம் ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் இதில் எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.
'கே.ஜி.எஃப் 3'க்கான முன்னோட்டமா?
இந்த கூட்டணியில் உருவாகும் இரண்டாவது படத்தின் கிளைமேக்ஸ், 'கே.ஜி.எஃப் 3' படத்திற்கான முன்னோட்டமாக இருக்கும் எனவும், அதில் அஜித் கதாபாத்திரம் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும் என்றும் திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம், பிரசாந்த் நீல் உருவாக்கியுள்ள திரைப் பிரபஞ்சத்தில் அஜித் இணைவது உறுதியாகும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ராக்கி பாய் - தல: திரையில் இணைவார்களா?
'கே.ஜி.எஃப்' படங்களில் நடித்து உலக அளவில் புகழ்பெற்ற நடிகர் யாஷ், அஜித்துடன் இணைந்து இந்த படத்தில் நடிப்பாரா என்ற கேள்வி, ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை என்றாலும், இது சாத்தியமே என நம்பப்படுகிறது.
எதிர்பார்ப்பின் உச்சத்தில் ரசிகர்கள்
இந்த பிரம்மாண்ட கூட்டணி உறுதியானால், அது தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. அஜித் ரசிகர்கள் மட்டுமின்றி, ஒட்டுமொத்த இந்திய திரையுலகமும் இந்த கூட்டணியின் வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது.
நிறைவேறுமா?
இது புரளியாக இருந்தாலும் இந்த செய்தி உண்மையாக இருக்கக்கூடாதா என அஜித் ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.