Kayal திருமணத்தை நிறுத்த பெரியப்பாவிடம் கேட்ட மூர்த்தி! அடுத்து நடந்தது என்ன?
கயலின் மீது எழிலுக்கு இருக்கும் காதல்தான் குழந்தை அனுவைக் காப்பாற்றியிருக்கிறது என்று கயலின் தோழி கூறுகிறாள். இத்தனை நடந்தும் எழில் மீது காதல் வரவில்லையா என்ற கேள்விக்கு கயல் அழகாக பதில் கூறுகிறாள்.;
கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 29th May 2023
கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 27th May 2023
குழந்தை அனுவைக் காப்பாற்றிய நிலையில் எழிலுக்கு நன்றி கூறுகிறாள் கயல். இதுக்குலாம் எதுக்கு நன்றி என்று கேட்கிறான் எழில். கடவுளுக்கு சமமானவன் நீ என்று எழிலைப் பார்த்து கயல் கூற, அவனோ காதலில் திளைக்கிறான். வழக்கம்போல கயல் சீரியஸாக பேசிக் கொண்டிருக்கும்போது எழில் அதை காதலாக நினைத்து பேசுவதும் பின் கயல் அதைக் கண்டுபிடிப்பதும் என ஜாலியாக செல்கிறது.
கயலுக்கு அவள் தோழியிடம் இருந்து ஒரு அழைப்பு வருகிறது. அவள் அனு பாப்பா குறித்து நலம் விசாரிக்கிறார். நன்றாக இருக்கிறாள் என்று தெரிந்ததும் இதுக்கு எல்லாம் காரணம் எழில்தான் என்று பாராட்டி பேசுகிறார். அதை ஆமோதித்து பேசும் கயல், எழில் குறித்து மேலும் புகழ்ந்து பேச அவன் மீது காதல் இல்லையா என்று கேட்கிறாள்.
தனக்கு எழில் நல்ல நண்பன். அவன் என் குடும்பத்தில் ஒருவன். அவன் மீது என் அம்மாவுக்கு நிகரான அன்பும் மரியாதையும் இருக்கிறது என்று கூறுகிறாள். எழிலுக்கு 4 நாளில் திருமணம். அவன் நன்றாக இருக்க வேண்டும் ஆர்த்தியைத் திருமணம் செய்துகொண்டு நன்றாக வாழ வேண்டும். என் அம்மாவின் சுயமரியாதை தான் எனக்கு முக்கியம். அவருக்கு எந்த மாதிரியான அவப் பெயரையும் வாங்கித் தரமாட்டேன் என்று கூறுகிறாள். ஆர்த்தியைத் திருமணம் செய்யவில்லை என்றால் பெரியப்பாவும் பெரியம்மாவும் எழிலை அதிகமாக சபிப்பார்கள். அவர்களின் பேச்சைக் கேட்க வேண்டாம் என்று நினைக்கிறேன் என்று கூறுகிறாள்.
தன் தம்பி, தங்கைகளை கரை சேர்த்து அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலைக்கு வரவேண்டும் அதற்கு நான் உழைக்க வேண்டும் என்று கூறுகிறாள் கயல்.
இந்நிலையில், தோழி இன்னொரு கேள்வியையும் கேட்கிறாள். உன் கடமைகள் அனைத்தையும் முடித்துவிட்டு நீ வரும்போது உனக்காக எழில் காத்திருந்தால் அவரை கல்யாணம் பண்ணிக்க நீ தயாரா என்று கேட்கிறார். முதலில் சமாளிப்பது போல பேசினாலும் அடுத்து நான் என் கடமைகளை முடித்துக் கொண்டு திரும்பி வரும்போது எழில் அவன் அம்மா சம்மதத்தோட எனக்காக காத்திருந்தா கல்யாணம் பண்ணிப்பேன் என்று கூறுகிறாள்.
ஒரு பக்கம் மூர்த்தி தன் தங்கை கயல் தன் குடும்பத்துக்காக என்ன என்னலாமோ செய்திருக்கிறாள். ஆனால் தன்னால் அவளது வாழ்க்கையில் ஒரு நல்ல விசயம் நடக்க மாட்டேங்கிறதே என்று வருத்தப்படுகிறான். அதேநேரம் தன்னிடம் ஒரு திட்டமிருப்பதாகவும் அதன்படி கயலை, எழிலுக்குதான் திருமணம் செய்து வைப்பேன் என்று தெரிவிக்கிறார்.
கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 30th May 2023
பெரியப்பா தர்மலிங்கம் தனது மகள் கல்யாணம் நடக்கவேண்டும் என மூர்த்தியின் குழந்தையைக் கடத்திவிட்டு மொத்த குடும்பத்தையும் அல்லல்பட வைக்கிறார். அந்த சயமத்தில் பந்தக்கால் சரிந்து விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.