Kayal serial மீண்டும் வந்த பிரபு... அதிர்ந்து போன ஆனந்தி!
செத்து போன பிரபு கனவில் வந்து பயமுறுத்துவதால் அதிர்ந்து போகிறார் ஆனந்தி.;
தன் குடும்பத்திற்காக போராடும் ஒரு பெண்ணின் கதையை மையமாகக் கொண்டு ஒளிபரப்பாகி வரும் தொடர்தான் கயல். நேர்மையும் வீர குணமும் நிறைந்த கயல் தன்னுடைய மொத்த குடும்பத்தையும் உழைத்து காப்பாற்றி வருகிறார். குடிகார அண்ணனை திருத்தி வேலைக்கு போக வைப்பது, தங்கைக்கு திருமணம், தம்பிக்கு போலீஸ் வேலை, இன்னொரு தங்கையை டாக்டர் ஆக்குவது என கயலின் போராட்டங்களால், தன்னை காதலிக்கும் உயிர் நண்பனான எழிலை பற்றி யோசிக்க கூட நேரம் இல்லாமல் இருக்கிறாள். இதில் கயல் ரோலில் சைத்ரா ரெட்டியும், எழில் ரோலில் சஞ்சீவும் நடிக்கிறார்கள்.
சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியல்தான் எப்போதும் டாப் கியரில் டிஆர்பி பெற்று தந்துகொண்டிருக்கிறது.
விறுவிறுப்பாக செல்லும் எபிசோட்களால், ரசிகர்களும் சீரியலில் அடுத்து என்ன நடக்கும் என்பதை அறிந்து கொள்ள ஆர்வமாக இருக்கிறார்கள்.
ஆனந்தியிடம் தவறாக நடக்க முயற்சிக்கும் பிரபுவை அவள் தள்ளிவிட அவன் கீழே விழுந்து தலையில் அடி பட்டு இறந்து விடுகிறான். இந்த கொலை ஆர்த்தி கல்யாண மண்டபத்தில் நடந்தது. இதனால் பெரும் பரபரப்புக்கு மத்தியில் ஆனந்தியைக் காப்பாற்ற நினைக்கிறாள் அக்கா கயல். இதைத் தான் கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பி வருகிறார்கள்.
பிரபு காணவில்லை என அவனது வீட்டில் புகார் கொடுத்திருந்த நிலையில் அவனைத் தேடி அலைகிறது போலீஸ். பிரபு காணாமல் போனதுக்கும் கயலுக்கும் சம்பந்தம் இருக்கும் என நினைத்து அவளை துரத்துகிறது. கயல் அதிலிருந்து தப்பிக்க வழி தேடி கொண்டிருக்கிறாள். அதே நேரம் எழிலின் காதலை ஏற்கமுடியாமலும், தனக்கு எழில் மேல் இருப்பது காதல்தானா என்கிற சந்தேகத்திலும் தவித்து வருகிறார்.
கயலும் ஆனந்தியும் பைக்கில் சென்று கொண்டிருக்கிறார்கள். அதை அவர்களின் பெரியப்பா மகன் பார்க்கிறான். அவன் அப்பாவிடம் சொல்லி, ஏதோ திட்டமிடுவது போல் தெரிகிறது.
ஆனந்தி முன் பிரபு வந்து நிற்க அதிர்ந்து போகிறாள். இதனால் பயந்து போன ஆனந்தி கயலிடம் இதுகுறித்து சொல்கிறாள். இப்படியாக இந்த புரோமோ முடிவடைகிறது.