Kayal -ஐச் சுற்றி வளைத்த போலீஸ்! மாட்டிக்கொள்வாரா கயல்!

கயல் மீது திரும்பிய காவல்துறையின் சந்தேகம். மாட்டிக் கொள்ளப் போகிறாரா கயல்.;

Update: 2023-08-28 15:44 GMT

கயல் சீரியல் இன்று | Kayal serial Today Episode

கயல் சீரியலில் பரபரப்பு! பிரபு காணாமல் போனதில் கயல் மீது சந்தேகம்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியல் கயல். கடின உழைப்பாளியான கயல், தனது குடும்பத்திற்காக போராடும் கதையை மையமாக கொண்டு இந்த சீரியல் உருவாகி வருகிறது.

கடந்த சில வாரங்களாக இந்த சீரியலில் பரபரப்பு சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. பிரபு தன்னிடம் தப்பாக நடக்க, அவனைக் கொலை செய்துவிட்ட ஆனந்தி, அதனை கயலிடம் சொல்லி அழுகிறாள். இதனால் அக்காள், தங்கை இருவரும் சேர்ந்து இந்த கொலையை மறைத்து, பிரபுவின் உடலை புதைத்து விட எண்ணுகிறாள் கயல்.

கயலும், ஆனந்தியும் சேர்ந்து அந்த பிணத்தை தனது அண்ணன் மூர்த்தியின் சமையல் பாத்திரத்தில் ஒளித்து வைக்க, அதனை எடுத்துச் செல்கிறான் மூர்த்தியும் அவனது நண்பனும். பிணத்தை மற்ற பாத்திரங்களுடன் சேர்த்து ஒரு அறையில் பூட்டி வைத்துவிட்டு வந்துவிடுகின்றனர். அந்த நேரத்தில் கயல் ஒரு திட்டமிட்டு இரவு அனைவரும் தூங்கிய பிறகு ஆனந்தியுடன் சேர்ந்து கயலும் பிணத்தை எடுத்துச் சென்று புதைத்து விடுகின்றனர்.

ஆனால் திரும்பி வருகையில் அவர்கள் இருவரும் குடும்பத்தினரிடம் மாட்டிக் கொள்கின்றனர். கயலும், ஆனந்தியும் வீட்டுக்கு வர அங்கு மூர்த்தி, அண்ணி, அம்மா என அனைவரும் காத்திருக்கின்றனர். என்ன செய்வது என்று சொல்லத் தெரியாமல் குழம்பிய ஆனந்தி சொதப்ப, கயல் சமாளிக்கிறாள். ஆனந்தியின் செயினைக் காணவில்லை என்று சொல்ல அவர்கள் கொஞ்சம் திட்டிவிட்டு சமாளித்து விடுகின்றனர்.

பிரபுவைக் காணவில்லை என அவனது பெற்றோர் புகார் செய்ய, அதை கண்டுபிடிக்க போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதேநேரம் செயினை ஒருவேளை பிணத்துடன் புதைத்து விட்டோமோ அதன் அருகில் தொலைந்து விட்டதோ என நினைத்த கயல் அதைத் தேடிச் செல்கிறாள்.

செல்லும் வழியில் போலீசிடம் மாட்ட, அவள் ஏதேதோ சொல்லி தப்பிக்க நினைக்கிறாள். அங்கு ஒரு நோயாளியைப் பார்க்கச் செல்வதாக கூறி செல்கிறாள். ஆனால் காவலர்களுக்கு சந்தேகம் வர உடனடியாக கயலைத் துறத்திக் கொண்டு செல்கின்றனர்.

தப்பித்த கயல் அங்கே ஒரு இடத்தில் மறைந்து நிற்கிறாள்.

கயல் சீரியல் நேற்று | Kayal serial Yesterday Episode

விரைவில் அப்டேட் செய்யப்படும்

கயல் சீரியல் நாளை | Kayal serial Today Episode

விரைவில் அப்டேட் செய்யப்படும்

Tags:    

Similar News