Kayal இன்றைய எபிசோட் ஜூன் 15, 2023
குடிபோதையில் உளறிய சூர்யா... கயலின் களங்கம் துடைக்கப்படுமா?;
சூர்யாவின் குட்டை உடைக்க எழில், வசந்தி என்கிற பெண்ணை அழைத்து வருகிறான். ஆனால் கயல் வீட்டில் அந்தர் பல்டி அடிக்கும் வசந்தி சூர்யாவுக்கும் கயலுக்கு திருமணம் நடைபெற்றது தனக்கு தெரியுமா என்று பிளேட்டை மாற்ற இதனால் மொத்த குடும்பமும் மீண்டும் கவலை கொள்கிறது. சூர்யாவுக்கு இது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது.
கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 15th June 2023
விரைவில் அப்டேட் செய்யப்படும்
கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 13th June 2023
சூர்யா யார் என்று தேடிச் செல்லும் எழிலும் அவனுடன் செல்லும் நண்பனும் வசந்தி எனும் பெண் பற்றி தெரிந்து கொள்கின்றனர். நர்ஸாக பணிபுரிந்து வரும் வசந்தியும் கயல், சூர்யாவுடன் அதே கேம்பில் பங்கு பெற்றிருக்கின்றனர். கயலை முதலில் தெரியாவிட்டாலும் பின் அடையாளம் கண்டுகொண்டு சூர்யா தப்பானவன் அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றெல்லாம் பேசிய வசந்தி கயல் வீட்டுக்கு கூட்டி வந்ததும் அந்தர் பல்டி அடிக்கிறாள்.
சூர்யாவுக்கும் கயலுக்கும் அப்போவே கல்யாணம் ஆகிடிச்சே. நானும் அந்த கல்யாணத்த பத்தி தெரிஞ்சிக்கிட்டேனே என்று வசந்தி சொல்ல, எம்மா நீ வசந்தியா இல்ல வதந்தியா என கோபப்படுகிறான் மூர்த்தியின் நண்பன்.. அவனை சமாதானப்படுத்திக் கொண்டு வசந்தியைப் போகச் சொல்கிறார்கள்.
கயல் எழிலிடம் சண்டைப் போடுகிறாள். என் வாழ்க்கைல தலையிடாத. ஆர்த்திய கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக இரு.. என்று கூறுகிறாள். தன்னால்தான் கயலுக்கு மேலும் கெட்ட பெயர் வந்துவிட்டது என்று வருத்தத்தில் வீட்டுக்கு கிளம்புகிறான் எழில்.
கயலின் தங்கை தேவி வீட்டில் காலையிலே விக்னேஷ் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான். தேவி தோசை சுட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் விக்னேஷ் வேலைக்கு போணும் ரெடி ஆகணும் என்று கூறிக்கொண்டே சமையல் செய்து கொண்டிருக்கும்போது தேவியுடன் ரொமாண்ஸ் பண்ணுகிறான். போய் குளிச்சிட்டு வாங்க நா ஷர்ட் எடுத்து வைக்குறேன் என்று அனுப்புகிறாள் தேவி.
தேவியும் விக்னேஷும் ரொமான்ஸ் செய்யும் காட்சியைப் பார்த்து வயிறெரியும் விக்னேஷின் மாமன் மகள் உமா.. தேவியை சீண்ட வேண்டும் என திட்டமிடுகிறாள். உடனே கீழே சென்று தன் அத்தையிடம் இதுகுறித்து கூறுகிறாள். என்ன நடந்தாலும் தேவி இந்த வீட்டை விட்டு போனால் சரிதான் என அவளும் அமைதியா இருக்கிறாள். தேவியின் கணவன் விக்னேஷ் சட்டையைப் போட்டுக் கொண்டு தேவி முன் வந்த அக்கா அக்கா என்று சீண்ட ஆரம்பிக்கிறாள் உமா. இது மாமா சட்டை அது எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று தேவி சொல்ல, அதுக்கு எனக்கு உரிமை இருக்கு என்று உமா சொல்கிறாள். சட்டையைப் பிடித்து உலுப்ப சட்டை கிழிஞ்சி போகிறது. உடனடியாக விக்னேஷின் அம்மா வந்து பிரச்னையை தொடங்குகிறாள். நடந்ததைக் கூறுகிறாள் உமா.
தேவியின் கணவன் விக்னேஷ் அப்போது அங்கு வருகிறான். விஷயத்தை கேட்கிறான். விக்னேஷிடம் தேவி பற்றி ஒன்னுக்கு ரெண்டாக மூட்டி விடுகிறாள் உமா. இந்த வாக்குவாதம் பயங்கர சண்டையில் முடிகிறது. கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் வேலைக்கு சென்று விடுகிறான் விக்னேஷ். இதனால் கவலையில் இருக்கிறாள் தேவி.
மூர்த்தி சரக்கு வாங்க நண்பனிடம் சொல்கிறான். சரக்கு வாங்கிக் கொண்டு வந்துவிட்டு இந்த பழக்கத்த விட சொல்லி கேட்டா, நீங்க என்ன ஆசானே திரும்ப திரும்ப சரக்கு வாங்கிட்ட வர சொல்ற என்று கேட்க, அது தான் குடிப்பதற்காக அல்ல, சூர்யாவுக்கு கொடுத்து அவனை உண்மையை உளர வைக்கலாம் என்று சொல்கிறான். இவனது திட்டப்படி சூர்யாவுக்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கப் போகிறார்கள்.
கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 15th June 2023
சூர்யாவின் முகத்திரையைக் கிழித்து அவன் யார் என அனைவருக்கு நிரூபிக்க நினைக்கிறான் எழில். ஆனால் அவன் செய்த காரியத்தால் மேலும் தலைகுனிவுக்கு ஆளாகிறாள் கயல். தன் பக்கம் இருக்கும் நியாயத்தை மற்றவர்களுக்கு புரியும்படி செய்வாளா கயல் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாக இருக்கிறது.