யார் இந்த சூர்யா? களமிறங்கிய எழில்! கயலின் களங்கம் துடைப்பாரா?

சூர்யா யார் என்பதைக் கண்டுபிடிக்க களமிறங்கியுள்ளார் எழில்.;

Update: 2023-06-13 04:00 GMT

கயல் தன்னை காதலித்து திருட்டுத்தனமாக திருமணமும் செய்து கொண்டதாகவும் தன்னை விட்டு பிரிந்து வந்து 2 ஆண்டுகள் ஆன நிலையிலும் திரும்பி வரவில்லை எனவும் கூறி வீட்டு வந்தவன் சூர்யா, நாளுக்கு நாள் செய்து வரும் அராஜகத்தால் கோபப்பட்ட கயல் அவனை அறைந்துவிடுகிறாள். ஆனால் இந்த வாரம் உண்மை உடைபடுகிறது. சூர்யா யார் என்பது தெரியவருகிறது!

கயல் இன்றைய எபிசோட் | Kayal serial today episode youtube 13th June 2023

சூர்யா யார் என்று தேடிச் செல்லும் எழிலும் அவனுடன் செல்லும் நண்பனும் வசந்தி எனும் பெண் பற்றி தெரிந்து கொள்கின்றனர். நர்ஸாக பணிபுரிந்து வரும் வசந்தியும் கயல், சூர்யாவுடன் அதே கேம்பில் பங்கு பெற்றிருக்கின்றனர். கயலை முதலில் தெரியாவிட்டாலும் பின் அடையாளம் கண்டுகொண்டு சூர்யா தப்பானவன் அவனுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும் என்றெல்லாம் பேசிய வசந்தி கயல் வீட்டுக்கு கூட்டி வந்ததும் அந்தர் பல்டி அடிக்கிறாள்.

சூர்யாவுக்கும் கயலுக்கும் அப்போவே கல்யாணம் ஆகிடிச்சே. நானும் அந்த கல்யாணத்த பத்தி தெரிஞ்சிக்கிட்டேனே என்று வசந்தி சொல்ல, எம்மா நீ வசந்தியா இல்ல வதந்தியா என கோபப்படுகிறான் மூர்த்தியின் நண்பன்.. அவனை சமாதானப்படுத்திக் கொண்டு வசந்தியைப் போகச் சொல்கிறார்கள்.

கயல் எழிலிடம் சண்டைப் போடுகிறாள். என் வாழ்க்கைல தலையிடாத. ஆர்த்திய கல்யாணம் பண்ணிட்டு சந்தோசமாக இரு.. என்று கூறுகிறாள். தன்னால்தான் கயலுக்கு மேலும் கெட்ட பெயர் வந்துவிட்டது என்று வருத்தத்தில் வீட்டுக்கு கிளம்புகிறான் எழில்.

கயலின் தங்கை தேவி வீட்டில் காலையிலே விக்னேஷ் வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறான். தேவி தோசை சுட்டுக் கொண்டிருக்கிறாள். அப்போது அங்கு வரும் விக்னேஷ் வேலைக்கு போணும் ரெடி ஆகணும் என்று கூறிக்கொண்டே சமையல் செய்து கொண்டிருக்கும்போது தேவியுடன் ரொமாண்ஸ் பண்ணுகிறான். போய் குளிச்சிட்டு வாங்க நா ஷர்ட் எடுத்து வைக்குறேன் என்று அனுப்புகிறாள் தேவி.

தேவியும் விக்னேஷும் ரொமான்ஸ் செய்யும் காட்சியைப் பார்த்து வயிறெரியும் விக்னேஷின் மாமன் மகள் உமா.. தேவியை சீண்ட வேண்டும் என திட்டமிடுகிறாள். உடனே கீழே சென்று தன் அத்தையிடம் இதுகுறித்து கூறுகிறாள். என்ன நடந்தாலும் தேவி இந்த வீட்டை விட்டு போனால் சரிதான் என அவளும் அமைதியா இருக்கிறாள். தேவியின் கணவன் விக்னேஷ் சட்டையைப் போட்டுக் கொண்டு தேவி முன் வந்த அக்கா அக்கா என்று சீண்ட ஆரம்பிக்கிறாள் உமா. இது மாமா சட்டை அது எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று தேவி சொல்ல, அதுக்கு எனக்கு உரிமை இருக்கு என்று உமா சொல்கிறாள். சட்டையைப் பிடித்து உலுப்ப சட்டை கிழிஞ்சி போகிறது. உடனடியாக விக்னேஷின் அம்மா வந்து பிரச்னையை தொடங்குகிறாள். நடந்ததைக் கூறுகிறாள் உமா.

தேவியின் கணவன் விக்னேஷ் அப்போது அங்கு வருகிறான். விஷயத்தை கேட்கிறான். விக்னேஷிடம் தேவி பற்றி ஒன்னுக்கு ரெண்டாக மூட்டி விடுகிறாள் உமா. இந்த வாக்குவாதம் பயங்கர சண்டையில் முடிகிறது. கோபித்துக் கொண்டு சாப்பிடாமல் வேலைக்கு சென்று விடுகிறான் விக்னேஷ். இதனால் கவலையில் இருக்கிறாள் தேவி.

மூர்த்தி சரக்கு வாங்க நண்பனிடம் சொல்கிறான். சரக்கு வாங்கிக் கொண்டு வந்துவிட்டு இந்த பழக்கத்த விட சொல்லி கேட்டா, நீங்க என்ன ஆசானே திரும்ப திரும்ப சரக்கு வாங்கிட்ட வர சொல்ற என்று கேட்க, அது தான் குடிப்பதற்காக அல்ல, சூர்யாவுக்கு கொடுத்து அவனை உண்மையை உளர வைக்கலாம் என்று சொல்கிறான். இவனது திட்டப்படி சூர்யாவுக்கு சரக்கை ஊற்றிக் கொடுக்கப் போகிறார்கள்.  

Full View


கயல் நேற்று எபிசோட் | Kayal serial yesterday episode youtube 12th June 2023

கயல் தொடரின் நேற்றைய எபிசோடில் கயல் சோகத்துடனும் கோபத்துடனும் அமைதியாக அமர்ந்திருக்க அங்கே அவளது அம்மா வந்து நிலைமையை விசாரிக்கிறார். கயல் கயல் என இருமுறை கூப்பிட்டு, நான் ஒன்னு கேட்டா நீ தப்பா எடுத்துக்க மாட்டியே.. பொய் சொல்லாம உண்மையை சொல்லுப்பா என அந்த பையன் கால்ல விழாத குறையாக கேட்டுட்டேன் ஆனா அத அவ்ளோ உறுதியா சொல்றான். நீ எதுவும் எங்ககிட்ட மறைக்கலல என்கிறார் அம்மா.

இதனால் ஷாக் ஆன கயல், அம்மா இப்படி கேட்டதும் என்ன நம்பலல. நீ இப்படி ஒரு கேள்விய கேட்ப என நான் நினைக்கவே இல்ல. என்ன முழுசா நம்ப வேண்டிய நீயே இப்படி கேட்டத நினச்சி எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு. அவனால ஏற்கனவே நான் ரொம்ப நொந்து போயிருக்கேன். அத விட அதிகமா நோகடிக்காதீங்கமா.. என்று கூற, அம்மாவ மன்னிச்சுடுமா நான் கேட்ட விதம் தப்பா இருக்கலாம் உன் மேல இருக்குற அக்கறைல நான் தப்பா கேட்டுட்டேன் இவ்வாறு இருவரும் இந்த நாடக விசயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

எல்லா இடங்களிலும் உன்னையும் இந்த பையனையும் சேர்த்து வச்சி பேசிட்டு இருக்காங்க. கேக்கவே கஷ்டமா இருக்கு. இதனால உன் வாழ்க்கையே மோசமாயிடும்போல இருக்கு என்று கூறி அழ ஆரம்பிக்கிறார். அவரை கயல் சமாதானம் செய்து இந்த விசயத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறுகிறாள் கயல்.

அந்த நேரத்தில் கயலுக்கு ஒரு கால் வருகிறது. அட்டென்ட் செய்து பேசும்போது அது எழில் என்பது தெரியவருகிறது. இன்னும் அந்த பொறுக்கி ராஷ்கல் உங்க வீட்லதான் இருக்கானா என்று கேட்கிறான் எழில். தான் கமிஷனரிடம் பேசி அவனை முடிச்சிக்கட்டுவதாக கேட்க, அதற்கு என் மானம் போயிடும் நிறைய பேருக்கு தெரிஞ்சிடிச்சு. இது வேற மாதிரிதான் டீல் பண்ணனும். சூர்யாவோட ஒட்டுமொத்த பின்புலத்த கண்டுபிடிக்கனும்னு கூற அதன்பிறகு எழில் ஃபோனை வைக்கிறார்.

சோகத்தில் இருந்த கயல், அவரது மருத்துவரை தான் அப்பா ஸ்தானத்தில் வைத்திருக்கும் மருத்துவரிடம் சூர்யா பற்றி தெரிவிக்க, அதனை வில்லன் டாக்டர் கௌதம் ஒட்டு கேட்கிறான். சூர்யா தன்னை ஒருமுறைதான் பார்த்து பேசியிருப்பதாகவும், இப்போது தன்னை திருமணம் செய்துவிட்டதாக கூறி பிரச்னை பண்ணிக் கொண்டு இருப்பதாகவும் கூறுகிறாள். இந்த விசயத்தை சரியான முடிவு எடுக்க முடியாமல் திணறுவதாக கூறுகிறாள். சூர்யாவின் பேக்ரவுண்ட்டை செக் செய்வதாக மருத்துவர் டீன் கூறுகிறார். கௌதமை அழைக்க டீன் முடிவு செய்ய , கௌதம் மகிழ்ச்சியடைகிறான். கௌதமுக்கு டீன் கால் செய்கிறார்.

சூர்யாவைப் பற்றிய தகவல்களைத் திரட்டி தனக்கு தருமாறு டீன் கேட்க, கௌதமும் சரி ஓகே பண்ணித் தரேன் என்று தெரிவிக்கிறார். ஆனால் இது கயலுக்கான உதவி என்பது தெரிந்து இதனை வைத்து கேம் ஆட முடிவு செய்கிறான். கயலுக்கு சூர்யாவைப் பற்றி எதுவும் தெரியாமல் அவள் கன்பியூஸாகவே இருக்க வேண்டும் என்று திட்டமிடுகிறான். தகவல்களை எடுத்துக் கொண்டு வந்து டீனிடம் கொடுக்க, அவனைப் போக சொல்கிறார் டீன். பின் சூர்ய பிரகாஷ் முகவரியை கயலுக்கு சொல்லி, இவன் யாரு என்ன என விசாரிக்க சொல்கிறார் டாக்டர்.

எழிலுடன் சேர்ந்து கயல் இந்த முகவரிக்குச் சென்று சூர்யாவைப் பற்றி விசாரிக்கிறார். அங்கே ஒரு பாட்டி இருக்கிறார். அவரிடம் எழில் உங்க பேரன் தப்பானவர் என்று சொல்ல, அந்த பாட்டி கோபப்படுகிறார். பின் நடந்த அனைத்தையும் கூறுகிறான் எழில். ஆனால் முகவரி மாறிவிட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டுவிட்டு இருவரும் வெளியே செல்கிறார்கள்.

முகவரி மாறியதில் டாக்டர் கௌதம் வேலை இருப்பதை அறியாமல், லிஸ்ட்டில் இருக்கும் இன்னொரு சூர்யாவைத் தேடி செல்கிறார்கள் இருவரும். அங்கு வீட்டில் ஆளே இல்லை என்பதால் ஷாக் அடைகிறார்கள். விரைவில் அவனைக் கண்டுபிடிப்போம் என்று கூறிவிட்டு எழில் கயலை அழைத்துச் செல்கிறான்.

மூர்த்தி மீண்டும் குடிப்பழக்கத்தை கையிலெடுக்கிறான். குடிக்கமாட்டோம் என்று கூறிவிட்டு மனதில் கஷ்டம் இருப்பதாக கூறி குடிக்கிறான் மூர்த்தி. தங்கையைப் பற்றி எல்லாரும் தப்பா நினைப்பாங்க பேசுவாங்க என மொடாக்குடி குடிக்கிறான் மூர்த்தி. தடுப்பவனை அடிக்கிறான். அங்கு குடித்துக் கொண்டிருப்பவனை போட்டு பொளக்கிறான். இதனால் பாரில் சண்டை நிகழ்கிறது. பாட்டிலை எடுத்து மண்டையைப் பொளக்கிறான் மூர்த்தி.

கயல் நாளைய எபிசோட் | Kayal serial tomorrow episode youtube 14th June 2023

பெரியப்பா தர்மலிங்கம் தனது மகள் கல்யாணம் நடக்கவேண்டும் என மூர்த்தியின் குழந்தையைக் கடத்திவிட்டு மொத்த குடும்பத்தையும் அல்லல்பட வைக்கிறார். அந்த சயமத்தில் பந்தக்கால் சரிந்து விழுந்து அனைவருக்கும் அதிர்ச்சியைக் கொடுக்கிறது.

Tags:    

Similar News