தலைகீழாக மாறிய கதை...! தீபிகாவுடன் செல்லும் எழில்...!
கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;
கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow
கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.
கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள். வாட்ஸ்அப்பில் இணைய
கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update
கயல் மருத்துவமனைக்கு கிளம்பிக்கொண்டிருக்கிறாள். அவளுக்கு காப்பி போட்டு கொடுக்கிறாள் அம்மா. அவர்கள் மனோஜ் குறித்து பேசுகிறார்கள். அவன் செய்த செயலும் கயல் செய்ததையும் கூறி அடுத்து அத்தை என்ன செய்தார் என அடுத்தடுத்து அனைத்தையும் பேசுகிறார் கயல்.
ஆனந்தி, எழில் - கயல் கல்யாணத்தைப் பற்றி பேசுகிறார். தன் தோழியிடம் இந்த கல்யாணம் மிகப் பிரம்மாண்டமாக நடைபெறும் எனவும், ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என குதூகலமாக இருக்கப்போகிறது என்கிறார். எழில் மாமா செலவு பத்தி யோசிக்க வேண்டாம் என சொல்லி, ஆனந்தி மெகந்தி ஆர்ட்டிஸ்ட் குறித்து ஆன்லைனில் தேடி அனைத்தையும் கயலிடம் ஜாலியாக பேச, கயல் கோபப்படுகிறாள்.
ஆனந்தி கல்லூரி செல்லவும், அன்பு டிரெய்னிங் செல்லவும் வேண்டாம் என மூர்த்தி சொன்னதாக சொல்ல, மூர்த்தி மீதே கோபப்படுகிறாள் கயல். இது எல்லாம் அவரின் பெரியப்பா செய்த சதி என்பதை மனதில் நினைக்கிறார் மூர்த்தி. தம்பி தங்கைகளுக்காக பேசுகிறாள் கயல். இப்படி அனைவரும் வாக்குவாதம் செய்கிறார்கள்.
கயலுக்கு கல்யாணம் நடக்கணும்னா ஆனந்தி கல்லூரிக்கும் அன்பு போலீஸ் டிரெய்னிங்குக்கும் போகக் கூடாது என சொல்லி வைத்திருக்கிறார். ஆனால் கயலுக்கு இது தெரியாது. இந்த விசயத்தை அறியாமல் பேசினாலும் கயல் கல்வியும் வேலைவாய்ப்பும் ஒரு ஏழை குடும்பத்துக்கு நிச்சயமாக தேவைப்படும் கருவி. அதுதான் முக்கியம் என்று கூறுகிறாள் கயல்.
அன்பு போலீஸ் ஆகணும் ஆனந்தி மருத்துவம் படிக்கணும் அவள் மருத்துவராக வந்து நிற்கணும். நா அவள வாங்க மேடம்னு விஷ் பண்ணனும் என கயல் சொல்ல, ஆனந்தி நிச்சயமாக நான் பெரிய டாக்டர் ஆகிடுவேன்னு சொல்றா ஆனந்தி சொல்றா. ஆனால் கயல் எரிச்சலடைகிறாள்.
கோபத்தில் இந்த கல்யாணமே நடக்கலன்னா என்ன பண்ணுவீங்க என்று சொல்ல, அனைவரும் அதிர்ச்சியடைந்து கோபப்படுகிறார்கள். கயலை வேலைக்கு போகக்கூடாது என்று கூறுகிறான் மூர்த்தி. கல்யாணம் ஆகப் போகுது நீ ஏன் வேலைக்கு போற என்று மூர்த்தி வற்புறுத்த, கயலோ மனதில் எழிலை கல்யாணம் பண்ணிக்க மாட்டேன் என்று எப்படி சொல்ல என்று மனதில் யோசிக்கிறாள் கயல்.
எழில் வீடு
எழில் வீட்டுக்கு தீபிகா வருகை தருகிறாள். அவளைப் பார்த்ததும் ஆனந்தமடைந்து எழிலின் அம்மா உள்ளே அழைக்கிறாள். அவளின் அழகை வர்ணிக்க இவள் அத்தையை புகழ என ஆரம்பிக்கிறது. நம்ம பிளான் படி எல்லாம் நல்லா போயிட்டு இருக்கா என சிவசங்கரி சொல்ல, அதற்கு தீபிகா சிறப்பாக நடைபெறுகிறது என்று சொல்கிறாள் தீபிகா. இருவரும் எழில் குறித்தும் கல்யாண ஏற்பாடுகள் குறித்தும் பேசுகிறார்கள்.
எழிலிடம் ப்ரீ வெட்டிங் சூட் பத்தி சொல்ல தீபிகா வருகிறாள். எழிலுடன் கூடவே இருந்து காரியம் சாதிக்க நினைக்கிறாள் தீபிகா. நீ யாரு உன் பேக்ரவுண்ட் என்ன என்று எழிலுக்கு தெரியவே கூடாது எனவும், எழிலை கயலிடமிருந்து பிரித்து, அவனை நீ அடைய வேண்டும் என்று சொல்கிறாள். அந்த நேரத்தில் சிவசங்கரியின் கணவன் வர, சந்தேகத்துடன் கேள்வி கேட்கிறான்.
சிவசங்கரியும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறாள். ஆனால் அவருக்கு கொஞ்சம் கடுப்பாக இருக்கிறது அதீத சந்தேகமும் எழுகிறது. தீபிகா எழிலை சந்திக்க மேலே அவன் ரூமுக்கு செல்கிறாள். அந்த நேரத்தில் எழில் அங்கே அலமாரியில் ஏதோ செய்துகொண்டிருக்க, சர்ப்ரைஸ் கொடுக்க வந்து நிற்கிறேன் என்று சொல்கிறாள்.
ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் செய்ய நான் காஸ்ட்யூம் கொண்டு வந்திருக்கிறேன் என சொல்லி, உங்களுக்கு ப்ளூ கலர் தான பிடிக்கும் கயல் சொல்லியிருப்பதாகவும், அவர்தான் இந்த வீட்டு அட்ரஸையும் கொடுத்தார் எனவும் கூறுகிறாள் தீபிகா.
கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode
சிம்ப்ளா இருந்தாலும் நல்லா இருக்கு. எனக்கு ப்ளூ பிடிக்கும் ஓகே ஆனா கயலுக்கு என்ன ஐடியா இருக்குன்னு தெரியலையே என கயலுக்கு கால் செய்கிறான் எழில். கயல் ஃபோன் ரிங் ஆனாலும் அதை அவள் எடுக்கவில்லை. அவள் பிஸியாக இருப்பதாக கூறுகிறான் எழில். கயலுக்கான டிரெஸ் எங்கே என்று கேட்க, அது ஆஃபீஸ்ல இருந்து பிக்கப் பண்ணிக்கலாம் என்று சொல்லிவிட்டு இருவரும் மாடியிலிருந்து இறங்கி வருகிறார்கள்
இந்த ஜோடி பொருத்தத்த பாக்கும் போது நம்ம கண்ணே பட்டுடும் போல என சிவசங்கிரி மெச்சுகிறார். எழில் தன் அப்பாவையும் கூப்பிட அவர் வரவில்லை என்று சொல்லிவிடுகிறார். ஆனாலும் அவருக்கு ஏதோ சந்தேகம் இருப்பது தெரிகிறது.
ஆஸ்பத்திரியில் கயல், ஏதோ நினைவில் தன் இருக்கைக்கு வந்து அமர்கிறாள். அவளது தோழி கீதா, எழிலிடம் பேசுனியா எழிலதான கட்டிக்கபோற, குழப்பத்துல இருக்கியா என மீண்டும் கேட்டு, எழில் கிட்ட பேசு அவருகிட்ட உன் மனசுல இருக்குறத சொல்லு அதுக்கப்றம் என்ன பண்ணலாம்னு அவரே சொல்லுவாரு. இது கடவுள் போட்ட முடிச்சி என சொல்கிறாள் கீதா.
ஆனால் மீண்டும் கயல் அந்த ஜாதகத்தை கட்டிக்கொண்டே அழுகிறாள். கீதா எரிச்சலடைந்து திட்டுகிறாள். பின் ஒரு கேம் ஆடலாம் என்று சொல்லி, கண்ணை மூடச் சொல்கிறாள். கண்ணை மூடும்போது எழில் கண் முன்னாடி வந்து நிற்பாரு என்று சொல்கிறாள் கீதா.
கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update
அது எப்படி நடக்கும்னு சொல்றா கயல். ஆனால் கீதா அதனை செய்ய சொல்லி நிர்பந்திக்கிறாள். கயல் கண்ணை மூடிக்கொண்டு அதனை செய்து பார்க்க நினைக்கிறாள். அந்த நேரத்தில் அங்கு வந்து இறங்குகிறான் எழில். உடன் தீபிகாவும் வருகிறாள். மருத்துவமனைக்குள் சென்று நேரடியாக கயலை சென்று பார்க்க லிப்டில் ஏறி செல்கிறான். பின்னாடியே தீபிகாவும் செல்கிறாள்.
சரியாக கயல் கண்ணைத் திறக்கவும், அங்கு எழில் கியூட்டாக வந்து நிற்கிறான். சொல்லி வைத்தார்போல எழில் வந்தது எப்படி என் கீதாவே அதிர்கிறாள். கயல் ஆச்சர்யத்தில் வியந்து நிற்க, கொஞ்ச நேர சந்தோஷத்துக்குள்ளாகவே தீபிகா அங்கு வருகிறாள். எழிலும் தீபிகாவை அங்கு வரச் சொல்கிறான். இன்று மாலை ப்ரீ வெட்டிங் ஃபோட்டோ ஷூட் நடத்த ஏற்பாடு நடக்கிறது.
தீபிகா பூசி மொழுகி எழிலை கட்டிக்கபோற பொண்ணுக்கும் எழிலுக்கும் ப்ரீ வெட்டிங் சூட் என்று சொல்ல அவள் வியந்து நிற்க, எழில் கயல் என்று சொல்லுங்க என சொல்கிறான்.
கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial today update
உன் அத்தை தீபிகாவ இன்ட்ரோ பண்ணாங்கள்ல. அப்ப இருந்து இப்ப வர எல்லாமே சரியாதான போயிட்டு இருக்கு. உன் அத்த பயனாவே இருந்தாலும் அவன் பண்ண தப்ப தைரியமா தட்டி கேட்குறேல. அதேமாதிரி எழிலதான் கல்யாணம் பண்ணிப்பேன்னு சொல்லு.
அவங்க சதிய முறியடிச்சி எழில கல்யாணம் பண்ணிக்க என்ன வழினு பாரு.
அடுத்தவங்களுக்கு பிரச்னைனா ஓடி போயி நிக்குறேல்ல. ஆனா உன் வாழ்க்கைல ஒரு பிரச்னைனா அத விட்டுடுற. அப்ப அட்வைஸ்லாம் ஊருக்கு மட்டும்தானா?
எல்லாரையும் வாழ வச்சிட்டு நீ மட்டும் ஏன் காலத்துக்கு அழுற. ஜாதகத்துக்கு பயந்து உன் வாழ்க்கையையே முடிச்சிக்குற ஒரு பிரண்டா அத என்னால பாத்துக்கிட்டு இருக்க முடியல. உன் தம்பி தங்கைங்க வாழ்க்கைக்கு நீ தேவைன்ற மாதிரி உன் வாழ்க்கை நல்லா இருக்கணும்னா அதுக்கு எழில் தேவ.
உன்னோட உணர்வுக்கு அவங்க மதிப்பு குடுக்குறாங்கல்ல. அது மாதிரி நீயும் அவங்க உணர்வுக்கு மதிப்பு குடுக்கணும்ல. என் பொண்ணோட கல்யாணம் நல்லபடியா நடந்து முடியணும்னு நினைக்குற அந்த அப்பாவி காமாட்சியம்மா ஆசையில மண்ணள்ளி போட்டுறாத.
எனக்கும் நிறைய ஆசை இருக்குடி. எழிலோட மனைவியா வீடு நிறைய குழந்தைங்கள பெத்துக்கிட்டு எங்க அம்மாவோட கண் முன்னாடி நல்லபடியா வாழணும்னு நிறைய ஆசை இருந்துது. ஆனா என்ன கல்யாணம் பண்ணா எழிலோட அவனோட உயிரே போகும்னு ஜாதகத்துல இருக்கும்போது நா எப்படி அவன கல்யாணம் பண்ணிக்கமுடியும் சொல்லு. நா உயிருக்கு உயிரா காதலிச்சவன் நல்லபடியா வாழணும்னா நான் அவன விட்டு விலகணும் என்று சொல்லி கயல் அழ ஆரம்பிக்கிறாள்.
அந்த நேரத்தில் மூர்த்தியும் அன்புவும் கயல் அழுவதைப் பார்த்துவிட்டு ஓடி வருகிறார்கள். கயல் அந்த அடிபட்டவரின் மனைவி, மகளை பார்த்து அழுவதாக சமாளிக்கிறாள். தங்கள் அப்பாவையும் யாராவது காப்பாத்தியிருந்தால் நாமளும் இந்த கஷ்டம் பட்டிருக்கமாட்டோம்ல என்று சொல்லி சமாளிக்கிறாள்.
ஜெயிலில் மனோஜை போலிஸ் வெளுத்து வாங்கியிருக்கிறது. ராஜியின் வழக்கறிஞர் போலீஸை மிரட்டுகிறார். மனோஜை வெளியில் விடச் சொல்லி வற்புறுத்துகிறார். அதற்கு போலீஸ் முடியாது என்று சொல்லி குறைந்தது 5 வருசமாச்சும் அவன் கம்பி எண்ணனும் என்கிறார், அந்த நேரத்தில் கமிஷனர் நேரடியாக போலீஸ் ஸ்டேசனுக்கே வருகை தருகிறார்.
வேக வேகமாக வரும் கமிஷனர் ராஜியிடம் தான் இன்ஸ்பெக்டரிடம் பேசிவிட்டு வருகிறேன் என்று நேரடியாக அவரது இருக்கையில் சென்று அமர்கிறார். அங்கே போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் என்ன விசயம் என்று கேட்க அவரோ நடந்த விசயங்களைக் கூறுகிறார். அதோடு நில்லாமல் ஆதாரமாக மனோஜ் குடித்துவிட்டு ரேஸ் ஓட்டும் வீடியோவையும் காண்பிக்க, கமிஷனர் கோபப்படுகிறார்.
ராஜியிடம் என்னம்மா உங்கள நம்பி வந்தேன். உங்களுக்கு உதவலாம்னு வந்த என்கிட்ட கூட நீங்க உண்மைய சொல்லலியே. என்னம்மா நீங்க என்று சொல்ல, தன் பையன் பண்ணது தப்பே இல்லை என்று ராஜி சொன்னதைக் கேட்ட கமிஷனர் அவரிடம் தன் வருத்தத்தை தெரிவிக்கிறார்.
சமூகத்தில் பெரிய ஆளாக இருந்துக்கிட்டு நீங்களே பண்ணறது சரியா என்று சொல்லி கோபப்படுகிறார். இப்ப உங்களுக்கு உதவலாமா வேண்டாமான்னு யோசிக்குற சூழ்நிலைக்கு கொண்டு வந்து விட்டுட்டீங்களே என்று கூறுகிறார்.
ஸாரி சார் என் பையனுக்கு குடிக்கிற பழக்கமே இல்ல. பிரண்ட்ஸ் கம்பல் பண்றதாலதான் குடிச்சிருக்கான் என்கிறாள் ராஜி. ஆனால் இன்ஸ்பெக்டர் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றிவிட்டார். மனோஜ் தினமும் குடித்துவிட்டு ரேஸ் ஓட்டுகிறான். இதனால் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இவன் பெரிய இடம் என யாருமே கம்ப்ளைண்ட் குடுக்கு வரமாட்டேங்கிறாங்க. இப்ப மட்டும் மன்னிச்சி விட்டோம்னா அது நம்ம சமூகத்துக்கு தர்ற தண்டனை. இவன் ஒரு ஆள் இல்ல இவனுக்கு பின்னாடி ஒரு கேங்க்கே இருக்கு.
கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode
நைட்டு ஆனா போதும் குடிச்சிட்டு பைக்கு கார்னு ரேஸ் போறாங்க. நைட்டு வேலைக்கு போயிட்டு வர்றவங்கள்லாம் பாதுகாப்பு இல்லாம பயந்து பயந்து போறாங்க. மக்கள் பாதுகாப்பா இருக்க இவன சிவியரா பனிஸ் பண்ணனும் என்கிறார் இன்ஸ்பெக்டர். இதனால் ராஜி அதிர்ச்சியடைகிறார்.
அவன் மேல கேஸ் பைல் பண்ணா அவன் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என்கிறாள் ராஜி. அப்போது கயல் உள்ளே வருகிறாள். ஆனா ஆகிட்டு போகட்டும் என்று சொல்லி அதிரடி காட்டுகிறார்.
தனக்கு இவர் மேல் எந்த வன்மமும் இல்லை. குடிச்சிட்டு கார் ஓட்டி கூலித் தொழிலாளி மேல கார ஏத்தி கால உடச்சி ஆஸ்பிட்டல்ல படுக்க வச்சிட்டான். ஆனா அந்த ஆஸ்பத்திரி செலவுக்கு கூட காசு தரல. மரியாதையில்லாம தரக்குறைவா பேசினான் என்று கயல் சொல்லி எல்லாவற்றையும் போட்டு உடைக்கிறாள்.
உங்க பையன் பண்ண பாவத்துக்கு இந்த அப்பாவி குழந்தையும் தாயும் கஷ்டப்படணுமா என்று சொல்லி வாயை அடைக்கிறாள் கயல். இதனால் கமிஷனருக்கு என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நஷ்ட ஈடு கேட்டு போராடுகிறாள் கயல். ஒருவேளை ஒத்துவரவில்லை என்றால் நான் கோர்ட்டுக்கு போவேன் என்கிறாள் கயல்.
ஆனால் ராஜி கயலை நம்பவே இல்லை. அவள் தன் சுயலாபத்துக்காகவே இதை செய்வதாக ராஜி கருதுகிறாள். அதை வெளிப்படையாகவே சொல்கிறாள். இருவரும் வாய் வார்த்தையில் மோதிக்கொள்கிறார்கள். கயல் எவ்வளவோ சொல்லியும் ராஜி அதனை காது கொடுத்து கேட்காமல் ஈகோவில் இருக்கிறாள்.
கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update
மொத்தம் 5 லட்சம் ரூபாய் கொடுத்தால் நான் இந்த கேஸை வாபஸ் வாங்கிக்கிறேன் என்று சொல்கிறாள்.
ஒருவழியாக கமிஷனர் ராஜியை அழைத்து தனியே பேசவேண்டும் என்கிறார்.
ஒரு வழியாக ராஜி பணம் தருவதாக வேண்டா வெறுப்பாய் கொடுக்கிறாள். ஆனால் அதை கூலித் தொழிலாளியின் மனைவி வேண்டாம் என மறுக்கிறாள்.
கயல் அவரிடம் பேசி ஒருவழியாக பணத்தைப் பெற்றுக் கொடுக்கிறார். வீட்டுக்காரர் அனுபவிச்ச கொடுமையான வலிக்கு நஷ்ட ஈடு இது வாங்கிக்கோங்க என்கிறாள் கயல். அதை பெற்றுக்கொண்டு திரும்புகிறாள் கூலித் தொழிலாளியின் மனைவி. ஆனால் ராஜி வன்மத்துடனேயே செல்கிறாள்.