கயல் எடுக்கும் அதிரடி முடிவு! கொலைவெறியில் இருக்கும் ராஜி!

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;

Update: 2024-07-20 07:02 GMT

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

Full View

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.  வாட்ஸ்அப்பில் இணைய 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

கயலும் அவளது தோழியும் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டியா, உங்க அத்த என்ன சொன்னாங்க என கயலின் தோழி கேட்க, அவங்க என்கூட மல்லுக்கட்டுறதா நினைக்குறாங்க. அவங்க காசு தர சம்மதிக்கல என்கிறாள் கயல். அந்த நேரம் கயல் ஒருவருக்கு கால் செய்கிறார். அவரும் வீட்டில் இல்லை என பொய் சொல்லி போனை வைத்துவிடுகிறார்.

கயல் யாரிடம் பணம் கேட்கலாம் என யோசித்துக்கொண்டிருக்கிறாள் கயல். தோழியும் ஒரு யோசனை சொல்வதாக கூறி, எழிலுக்கு கால் செய்ய சொல்கிறார். ஒரு குடும்பத்த காப்பாத்த பணம் வேணும்னு கேளு, எழில் ஓடோடி வருவார். ஆனா கயல் அவன்கிட்ட இத பத்த பேசவேண்டாம். அதுக்கு காரணம் என சில விசயங்களையும் சொல்கிறார். இனிமே எந்த காரணத்துக்காகவும் எழிலுக்கு கால் செய்யமாட்டேன் என்கிறார்.

எழிலை விட்டு தூரம் போகணும்னு நினைக்கிறேன். அப்படி இருக்கும்போது கடைசியாக நான் காச வாங்கிட்டு விலகிட்டா எழில் அம்மா சொல்றமாதிரி நான் எழில்கிட்ட காசுக்காக அவன் கிட்ட பழகுன மாதிரி ஆகிடும். அந்த நேரம் பார்த்து ஒரு கால் வர, பாத்தீயா மணி கூட அடிக்குது என்கிறாள் தோழி. அந்த காலில் வந்தது எழில்தான். ஆனா தான் உண்மையாக நேசிக்கும் எழிலை ஏமாற்ற விரும்பவில்லை என்று சொல்லி கால் எடுக்காமல் இருக்கிறாள் கயல்.

எழில் இந்த நேரத்தில் கால் செய்தால் அது அக்கறையாக பேசத்தான் இருக்கும். எனக்காகவே காத்திருக்கும் எழிலை கல்யாணம் பண்ணிக்கிறேன்னு சொல்லி ஏமாத்த போறேன். ஒருநாளாவது எழிலோட மனைவியா வாழ்ந்துட்டு செத்து போயிட்டா கூட நிம்மதியா இருக்கும். ஆனா அவன கல்யாணமே பண்ணமுடியாத சிட்டிவேசன்ல இருக்கும்போது அழறதுதான் ஒரே வழி. நான் எழில விட்டு தூரம் போறதுதான் நல்லது. என் குடும்பத்துக்காக வாழ்ந்துட்டு போயிடுறேன்.

கயல் மூர்த்திக்கு கால் செய்து அவனிடம் உதவி கேட்கிறாள். கல்யாணத்துக்கு சீட்டு போட்டு நகை வாங்கி வைத்துள்ளதை குறிப்பிட்ட அந்த நகையை எடுத்துக்கொண்டு மருத்துவமனைக்கு வரச் சொல்கிறாள். நடந்ததை கூறி அந்த பணத்தை எடுத்துக்கொண்டு வரச் சொல்கிறாள். முன்பணம் கட்டி ஆபரேசன் பண்ண அந்த குடும்பத்துக்கு வழி இல்ல. அத்தைக்கிட்ட பேசரதுக்கும் நேரம் இல்ல. அவங்கட்ட ஏற்கனவே பேசுனதயும் சொல்லி பணத்தை எடுத்து வரச் சொல்கிறாள் கயல்.

நகைக் கொடுக்க யோசிக்கிறார் அம்மா. ஆனால் அது நகைக்கானது அல்ல, ராஜிக்கும் கயலுக்கும் இருக்கும் சண்டையைப் பற்றி கவலைப் படுகிறார். இதனால் கயலின் தங்கை ஆனந்தியும் கோபப்படுகிறார். மூர்த்தி அவர்களை சமாளித்துவிட்டு நகையை எடுத்துக்கொண்டு ஹாஸ்பிடலுக்கு வந்து சேர்கிறான். அங்கு அன்புவும் கயலும் பதற்றத்தில் இருக்கிறார்கள். மூர்த்தி கயலிடம் நகையைக் கொடுக்கிறார்.

கயல் நகையை பில் கவுண்டரில் கொடுத்து பில் போடச் சொல்ல, அந்த ரசீதை வைத்து சர்ஜரி தொடங்க சொல்கிறாள் கயல். எல்லாமே தயாரான நிலையில், அடிபட்டவருக்கு ஆபரேசனை தொடங்குகிறார்கள். இதனால் கௌதம் பொதுமுகிறான். 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

ஆபரேசன் தொடங்கி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. வெளியில் அன்பு, மூர்த்தி, கயல் உள்ளிட்டோர் காத்திருக்கின்றனர். வெற்றிகரமாக சிகிச்சை முடிந்து அவரால் நடக்க முடியும் எனவும் 2,3 மாதங்களில் அவரால் பழையபடி நடக்க முடியும் என்று மருத்துவர் கூறிவிட்டு செல்கிறார். ஜெனரல் வார்டுக்கு மாற்றியதும் மகளும் மனைவியும் ஓடோடி வந்து அவரைப் பார்க்கின்றனர்.

கயலையும் அவளது தம்பி அன்புவையும் அந்த குடும்பம் பாராட்டுகிறது. கயலும் பெருந்தன்மையுடன் வெளியில் நடந்து செல்கிறார். அவளது தோழி கீதா பின்னாடி சென்று ஓடி போய் கட்டி அணைத்து அவளை பாராட்டுகிறாள். இந்தமாதிரி தங்கமான பொண்ணு வாழ்க்கைத் துணையாய் கிடைக்க எழில்தான் குடுத்து வச்சிருக்கணும் என்று கூறுகிறாள் கீதா. அந்த நேரத்தில் பாதிக்கப்பட்டவரின் மனைவி இதனை கேட்டுவிட்டாள். கல்யாணத்துக்கு வைத்திருந்த நகையை வைத்தா என் கணவரை காப்பாத்தின என்று கேட்டுவிட்டு, நீ நிச்சயமான பையனை கல்யாணம் செஞ்சிக்கிட்டு நல்லபடியா 100 வருசம் வாழ்வ என்று வாழ்த்துகிறாள். அதனைக் கேட்டதும் மீண்டும் சோகத்துக்குள் மூழ்குகிறாள் கயல்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

கயலுக்குள் மீண்டும் சோகக்குரல் கேட்கத் தொடங்குகிறது. தீர்க்கசுமங்கலியாக குழந்தைகுட்டியெல்லாம் பெத்துக்கிட்டு வாழ்க்கைல எந்த குறையும் இல்லாம நீ ஆசப்பட்டதெல்லாம் அடைஞ்சி சந்தோஷமாக வாழ்வ என்று கூறுகிறாள். அதற்கு எனக்கு அந்த குடுப்பண இருக்கா என்று தெரியவில்ல என்கிறாள் கயல். அப்படியே இருவரும் கயலின் சீட்டுக்கு வருகிறார்கள்.

அவங்க சந்தோஷமா வாழ்த்திருக்காங்க. அவங்க வாழ்த்து பலிக்கும். உங்க சொந்த அத்தைய எதிர்த்துட்டு ஏழை குடும்பத்துக்காக நிக்குற பாரு நீ நல்லா இருப்ப. அந்த புண்ணியமே எழில உன் கூட சேர்த்து வைக்கும். ஜாதகம் செட் ஆகல உன் கல்யாணத்துக்கு உங்க அத்தையே தடையா வருவாங்க, இப்படி நிறைய கஷ்டங்கள் வரும் அதையெல்லாம் தாண்டி நீ எழில கல்யாணம் பண்ண நீ என்ன பண்ணனும்னு யோசி.

இந்த ஜென்மத்துல நான்தான் உங்க மருமகனு எழில் கையால தாலி கட்டிட்டு அவங்க முன்னாடி போயி நில்லு என்கிறாள் தோழி கீதா.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode

அப்பாங்குற ஒரு உறவு இல்லனு வச்சிக்கயேன். அந்த பாசத்துக்காக யார்கிட்டயும் பிச்சை எடுக்க கூடாது. இவங்ககிட்ட நம்ம அப்பாவ பாத்திடமாட்டோமா, இவங்ககிட்ட நம்ம அப்பாவோட பாசத்த பெற்றுடமாட்டோமா என ஏமாந்து நிக்க மாட்டோம். அப்பாங்குறது வெறும் உறவு மட்டுமில்ல. அது ஒரு பாதுகாப்பு.

பாத்தேல்ல பணம் இருந்தும் அத்த உதவமாட்டேன்றாங்க. அவங்க கௌரவம் குறஞ்சிடும். அப்பா இல்லாத ஆளு அண்ணன் தம்பினு கேக்க யாருமில்லனு சில மனுச மிருகங்க அந்த குழந்தையோட வாழ்க்கைய சீரழிச்சிடக்கூட வாய்ப்பிருக்கு என கயல் அன்புவிடம் கூறுகிறாள்.

அந்த குழந்தை அப்பா எப்ப வருவார்னு கேட்டுட்டே இருக்கு. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவங்களுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. உயிர காப்பாத்துற டாக்டர் நீங்களே தயங்கினா அவரு எப்படி குணமாவாரு. அவரோட உடல்நிலை தெரிஞ்சும் நீங்க ஏன் டாக்டர் அமைதியா இருக்கீங்க. இப்ப என்ன டாக்டர் பணம் தான கட்டணும். அவங்களால கட்டமுடியலனாலும் நான் எப்படியாச்சும் பணத்த ஏற்பாடு பண்ணி கட்டிடுறேன் என்கிறாள் கயல்.

கயல் - எந்த பிரச்னை வந்தாலும் நான் பாத்துக்கிடுறேன்.

அப்போது கயலை எதிரியாக நினைக்கும் டாக்டர் உள்ளே வருகிறான். என்ன நினச்சிட்டுருக்க நீ. மதர் தெரசாவா நீ. நீ பேரும் புகழும் வாங்க இலவசமா ட்ரீட்மெண்ட் பாக்க மாட்டுற நீ.

இருவரும் பணம் இல்லை எனவும், மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் பேச வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் கண்ணு முன்னாடி துடிச்சிட்டு இருக்குற ஏழைகள கொல்லாதீங்க அவங்கள காப்பாத்திடுங்க டாக்டர் என கெஞ்சுகிறார். ஆனால் அவரோ இதற்கு வாய்ப்பில்லை என்கிறார்.

ஏழைகளுக்கு வாரி கொடுக்க சமூக சேவை செய்யுற இடம் இல்ல. இது ஹாஸ்பிட்டல் இது பிசினஸ். இந்த பிசினஸ்க்குள்ள கயல் வரக்கூடாது. நீ ஒனர் கிடையாது. இங்க வேல செய்யுற ஒரு நர்ஸ். நாங்க சொல்றத மட்டும்தான் கேக்கணும். அத செய் இத செய்னு ரூல்ஸ்லாம் போடக்கூடாது என சொல்கிறான்.

அப்போது கயல் அவனிடம் கெஞ்சுகிறாள். கௌதம் எப்படியாச்சும் காப்பாத்துங்க என கெஞ்ச வைக்கிறேன் என்று மனதில் நினைக்கிறான். உயிர காப்பாத்துற தொழில நீங்க வெறும் பிசினஸ்ஸா பாக்குறீங்க. பிசினஸா இருந்தாலும் அதுல கொஞ்சம் மனிதாபிமானத்த காட்டுங்க என்று கயல் சொல்ல, அதற்கு அடாவடியாக பேசுகிறான் கௌதம்.

டாக்டரிடம் டீனோ நானோ சொல்லாமல கயல் சொல்ற பேசன்ட்டுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணக்கூடாது என உத்தரவிடுகிறான் கௌதம்.

கயல் நீங்க பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவருக்கு ஏற்கனவே பிளட் பிரஷர், சுகர் எல்லாம் எகிறிட்டு இருக்கு. கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா அவர காப்பாத்துறதே கஷ்டமாகிடும் என கூறும் கௌதம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வாங்க என்கிறான்.

காவல் நிலையத்தில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர், மனோஜை மிரட்டுகிறார். எங்கம்மா யார் தெரியுமா என மனோஜ் போலீஸையே மிரட்டபோலீஸ் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு மனோஜின் அம்மா, அப்பா இருவரும் வருகிறார்கள். உடன் கயலின் பெரியப்பா, பெரியம்மாவும் வருகிறார்கள்.

ராஜி போலிஸீடமே மரியாதையில்லாமல் நடந்துகொள்கிறார். இதனால் ராஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது. நான் யார்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க என ராஜி சொல்ல, அதற்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் முடிஞ்சத பண்ணுங்க உங்க பணத்திமிர இங்க காட்டாதீங்க என சொல்கிறார் இன்ஸ்பெக்டர். ராஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

ராஜி கோபத்தில் கொந்தளிக்க, ராஜியின் கணவர் கொஞ்சம் பொறுமையாக பேசுகிறார். நீங்க பண்ணது தப்பு என போலீஸையே கேட்க, அவர் மனோஜ் பண்ணது தப்பு இல்லையா. அவரால் ஒரு உயிர் ஊசலாடுகிறது. அவனுக்கு பணத்திமிர்ல கார்ல குடிச்சிட்டு போற வாரவன இடிச்சி சாகடிக்க நாங்க அமைதியா இருக்கணுமா. புள்ளைய ஒழுங்கா கண்டிச்சி வளக்க துப்பில்ல என போலீஸ் சொல்ல, ராஜி மேலும் மிரட்டுகிறாள்.

அடுத்து வக்கீலும் போலீஸும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நான் சொன்னா உங்களுக்கு புரியாது உங்களுக்கு புரிய வைக்குறேன் என ராஜி தனியாக செல்கிறாள்.

ராஜி கமிஷ்னர் மொபைலுக்கு மீண்டும் கால் செய்கிறாள். அப்போது சார் அர்ஜெண்ட் மீட்டிங்ல இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அடுத்து வேறொரு உயர் அதிகாரிக்கு கால் செய்கிறாள். அவர் என்ன தப்பு பண்ணார் என கேட்கிறார். அவர் இன்ஸ்பெக்டரிடம் போனை கொடுக்க சொல்கிறார்.

கமிஷ்னர் நடந்ததை சொல்லும் இன்ஸ்பக்டரின் பேச்சை கேட்கிறார். அவர் நேரடியாக கமிஷனர், ராஜியிடமே நடந்ததை கேட்கிறார். கமிஷனர் நேரில் வந்து நடந்ததை விசாரிக்கிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

கயலிடம் அவள் தோழி என்ன ஆச்சு கேட்கிறார். மணிமாறனை கவுதம் மிரட்டுகிறார். பணம் கட்டாமல் நிச்சயமாக ஆபரேசன் கிடையாது என்று கூறுகிறாள். இதனால் தன் அத்தைக்கு மீண்டும் ஒரு முறை கால் செய்ய நினைக்கிறாள் கயல். ஆனால் ராஜிக்கும் கயலுக்கும் மீண்டும் மோதல் ஆரம்பிக்கிறது.

கயல் போனில் கூப்பிட நீண்ட நேரம் கழித்து போனை அட்டெண்ட் செய்கிறாள். உங்க பையன் பண்ண தப்புக்கு நீங்க செய்ய வேண்டியத செய்யாம இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே என கேட்கிறாள் கயல்.

அத்த இங்க அந்த பேஷன்டோட கண்டிசன் ரொம்ப மோசமாக இருக்கு. அவருக்கு 1 லட்சம் ரூபாய் கட்டுனாதான் ஆபரேசன் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. அதுக்கு 5 லட்சம் ரூபாய் ஆகும்னு சொல்றாங்க. அத எல்லாத்தையும் நீங்கதான் பாத்துக்கணும் என சொல்ல, அதையெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லும்மா என பெரியப்பா சொல்கிறார்.

என்னடி என் பல்ஸ் பிடிச்சி பாக்குறீயா என ராஜி கேட்கிறாள். அதை மறுக்கிறாள் கயல். அதற்கு தரமுடியாது என்று சொல்கிறாள். என்னடி மிரட்டி பாக்குறியா. நீ வச்ச ஆளா நான். பணம் குடுக்க முடியல்லனா என்ன பண்ண முடியும். இந்த ராஜலட்சுமி சுயம்புடி. நீ என்ன எதுவும் பண்ண முடியாது என ராஜி சொல்ல, இந்த குடும்பத்தோட பாவம் உங்கள சும்மா விடாது. நீங்க அதுக்கு பிராயச்சித்தமா வந்து பணம் குடுங்க.

அதற்கு ராஜி நீ என்ன பழி வாங்குறல்ல. என்கூட போட்டி போட பாக்குறல்ல. யார் ஜெயிக்கிறான்னு பாக்கலாமா என்கிறாள்.

குடுக்கவே முடியாது என பிடிவாதமாக சொல்லிவிட்டு போனைக் கட் செய்துவிடுகிறாள் ராஜி. கயல் கவலையுடன் இருக்கிறாள். 

Tags:    

Similar News