ராஜிக்கு ஏற்பட்ட அவமானம்..! அதிர்ச்சி முடிவெடுத்த கயல்!

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;

Update: 2024-07-19 04:30 GMT

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

Full View

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.  வாட்ஸ்அப்பில் இணைய 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

அப்பாங்குற ஒரு உறவு இல்லனு வச்சிக்கயேன். அந்த பாசத்துக்காக யார்கிட்டயும் பிச்சை எடுக்க கூடாது. இவங்ககிட்ட நம்ம அப்பாவ பாத்திடமாட்டோமா, இவங்ககிட்ட நம்ம அப்பாவோட பாசத்த பெற்றுடமாட்டோமா என ஏமாந்து நிக்க மாட்டோம். அப்பாங்குறது வெறும் உறவு மட்டுமில்ல. அது ஒரு பாதுகாப்பு.

பாத்தேல்ல பணம் இருந்தும் அத்த உதவமாட்டேன்றாங்க. அவங்க கௌரவம் குறஞ்சிடும். அப்பா இல்லாத ஆளு அண்ணன் தம்பினு கேக்க யாருமில்லனு சில மனுச மிருகங்க அந்த குழந்தையோட வாழ்க்கைய சீரழிச்சிடக்கூட வாய்ப்பிருக்கு என கயல் அன்புவிடம் கூறுகிறாள்.

அந்த குழந்தை அப்பா எப்ப வருவார்னு கேட்டுட்டே இருக்கு. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி அவங்களுக்கு ட்ரீட்மெண்ட்டுக்கு ஏற்பாடு பண்ணுங்க. உயிர காப்பாத்துற டாக்டர் நீங்களே தயங்கினா அவரு எப்படி குணமாவாரு. அவரோட உடல்நிலை தெரிஞ்சும் நீங்க ஏன் டாக்டர் அமைதியா இருக்கீங்க. இப்ப என்ன டாக்டர் பணம் தான கட்டணும். அவங்களால கட்டமுடியலனாலும் நான் எப்படியாச்சும் பணத்த ஏற்பாடு பண்ணி கட்டிடுறேன் என்கிறாள் கயல்.

கயல் - எந்த பிரச்னை வந்தாலும் நான் பாத்துக்கிடுறேன்.

அப்போது கயலை எதிரியாக நினைக்கும் டாக்டர் உள்ளே வருகிறான். என்ன நினச்சிட்டுருக்க நீ. மதர் தெரசாவா நீ. நீ பேரும் புகழும் வாங்க இலவசமா ட்ரீட்மெண்ட் பாக்க மாட்டுற நீ.

இருவரும் பணம் இல்லை எனவும், மருத்துவர்கள் மனிதாபிமானத்துடன் பேச வேண்டும். ஏழைகளுக்கு உதவ வேண்டும் கண்ணு முன்னாடி துடிச்சிட்டு இருக்குற ஏழைகள கொல்லாதீங்க அவங்கள காப்பாத்திடுங்க டாக்டர் என கெஞ்சுகிறார். ஆனால் அவரோ இதற்கு வாய்ப்பில்லை என்கிறார்.

ஏழைகளுக்கு வாரி கொடுக்க சமூக சேவை செய்யுற இடம் இல்ல. இது ஹாஸ்பிட்டல் இது பிசினஸ். இந்த பிசினஸ்க்குள்ள கயல் வரக்கூடாது. நீ ஒனர் கிடையாது. இங்க வேல செய்யுற ஒரு நர்ஸ். நாங்க சொல்றத மட்டும்தான் கேக்கணும். அத செய் இத செய்னு ரூல்ஸ்லாம் போடக்கூடாது என சொல்கிறான்.

அப்போது கயல் அவனிடம் கெஞ்சுகிறாள். கௌதம் எப்படியாச்சும் காப்பாத்துங்க என கெஞ்ச வைக்கிறேன் என்று மனதில் நினைக்கிறான். உயிர காப்பாத்துற தொழில நீங்க வெறும் பிசினஸ்ஸா பாக்குறீங்க. பிசினஸா இருந்தாலும் அதுல கொஞ்சம் மனிதாபிமானத்த காட்டுங்க என்று கயல் சொல்ல, அதற்கு அடாவடியாக பேசுகிறான் கௌதம்.

டாக்டரிடம் டீனோ நானோ சொல்லாமல கயல் சொல்ற பேசன்ட்டுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணக்கூடாது என உத்தரவிடுகிறான் கௌதம்.

கயல் நீங்க பணத்துக்கு ஏற்பாடு பண்ணுங்க. அவருக்கு ஏற்கனவே பிளட் பிரஷர், சுகர் எல்லாம் எகிறிட்டு இருக்கு. கொஞ்சம் நேரம் ஆச்சுன்னா அவர காப்பாத்துறதே கஷ்டமாகிடும் என கூறும் கௌதம் பணத்துக்கு ஏற்பாடு பண்ணிட்டு வாங்க என்கிறான்.

காவல் நிலையத்தில் பிரியாணி சாப்பிட்டுக்கொண்டிருக்கும் இன்ஸ்பெக்டர், மனோஜை மிரட்டுகிறார். எங்கம்மா யார் தெரியுமா என மனோஜ் போலீஸையே மிரட்டபோலீஸ் தக்க பதிலடி கொடுக்கிறது. அந்த நேரத்தில் போலீஸ் ஸ்டேசனுக்கு மனோஜின் அம்மா, அப்பா இருவரும் வருகிறார்கள். உடன் கயலின் பெரியப்பா, பெரியம்மாவும் வருகிறார்கள்.

ராஜி போலிஸீடமே மரியாதையில்லாமல் நடந்துகொள்கிறார். இதனால் ராஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையில் சண்டை ஏற்படுகிறது. நான் யார்னு தெரியாம பேசிட்டு இருக்கீங்க என ராஜி சொல்ல, அதற்கு போலிஸ் இன்ஸ்பெக்டர் முடிஞ்சத பண்ணுங்க உங்க பணத்திமிர இங்க காட்டாதீங்க என சொல்கிறார் இன்ஸ்பெக்டர். ராஜிக்கும் இன்ஸ்பெக்டருக்கும் இடையே வாக்குவாதம் முற்றுகிறது.

ராஜி கோபத்தில் கொந்தளிக்க, ராஜியின் கணவர் கொஞ்சம் பொறுமையாக பேசுகிறார். நீங்க பண்ணது தப்பு என போலீஸையே கேட்க, அவர் மனோஜ் பண்ணது தப்பு இல்லையா. அவரால் ஒரு உயிர் ஊசலாடுகிறது. அவனுக்கு பணத்திமிர்ல கார்ல குடிச்சிட்டு போற வாரவன இடிச்சி சாகடிக்க நாங்க அமைதியா இருக்கணுமா. புள்ளைய ஒழுங்கா கண்டிச்சி வளக்க துப்பில்ல என போலீஸ் சொல்ல, ராஜி மேலும் மிரட்டுகிறாள்.

அடுத்து வக்கீலும் போலீஸும் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். நான் சொன்னா உங்களுக்கு புரியாது உங்களுக்கு புரிய வைக்குறேன் என ராஜி தனியாக செல்கிறாள்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

ராஜி கமிஷ்னர் மொபைலுக்கு மீண்டும் கால் செய்கிறாள். அப்போது சார் அர்ஜெண்ட் மீட்டிங்ல இருக்கிறார் என்று தெரிய வருகிறது. அடுத்து வேறொரு உயர் அதிகாரிக்கு கால் செய்கிறாள். அவர் என்ன தப்பு பண்ணார் என கேட்கிறார். அவர் இன்ஸ்பெக்டரிடம் போனை கொடுக்க சொல்கிறார்.

கமிஷ்னர் நடந்ததை சொல்லும் இன்ஸ்பக்டரின் பேச்சை கேட்கிறார். அவர் நேரடியாக கமிஷனர், ராஜியிடமே நடந்ததை கேட்கிறார். கமிஷனர் நேரில் வந்து நடந்ததை விசாரிக்கிறேன் என்று சொல்லி கிளம்புகிறார்.

கயலிடம் அவள் தோழி என்ன ஆச்சு கேட்கிறார். மணிமாறனை கவுதம் மிரட்டுகிறார். பணம் கட்டாமல் நிச்சயமாக ஆபரேசன் கிடையாது என்று கூறுகிறாள். இதனால் தன் அத்தைக்கு மீண்டும் ஒரு முறை கால் செய்ய நினைக்கிறாள் கயல். ஆனால் ராஜிக்கும் கயலுக்கும் மீண்டும் மோதல் ஆரம்பிக்கிறது.

கயல் போனில் கூப்பிட நீண்ட நேரம் கழித்து போனை அட்டெண்ட் செய்கிறாள். உங்க பையன் பண்ண தப்புக்கு நீங்க செய்ய வேண்டியத செய்யாம இப்படி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்களே என கேட்கிறாள் கயல்.

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

அத்த இங்க அந்த பேஷன்டோட கண்டிசன் ரொம்ப மோசமாக இருக்கு. அவருக்கு 1 லட்சம் ரூபாய் கட்டுனாதான் ஆபரேசன் பண்ணுவாங்கன்னு சொல்றாங்க. அதுக்கு 5 லட்சம் ரூபாய் ஆகும்னு சொல்றாங்க. அத எல்லாத்தையும் நீங்கதான் பாத்துக்கணும் என சொல்ல, அதையெல்லாம் தரமுடியாதுன்னு சொல்லும்மா என பெரியப்பா சொல்கிறார்.

என்னடி என் பல்ஸ் பிடிச்சி பாக்குறீயா என ராஜி கேட்கிறாள். அதை மறுக்கிறாள் கயல். அதற்கு தரமுடியாது என்று சொல்கிறாள். என்னடி மிரட்டி பாக்குறியா. நீ வச்ச ஆளா நான். பணம் குடுக்க முடியல்லனா என்ன பண்ண முடியும். இந்த ராஜலட்சுமி சுயம்புடி. நீ என்ன எதுவும் பண்ண முடியாது என ராஜி சொல்ல, இந்த குடும்பத்தோட பாவம் உங்கள சும்மா விடாது. நீங்க அதுக்கு பிராயச்சித்தமா வந்து பணம் குடுங்க.

அதற்கு ராஜி நீ என்ன பழி வாங்குறல்ல. என்கூட போட்டி போட பாக்குறல்ல. யார் ஜெயிக்கிறான்னு பாக்கலாமா என்கிறாள்.

குடுக்கவே முடியாது என பிடிவாதமாக சொல்லிவிட்டு போனைக் கட் செய்துவிடுகிறாள் ராஜி. கயல் கவலையுடன் இருக்கிறாள்.

கயல் சீரியல் நேற்றைய எபிசோட் | Kayal serial Yesterday episode

அவசர அவசரமாக ஆட்டோவில் அன்பு மருத்துவமனைக்கு ஆட்டோவில் வருகிறான். பாதிக்கப்பட்ட ஒருவரை மருத்துவமனையில் அனுமதிக்க வருகிறான். அங்கு கயல் அன்புவைப் பார்த்து யாரு இவரு என்ன ஆச்சி என கேட்க, நடந்ததை விவரிக்கிறான். சாலை விபத்தில் அடி பட்ட அவருக்கு மருத்துவ உதவி செய்ய கயல் மற்றவர்களை அழைக்கிறார். அவளது மனைவி குழந்தையுடன் பதறியடித்துக்கொண்டு ஓடி வருகிறாள்.

மருத்துவரின் உதவியுடன் கயலும் சிகிச்சை அளித்துக்கொண்டிருக்கிறாள். பதறிய மனைவியை சமாதானம் செய்கிறான் அன்பு. காலில் பயங்கர அடி என சொல்கிறாள் கயல். இதை கேட்டு பாதிக்கப்பட்டவரின் மனைவி அழுகிறாள். அக்கா அழாதீங்கக்கா பாப்பா பயந்துட போறா என சொல்கிறாள் கயல்.

கல்லு மண்ணு சுமந்து பாடுபட்ட என் குடும்பத்த காப்பாத்திட்டு இருந்தவரு என் புருசன். எங்களுக்கு வசதியும் இல்ல காசும் இல்ல. அவர விட்டா நாதி இல்ல என மனைவி தெரிவிக்கிறாள்.

கயல் அந்த கார் நம்பரை பார்த்தீயா யாருடைய கார் என கயல் கேட்க, அதை சொல்ல அன்பு தயங்குகிறான். காரணம் என்ன என்று கேட்க, கயலைத் தனியாக வரச் சொல்லுகிறான். அப்போது அவன் கயலிடம் இந்த விபத்தை செய்தது வேறு யாருமில்லை ராஜலட்சுமி அத்தையின் மகன்தான் என சொல்ல கயலுக்கு கோபம் பொத்துக்கொண்டு வருகிறது. அவன் நம்பரை வாங்கி அவனுக்கு கால் செய்வதாக சொல்கிறாள். அல்லது போலீஸில் புகார் கொடுக்கலாம் என்கிறாள் கயல்.

ராஜியின் மகன் குடிபோதையில் வீட்டுக்கு வந்து பெட்டில் விழுந்துவிடுகிறான். அந்த நேரத்தில் கயல் அவனுக்கு கால் செய்கிறாள். கயல் என்பது தெரிந்ததும் அவன் கட் செய்கிறான். மீண்டும் அழைக்கிறாள் கயல்.

விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பித்து ஓடியதை கண்டித்து, அவனுக்கு கால் செய்தால் அவன் திமிருத்தனமாக பேசுகிறான். இதனால் கயலுக்கு கோபம் அத்துமீறுகிறது. இதனால் கயல் கொதிக்கிறாள். பணக்கார திமிரைக் காண்பிக்கிறான் அவன். இதனால் கயல் அவனுக்கு தக்க பாடம் கற்பித்து கொடுக்க வேண்டும் என முடிவு செய்கிறாள்.

அவனுக்கு நேரம் சரியில்லை போல. பாவம்னு பாத்தா என் ஃபோனையே கட் பண்றான். தப்ப ஒத்துக்கிட்டா கூட மன்னிக்கலாம். திமிரா பேசுறவன மன்னிக்கவே கூடாது. இது மாதிரி ஆளுங்கள பாக்கும்போதுதான் பணத்து மேலையே வெறுப்பு வருது. யாரோ எவரோ நமக்கு எவ்வளவு வருத்தம் வருது. ஆனா ஒரு விபத்த பண்ணிட்டு இப்படி பண்ணிட்டு இருக்கான். இந்த அக்காவையும் குழந்தையையும் பாக்கும்போது கவலையா இருக்கு.

அப்போது மருத்துவர் அங்கே வருகிறார். கயல் அவரோட எக்ஸ்ரே ரிப்போர்ட் எல்லாம் பார்த்தேன். பிளேட் வச்சாலுமே அடுத்த 6 மாசம் ஆகும் அப்போதுதான் அவரால நடக்கமுடியும். குறஞ்சது 2 மாசமாச்சும் ஆகும் என கைவிரிக்கிறார் மருத்துவர். கயல் மருத்துவரிடம் அந்த நபருக்கும் மனைவி குழந்தைக்கும் பரிவு பார்க்கிறாள் கயல். ஆனால் மருத்துவர் தானும் இங்கு எம்ப்ளாய்தானே என்னால் என்ன செய்துவிட முடியும் என்று கூறுகிறார். அப்போது என்னால் முடிந்தால் நான் கொடுத்திருப்பேன் என்று சொல்கிறாள் கயல்.

அப்போது உடனிருக்கும் நர்ஸ் ஒருத்தி கயலை வம்புக்கு இழுக்கிறாள். அப்போது என்னால் முடிந்தால் நான் கொடுத்திருப்பேன் என்று சொல்கிறாள் கயல். மருத்தவரிடம் ரெக்யூஸ்ட் செய்ய கேட்கிறாள் கயல். டீன் வேற ஊருக்கு கிளம்பிவிட்டார். இவர்களை உடனே பணம் கட்ட சொல்லுங்க என்று கூறிவிட்டு சென்று விடுகிறார் டாக்டர். அந்த நேரத்தில் கயல் அவர்களை தேற்றுகிறாள். இப்ப என்னக்கா பண்ணுறது என அன்பு கேட்க, அதற்கு கயல் நாம யோசிக்கலாம் என்கிறாள்.

இப்படிஇவங்கள கதற விட்டுட்டியே மனோஜ் உன்ன என்ன பண்ணலாம் என கயல் யோசிக்க, அந்த நேரத்தில் ராஜி வீட்டில் அவளது தங்கை மொபைல் நோண்டிக்கொண்டிருக்கிறாள். அந்த நேரத்தில் அங்கு கயல் வந்து சேருகிறார். வந்ததும் மனோஜை அழைக்கிறாள். சத்தமாக கூப்பிட்டுக்கொண்டே வரும் கயலைத் தடுக்கின்றனர் அனைவரும்.

கயல் மனோஜை உடனே வரச் சொல்லி அழைக்கிறாள். அவன் என்ன பண்ணான் அவன ஏன் கூப்பிடுற என ராஜி கேட்க, நடந்ததை சொல்கிறாள் கயல். அந்த மனுசனோட உழைப்பை நம்பிதான் அந்த குடும்பமே இருக்கு. அவருடைய குழந்தை என்ன பண்ணும் அந்த குழந்தையோட எதிர்காலம் என்ன ஆகும் என்று கயல் ஆத்திரப்படுகிறாள்.

அவரு வேலைக்கு போனாதான் அந்த வீட்டுல மூனு வேள சாப்பாடு நடக்கும். இதுக்கு ஏன் வீண் பழி போடுற என ராஜி சொல்கிறாள். உன் குடும்பத்துல உன்ன விட யாரும் மேல வரக்கூடாது. அப்படி இருந்தா நீ எதாவது பண்ணி கீழ தள்ளி விட்ருவ என ராஜி பேச,அதற்கு கயல் தக்க பதிலடி கொடுக்கிறாள்.

விபத்து ஏற்படுத்திவிட்டு, ஒருத்தரோட வாழ்க்கைல விளாயாடிருக்கான் என சொல்கிறாள் கயல். மனோஜ் ரொம்ப தப்பா இருக்கான். அவன் சரியில்ல. அடிபட்டவர ஆஸ்பிட்டல் கூட்டி போக கூப்பிட்டா அவன் கிளம்பி போயிட்டான் என சொல்கிறாள் கயல். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் முற்றுகிறது. இதனால் மனோஜை அவன் அப்பா அழைக்கிறார்.

மனோஜும் கீழே இறங்கி வருகிறான். அவனிடம் நீ குடிச்சிருக்கியா என கேட்கிறாள் ராஜி. கயலைப் பார்த்தும் நீ ஏன் இங்க வந்த முதல்ல வீட்ட விட்டு வெளிய போ என்கிறான் மனோஜ். நீ குடிச்சிருக்கியா என கேட்க ராஜியிடம் உண்மையைச் சொல்கிறான் மனோஜ் ஓங்கி ஒன்னு வைக்கிறாள் ராஜி. 

Tags:    

Similar News