அன்புவின் காதலுக்காக கயல் எடுத்த முடிவு! ரசிகர்கள் அதிர்ச்சி..!

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.;

Update: 2024-07-08 11:38 GMT

கயல் சீரியல் நாளைய புரோமோ | Kayal serial promo tomorrow

கயல் சீரியல் அப்டேட் தெரிந்துகொள்ள வந்திருக்கிறீர்களா? இதோ நாளைய புரோமோவை முதலில் பாருங்கள்.

கயல் சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பது குறித்து தெரிந்துகொள்ளுங்கள். தொடர் அப்டேட்டுக்கு இந்த டெலிகிராம் சேனலில் இணையுங்கள்.  

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial written update

எழில் மனச விடவா உனக்கு ஜாதகத்துல இருக்குற கட்டம் முக்கியம். எழில் இல்லாத வாழ்க்கைய உன்னால நினச்சி பாக்க முடியுமா? எழில் இல்லாமத்தான் உன்னால வாழ்ந்துட முடியுமா? ஜாதகம் பாத்து கல்யாணம் பண்ணவங்களே பாதில பிரிஞ்சிடுறாங்க. மனப்பொருத்தம்தான் முக்கியம். இதெல்லாம் போட்டு குழப்பிக்காம நீ ஒழுங்கா எழில கல்யாணம் பண்ணிக்கோ.

எழில் அம்மாவுக்கும் கல்யாணத்துல விருப்பம் இல்ல. அவங்களுக்கு என்ன எழிலுக்கு கல்யாணம் பண்ணி வைக்க விருப்பமே இல்ல. எங்களுக்குள்ள நடந்த கசப்பான சம்பவங்கள அவங்க மறக்கவே இல்ல. என்ன அவங்களுக்கு எப்பவுமே பிடிக்கல. பிடிக்காது. எழிலுக்கு தீபிகானு ஒருத்திய கல்யாணம் பண்ணி வைக்க திட்டம் போடுறாஹ்க. அவங்களுக்கும் இந்த ஜாதகம் பற்றி தெரிஞ்சிருக்கு.

எழில் கூட சேர்ந்து வாழ பாக்கியம் எனக்கு இல்ல. எழில் என் கூட இருக்கணும்ன்றதவிட எனக்கு அவன் உயிரோட இருக்கணும். அவன் சந்தோஷமாக வாழணும் என்று சொல்கிறாள் கயல்.

காதலுக்கு எப்படி சாதி மதம் முக்கியம் இல்லையோ அதுபோல ஜாதகமும் முக்கியம் இல்ல. எழில் நீ இல்லாம சந்தோஷமா இருப்பாரா. ஜாதகத்த பாத்து லவ்வ மறக்குற, அப்ப உனக்கு அவர் மேல காதல் இல்லையா. இது போட்டுக்குடுக்குற விசயம் இல்ல. எழில் அம்மாவ பத்தி எழில் கிட்ட சொல்லு. உன் வாழ்க்கைய காப்பாத்திக்க.

நீயும் எழிலும் சேரப்போறீங்கன்னு உங்கள விட நிறைய பேரு எதிர்பார்த்து காத்திருக்கோம். நீ போயி உடனே எழில் கிட்ட பேசு என்கிறார் தோழி. ஆனால் யாருக்கும் இதை சொல்லக்கூடாதுனு சத்தியம் வாங்குகிறாள் கயல். தோழியும் சத்தியம் பண்ணிவிடுகிறாள்.

ஆனால் நீ இப்ப எனக்கு ஒரு சத்தியம் பண்ணி குடு என்று கேட்கிறாள். நீ எழில விட்டு பிரிய மாட்டேன்னு சத்தியம் பண்ணு. நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து சந்தோஷமா வாழ்வீங்கனு சத்தியம் பண்ணு. ஏற்கனவே பல வருசமா அவரோட காதல ஏத்துக்காம அலைய விட்டு அவர நோகடிச்ச. இப்ப ஆசைய காமிச்சிட்டு நீ அவர ஏமாத்திடாத. அவரால அத தாங்கிக்கவே முடியாது என்று தோழி சொல்ல, சத்தியம் செய்யாமலேயே கயல் அங்கிருந்து புறப்பட்டு சென்று விடுகிறாள்.

கயல் வீட்டுக்கு வந்து சேரவும், கயல் அம்மா கயலிடம் நலம் விசாரிக்கிறார். ஏன் ஒருமாதிரியா இருக்கே. எதையோ என்கிட்ட இருந்து மறைக்குற என்ன ஆச்சுன்னு சொல்லு என அவளது அம்மா கேட்கிறார்.

கயலை ரெஸ்ட் எடுக்க சொல்லி, அண்ணி காபி போடட்டுமா என கேட்க அந்த நேரம் பார்த்து ஷாலினி, விக்னேஷ், வேதவல்லி மூவரும் கயல் வீட்டுக்கு வருகிறார்கள். அவர்களை கயல் அம்மா வரவேற்று உட்காரச் சொல்லுகிறார்.

மாப்பிள்ள ஏதாவது பிரச்னையா என விக்னேஷைப் பார்த்து மூர்த்தி கேட்கிறார். அப்போது விக்னேஷ் பேச ஆரம்பிக்கிறார். எதுவோ இருந்தாலும் ஓபனா பேசுங்க என்று கயலும், கயல் அம்மாவும் பேசுகிறார்.

அத்த என் அம்மா பண்ணது மிகப்பெரிய தப்புதான். அத எந்த காலத்துலயும் நான் மறுக்கமாட்டேன். ஒரு இடத்துல உங்க பொண்ண கட்டி குடுத்துட்டு அங்க நல்லா வாழணும்னு நீங்க யோசிச்சா, அன்பு ஷாலினிக்கூட நெருங்கி பழகக்கூடாது. சொந்தத்துல வரண் பாத்து ஷாலிய கட்டி வைக்க எங்கம்மா ஆசப்பட்டுட்டு இருக்காங்க.

எங்க அம்மா ஒரு விசயத்த முடிவு பண்ணிட்டா அதுல இருந்து மாறவே மாட்டாங்க. 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today episode

நானும் தேவிய காதலிச்சி கல்யாணம் பண்ணிட்டேன். ஷாலினியவாச்சும் சொந்தத்துல கல்யாணம் பண்ணி குடுக்கணும்னு நினைக்குறது தப்பில்லையே. இது இவங்க பழக்கவழக்கத்தால பிரச்னையாகும்னு நிலை வரப்ப கண்டிச்சுதான ஆகணும்.

எனக்கு தேவிய எவ்வளவு பிடிக்குமோ உங்க குடும்பத்த அவ்ளோ பிடிக்கும். இதனால எந்த பிரச்னையும் வரக்கூடாதுனு நினைக்குறேன். சுத்தி வளச்சி பேச விரும்பல. அன்பு ஷாலினிய மறந்துடுங்க. ஷாலினிக்கு நான் பேசி புரிய வச்சிட்டேன். நீங்க புரிஞ்சிக்கோங்க. எப்ப யாருக்குள்ள பிரச்னை வருமோன்னு பயமா இருக்கு. நீங்க புரிஞ்சி நடந்துப்பீங்கனு நம்புறேன். நீங்க போலீஸ் ஆகி உங்க ரேஞ்சுக்கு ஏத்தமாதிரி பொண்ண பாத்து கல்யாணம் பண்ணிக்கோங்க. உங்க அக்கா வாழ்க்கை நல்லா இருக்கணும்ல என்று பேசுகிறான் விக்னேஷ்.

ஷாலினியிடம் இருந்த அன்பு கொடுத்த கிப்ட்களை திருப்பி கொடுத்துவிட்டு, அன்புவுக்கு ஷாலினி கொடுத்த கிப்டுகளை திருப்பி கொடுக்க சொல்கிறான் விக்னேஷ். இதையே அன்புவின் அம்மாவும் சொல்கிறாள். எல்லாத்தையும் எடுத்து ஒரு கவரில் போடச் சொல்லி அதை திருப்பி கொடுக்க வைக்கிறாள். 

கயல் சீரியல் இன்றைய அப்டேட்| Kayal serial today update

அண்ணி தயவுசெஞ்சி என்ன தப்பா எடுத்துக்காதீங்க. இத இப்படி டீல் பண்ணி பேசி முடிச்சிக்கிட்டாதான் இனி யாருக்கும் எந்த பிரச்னையும் வராது. அம்மா அத்தைக்கிட்ட மன்னிப்பு கேளுங்க என்கிறான் விக்னேஷ்.

வேதவல்லியும் கயல் அம்மாவிடம் மன்னிப்பு கேட்கிறாள். உங்க புள்ளைய என் மகள மறக்க சொல்லுங்க. இவ்வளவு நடந்தப்பறம் ஷாலினி ஏதாவது பண்ணிப்பாளோ என்று பயமா இருக்கு. இந்த காதல் கண்றாவியெல்லாம் ஏன் இவங்களுக்கு வருதோ தெரியல. இவ்ளோ பிரச்னகள் நடக்குதே இத விட்டுத்தொலையலாம்னு விடலாம்ல. சமூகத்துல எவ்ளோ மதிப்பு வாய்ந்து இருந்தேன். என்னய போயி விஷத்த கலக்குற அளவுக்கு கொண்டு வந்து நிறுத்திட்டாங்க. ஷாலினிய அவ்ளோ அன்பா வளத்தேன். அவளுக்கும் அம்மான்னா அவ்ளோ புடிக்கும்.

உங்க பையனால அவ மாறிட்டா. நல்லா வளந்த பொண்ண இப்படி மாத்திட்டானே. இப்பக்கூட உங்க பையன் மேல எனக்கு துளி அளவும் நம்பிக்கை இல்லை என்கிறாள் வேதவல்லி. அன்பு ஷாலினிய நீ ஏறெடுத்தும் பாக்க மாட்டனு அம்மா மேல சத்தியம் பண்ணுடா என சொல்கிறார். 

கயல் சீரியல் சென்ற வாரம் | Kayal serial Last Week

இடம் - வேதவல்லி வீடு

கதாபாத்திரங்கள் - விக்னேஷ், தேவி, வேதவல்லி, ஷாலினி

வேதவல்லி தனது மகன் வீட்டுக்கு வருகிறார். அப்போது அவரது மகன் விக்னேஷ் அம்மாவை வெளியே போகச் சொல்கிறான். அவனது மனைவி தேவி எப்படியாவது விக்னேஷிடம் கெஞ்சி அவரை வீட்டுக்குள் கொண்டு வர நினைக்கிறார்.

கொலைகாரியின் பையனாக இருப்பதை விட தாயில்லாமல் பிள்ளையாக இருந்துட்டு போகிறேன் என்று கூறி வேதவல்லியை வெளியே போக சொல்கிறான். பின் சுதாரித்துக்கொண்டு தானும் தன் மனைவி தேவியும் வெளியே செல்ல முடிவு செய்கிறான். இதனால் தேவியை இழுத்துக் கொண்டு வெளியே செல்கிறான்.

விக்னேஷின் தங்கை ஷாலினியும் அவனை எப்படியோ சமாதானம் செய்ய முயற்சிக்கிறாள். ஆனால் எதற்கும் அடங்காதவனாய் அவன் ஆத்திரத்தில் துள்ளுகிறான். அதேநேரம் அவனது தாய், வேதவல்லி மண்ணெண்ணெய் கேனை எடுத்துக்கொண்டு வந்து தன்மீது ஊற்றிக் கொள்கிறார். இதனால் அனைவரும் பதற்றமடைகின்றனர்.

வேதவல்லியும் விக்னேஷும் மாறி மாறி பேச, அப்போது அவனது அம்மா வேதவல்லி ஷாலினி, அன்பு காதலைப் பற்றி போட்டு உடைக்கிறார். அன்பு - ஷாலினிக்கு இடையில் ஏதோ இருப்பதாக கூறி கூறி அவர்களை நெருங்கச் செய்ததே நீங்கள்தானே என அம்மாவிடம் கூறுகிறார். ஆனால் அம்மா வேதவல்லி இதனைக் குறித்து இன்னும் ஆதாரப்பூர்வமாக நிரூபிக்கிறேன் என பல விசயங்களை எடுத்துக் காட்டுகிறார்.

நேராக ஷாலினி ரூமுக்கு சென்று அவர்கள் பரிமாறிக்கொண்ட லெட்டர்கள், பரிசுப் பொருட்கள் அனைத்தையும் விக்னேஷிடம் காட்டுகிறார். அதனை அதிர்ச்சியில் எடுத்து ஒவ்வொன்றாக பார்க்கிறான் விக்னேஷ். ஷாலினியிடம் நீ அன்புவைக் காதலிக்கிறாயா என்று கேட்கிறான். அதற்கு அவள் ஆமா என்று சொல்கிறாள். அடுத்த நொடியே ஷாலினியை ஒரு அறை விடுகிறான் விக்னேஷ்.

இரண்டு பேரும் காதலிச்சி கல்யாணம் பண்ணிக்கிட்டீங்க. நம்ம சொந்தக்காரங்க என் மூஞ்சுல காரித் துப்பமாட்டாங்களா என அழுகிறாள். நமக்கு சமமான ஒரு பெரிய இடத்தில் வரனை பார்த்து சொந்தக்காரங்க மூக்கு வியர்க்க அனைவரும் வாயைப் பிளக்குமாறு நான் திருமணம் செய்து வைக்க நினைக்கிறேன். அது தப்பா என நியாயம் பேசுகிறாள் வேதவல்லி.

ஆனால் விக்னேஷ் அன்புவையும் ஷாலினியையும் சேர்த்து வைத்துவிடலாம் என்று கேட்கிறான். அதற்கு அவனது அம்மா வேதவல்லி ஏதேதோ சொல்லி விக்னேஷை திருப்பி விடுகிறாள். இதன்பின் விக்னேஷ் அன்பு மீது கோபத்துடன் ஷாலினியை அன்புவுடன் பழகக் கூடாது என்று சொல்லி கண்டிப்பாக சொல்லிவிடுகிறான்.

இடம் - கயல் வீடு

கதாபாத்திரங்கள் - எழில், கயல், கயல் அம்மா, தம்பி அன்பு, அண்ணன் மூர்த்தி, தங்கை ஆனந்தி, மூர்த்தியின் நண்பர்.

கயலைத் தேடி எழில் காரில் வந்து இறங்குகிறான். வீட்டில் கயலின் தம்பி அன்பு, அண்ணன் , தங்கை, அம்மா அனைவரும் இருக்கிறார்கள். கயலைத் தேடி அவள் ரூமுக்கே செல்கிறான் எழில். அதற்குள் கயல் முன் வீட்டுக்கு வருகிறாள். கயலின் தங்கை ஆனந்தி கயலை கிண்டல் செய்துகொண்டே உங்களைப் பார்க்கத்தான் வந்திருக்கிறார் மாம்ஸ். போங்க போங்க என்று கூறுகிறாள். ஆனால் பிரம்மை பிடித்தவள் போல இருக்கும் கயல், எதிலும் ஆர்வம் காட்டாதவாறு இருக்கிறார். கண்கள் கலங்கி நிற்கும் அவள் மேடைக்காக சிரிப்பது போல நடிக்கிறாள்.

கயலுக்கு இந்த கல்யாணம் நடக்காது என்பதை மனதுக்குள் யோசித்துக் கொண்டிருக்கிறாள். எழிலை ஏமாற்றுவதாக நினைத்து வருந்துகிறாள். அப்போது ஆனந்தி ஒரு மண்டபத்தை ஃபிக்ஸ் பண்ண சொல்கிறாள். வரவேற்பு கல்யாணத்துக்கு முன்பா, பின்பா, உனக்கு என்ன பிடிச்சிருக்கு என எழில் துருவி துருவி கேட்க, கயல் எழிலைப் பார்த்து நீயே எல்லாவற்றையும் முடிவு செய்து கொள் என்று கூறுகிறாள். உனக்கு எந்த மண்டபம் பிடிச்சிருக்கோ அந்த மண்டபத்தையே ஃபிக்ஸ் பண்ணிடு என்கிறாள் கயல்.

கயல் ஏன் டல்லுனு இருக்க என்று கேட்கிறான் எழில். அதற்கு தலைவலிக்குது என கயல் கூறுகிறாள். இதனையடுத்து எழில் அவனே டீ போட்டு எடுத்துக் கொண்டு வருவதாக கூறிவிட்டு சொல்கிறான். ஆனால் அதையெல்லாம் கேட்காமல், எழில் சமையல் அறைக்குள் நுழைகிறான். அதை மொத்த குடும்பமே ஆச்சர்யத்துடன் பார்க்கிறது. ஆனந்தி தனக்கும் ஒரு காஃபி என்று கூற, அவளுக்கும் சேர்த்து போடுகிறான் எழில்.

அப்போது மூர்த்தி இந்த மாதிரி குடும்பத்தையும் கயலையும் பார்த்துக் கொள்ளும் மாப்பிள்ளைக்காக நான் இன்னும் எத்தனை இழப்பையும் சமாளித்துக்கொள்வேன் என மனதில் யோசிக்கிறான். மாமியாருக்கும் காஃபி கொடுக்கிறான் எழில். குடிச்சு பாத்துட்டு எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் என்கிறான். மூர்த்தியின் நண்பர் ஆறுமுகம் உட்பட அனைவருக்கும் காஃபி கொடுக்கிறான். கயல் தன் திருமணம் நடக்காது என்பதை நினைத்து சோகத்தில் மூழ்குகிறாள்.

இந்நிலையில் எழிலின் அம்மா கயலை அழைத்து ஒரு இடத்துக்கு வரச் சொல்லுகிறாள். கயலும் அவசர அவசரமாக புறப்பட்டு செல்கிறாள்.

இடம் - கோவில்

கதாபாத்திரங்கள் - எழிலின் அம்மா, புது அறிமுகம் தீபிகா, கயல்

எழிலின் அம்மா, கயலுக்கு தன் வீட்டுக்கு வரப்போகும் மகாலட்சுமி என ஒரு பெண்ணை அறிமுகப் படுத்துகிறாள். அவள் பெயர் தீபிகா. பெரிய பணக்கார வீட்டு பெண். தொழிலதிபரான அவர், கயலுக்கு கைக் கொடுக்கிறாள். ஆனால் கயல் யோசிக்கிறாள். இதனால் எழிலின் அம்மா கடுப்பாகிறாள். உடனே தீபிகா குறுக்கிட்டு அதனை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டாம். எழிலின் அம்மாவும், தீபிகாவும் சேர்ந்து கயலை அழ வைக்கிறார்கள். ஆனால் தீபிகா எழிலை நன்றாக பார்த்துக் கொள்வதாகவும், எழில் மீது தான் உயிரையே வைத்திருப்பதாகவும் கூறுகிறாள் தீபிகா.

கோடீஸ்வரரின் மகளான தீபிகா, இந்த ஜென்மத்தில் எழில்தான் தன்னுடைய புருசன் எனவும், எழில் தன் உயிரை விட பெரிய பொக்கிஷமாக பார்த்துக் கொள்வேன் என தீபிகா கூறுகிறாள். என்னைத் தாண்டி வேறு எவளையும் எழில் கிட்ட நெருங்க விடமாட்டேன் என்கிறாள்.

எழில் சிறப்பான ஆளு என்று சொல்லும் அவள், எழிலிடம் அப்படி ஒரு பாசிடிவிட்டி இருக்கும் என்றும், எழில் மீது தான் ஏன் காதலில் விழுந்தேன் என்றும் விவரிக்கிறாள். ஆனாலும் எழிலை நெருங்க முடியல, கயலோட உதவியோட எழில தான் நெருங்க முடியும்னு சொல்றா. இதனால் எழிலை விட்டுத் தருவது மட்டுமின்றி எழிலை இந்த திருமணத்துக்கு சம்மதிக்க வைக்கவும் தீபிகாவுடன் அவரை சேர்த்து வைக்கவும் கயலையே உதவ சொல்கிறாள் எழிலின் அம்மா.

தீபிகா கேட்டதற்கு கயல் நிச்சயமாக பண்றேன் என்று கூறுகிறாள். எழிலின் அம்மாவும் தீபிகாவை விரும்பி கயலை வெறுக்க எழிலை தயார்படுத்தவேண்டும் என கயலையே கேட்கிறாள். நான் சொன்னதெல்லாம் செய்யணும் என கட்டாயப்படுத்துகிறாள்.

எழிலிடம் தீபிகாவை அறிமுகப்படுத்தி அவளை காதலிக்க வைக்கும் திட்டத்தை எழிலின் அம்மா கூறுகிறாள். இதனால் மனம் நொந்துப் போய் கயல், அங்கிருந்து செல்கிறாள்.

இடம் - சாலை

கதாபாத்திரங்கள் - கயல், அவளது தோழி

மனம் நிறைய வருத்தத்துடன் கோவிலில் நடந்தவற்றையே நினைத்துக் கொண்டு செல்கிறாள் கயல். அங்கே ஒரு இடத்தில் ஆபத்தான பள்ளம் இருப்பதை கூட அறியாமல் வந்து கொண்டிருக்கிறாள். அங்கு அவளது தோழி ஒருத்தி ஓடி வருவதற்குள், கயல் நிலைத் தடுமாறி கீழே விழுந்துவிடுகிறாள்.

உடனடியாக ஓடி வந்த தோழியும் அங்கிருந்த பொதுமக்கள் உதவியுடன் கயலைத் தூக்கி விடுகிறாள். குடிக்க தண்ணீர் கொடுத்துவிட்டு, அவளை ஆஸ்வாசப்படுத்துகிறாள். பின் கயலை திட்ட ஆரம்பிக்கிறாள்.

பின் அவளிடம் ஏதாவது பிரச்னையா? என்று கேட்க அவளோ, அதெல்லாம் ஒன்னும் இல்ல என்கிறாள்.

ஒன்னும் இல்லன்னு வாய்தான் சொல்லுது. ஆனா உன் முகமே பிரச்னைய சொல்லுது. எழிலுக்கும் உனக்கும் ஏதும் பிரச்னையா? இல்லையே அப்படிப்பட்ட ஆள் இல்லையே எழில். அவரு உன்கிட்ட சமாதானமாவே போயிடுவாரே. பெரியப்பா எதுவும் பண்றாரா.. வீட்ல வேறு எதுவும் பிரச்னையா?

அதெல்லாம் ஒன்னும் இல்ல என்று மறுபடியும் கயல் மலுப்புகிறாள்.

நான் கிளம்புறேன் என்று சொல்லும் கயலை தடுத்து நிறுத்தும் தோழி, ஏய். நில்லு. என்கிட்ட என்ன பிரச்னைனு சொல்லுடி . நான் தீர்வா இல்லைனாலும் ஆறுதலாச்சும் இருப்பேன்னு சொல்ல அனைத்து உண்மையையும் போட்டு உடைக்கிறாள்.

எனக்கும் எழிலுக்கும் இடையேயான உறவு நிச்சயதார்த்தத்துடன் நின்றுவிட்டது என்கிறாள் கயல். இதற்கு அதிர்ச்சியடைகிறாள் தோழி.

Tags:    

Similar News