உதயநிதிக்கு பதில் கவின்.. கமல்ஹாசனுடன் இணையும் புதிய படம் இதுவா?

கமல்ஹாசன் - உதயநிதி ஸ்டாலின் படத்தில் கவின் நாயகனாக இணைகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.;

Update: 2023-02-13 12:52 GMT

கமல்ஹாசனுடன் கவின், உதயநிதிஸ்டாலின்

டாடா படத்தின் ரிலீசுக்குப் பிறகு கவின் கமல்ஹாசன் அவர்களை வீட்டில் சென்று சந்தித்துவிட்டு கோவிலுக்கு சென்று வந்தேன் என டிவிட்டரில் பதிவிட்டிருந்தார். இதனிடையே கவினுடன் டாடா படக்குழுவினரும் கமல்ஹாசனை சந்தித்து பாராட்டு பெற்றனர்.

கமல்ஹாசன் டாடா படத்தைப் பார்த்துவிட்டு இயக்குநரை பாராட்டியிருக்கிறார். மேலும் வருங்காலத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் பட நிறுவனத்துக்கு கதை பண்ணுவது குறித்தும் அவருடன் கலந்துரையாடல் செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில்தான், தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சியின்போது கமல்ஹாசன் மேடையிலேயே நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போட்டியாளர் ஒருவருக்கு சினிமா வாய்ப்பு தருவதாக கூறியிருந்தார். அவர் பெயர் தர்ஷன். ஆனால் பெரிய அளவில் அவருக்கு எந்த வாய்ப்பும் வராத நிலையில், தற்போது கவின் மட்டுமே பிக்பாஸ் சென்று வந்த பிறகு நல்ல படங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கிறார். அதிலும் நடிப்புக்காக மெனக்கெடலும் செய்கிறார் என்று கருதப்படுகிறது.

கவின் கமல்ஹாசனை நேரில் சந்தித்து பேசுகையில், அவரின் விடா முயற்சியைப் பாராட்டி பேசியிருக்கிறார் கமல்ஹாசன். விரைவில் நமது தயாரிப்பிலேயே படம் பண்ணலாம் காத்திருங்கள் என்றும் கூறியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. முன்னதாக தர்ஷனை வைத்து படம் எடுப்பதாக கூறியது போல இதை அப்படியே விட்டுவிட முடியாது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

கமல்ஹாசன் நேர்மையாக மெனக்கெட்டு உழைப்பவர்களுக்கு தனி இடம் கொடுப்பது வழக்கம். நல்ல நடிகர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு தருவார் என்கிறார்கள். விரைவில் கவின் நடிப்பில் புதிய திரைப்படம் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. அநேகமாக ஏற்கனவே உதயநிதி நடிப்பதாக இருந்த படத்தில் கவின் நடிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்கிறார்கள். 

Tags:    

Similar News