உங்களுக்கு பிடிச்ச நடிகர் யார்? நடிகர் கவின் சுவாரஸ்ய பதில்

Dada movie kavin interview- பிரபல தனியார் தொலைக்காட்சியில் நடிகர் கவின் கலந்து கொண்ட இண்டர்வியூ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.;

Update: 2023-02-25 11:45 GMT

பைல் படம்.

Dada movie kavin interview-நடிகர் கவின் நடிப்பில் பிப்ரவரி 10 ம் தேதி டாடா திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று உள்ளது. இதனையடுத்து டாடா படத்தை பார்த்து விட்டு நடிகர் தனுஷ், கவினை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார்.

இந்நிலையில் பிரபல தனியார் தொலைக்காட்சியின் இண்டர்வியூவில் கலந்து கொண்ட கவின் பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அப்போது நிகழ்ச்சியின் நெறியாளர் உங்களுக்கு பிடித்தமான நடிகர் யார் என கேள்வி எழுப்பியதற்கு, நடிகர் மணிகண்டன் என பதிலளித்தார். மேலும், மணிகண்டனிடம் பல்வேறு திறமைகள் இருப்பதாகவும் அவர் விரைவில் மிகப்பெரிய நட்சத்திரமாக திரையில் மின்னுவார் எனவும் கூறினார். நீங்கள் யாருக்கு வில்லனாக நடிக்க விரும்புகிறீர்கள் என கேள்வி எழுப்பியதற்கு அரவிந்த் சாமிக்கு என கூறிய கவின், அரவிந்த் சாமி வில்லனாக நடித்த தனி ஒருவன் படத்தை அவருக்காகவே 5 முறை தியேட்டரில் படம் பார்த்ததாக தெரிவித்தார். நீங்கள் ஒரு படத்தை இயக்கினால் யார் ஹீரோ என்ற கேள்விக்கு, டாக்டர் படத்தில் நடித்த சுனில் அண்ணாவை ஹீரோவாக வைத்து காமெடி படம் இயக்குவேன் என பதிலளித்து இருந்தார். 

Tags:    

Similar News