kaattumalli lyrics: இணையத்தில் உலாவரும் காட்டுமல்லி பாடல் வரிகள்

kaattumalli lyrics: விடுதலை படத்தின் காட்டுமல்லி பாடல் வரிகள் தற்போது இணையத்தில் உலாவருகிறது.

Update: 2023-09-28 07:32 GMT

kaattumalli lyrics: வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நடிப்பில் கடந்த மார்ச் 31-ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘விடுதலை பாகம் 1’. பவானி ஸ்ரீ, கௌதம் வாசுதேவ் மேனன், விஜய் சேதுபதி, சேத்தன், தமிழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.

ஆர்.எஸ்.இன்ஃபோடைன்மென்ட் மற்றும் க்ராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ள இப்படத்தை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் நிறுவனம் வெளியிட்டது. ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில், ‘ஒன்னோட நடந்தா’, ‘வழி நெடுக காட்டுமல்லி’ ஆகிய இரண்டு பாடல்களும் ஹிட்டடித்தன. தற்போது காட்டுமல்லி பாடல் வரிகள் இணையத்தில் உலாவருகின்றன.


Kaattumalli Song Lyrics in Tamil

வழி நெடுக காட்டுமல்லி…

யாரும் அத பாக்கலியே…

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…

வருமா வருமா வீட்டுக்குள்ள…

காடே மணக்குது வாசத்துல…

என்னோட கலக்குது நேசத்துல…

வழி நெடுக காட்டுமல்லி…


வழி நெடுக காட்டுமல்லி…

கண்பார்க்கும் கவனமில்லை…

பூக்குற நேரம் தெரியாது…

காத்திருப்பேன் நான் சலிக்காது…

பூ மணம் புதுசா தெரியுதம்மா…

என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

வழி நெடுக காட்டுமல்லி…

கனவெனக்கு வந்ததில்லை…

இது நிசமா கனவு இல்ல…


கனவா போனது வாழ்க்க இல்ல…

வாழ்க்கைய நெனச்சி வாழ்ந்தில்ல…


மஞ்சு மூட்டமா மனசுக்குள்ள…

போகுற வருகிற நினைவுகளே…

ஒறங்குது உள்ளே ஒரு விசயம்…

ஒறக்கம் கலஞ்சா நெசம் தெரியும்…

காத்திருப்பேன் நான் திரும்பி வர…

காட்டுமல்லியில அரும்பெடுக்க…

வழி நெடுக காட்டுமல்லி…

கண்பார்க்கும் கவனமில்லை…

காடே மணக்குது வாசத்துல…

என்னோட கலக்குது நேசத்துல…

பெண் : கிட்ட வரும் நேரத்துல…

எட்டி போற தூரத்துல…

நீ இருக்க உள்ளுக்குள்ள…

உன்னவிட்டு போவதில்ல…


ஒலகத்தில் எங்கோ மூலையில…

இருக்கிற இருண்ட காட்டுக்குள்ள…

இறு சிறு உசுரு துடிக்கிறது…

நெசமா யாருக்கும் தெரியாது…

சாட்சி சொல்லும் இந்தக் காடறியும்…

காட்டுல வீசிடும் காத்தறியும்…

வழி நெடுக காட்டுமல்லி…

கண் பார்த்தும் கவனமில்லை…

எனக்கா பூத்தது காட்டுக்குள்ள…

வருமா வருமா வீட்டுக்குள்ள…

பூ மணம் புதுசா தெரியுதம்மா…

என் மனம் கரும்பா இனிக்குதம்மா…

வழி நெடுக காட்டுமல்லி…

Tags:    

Similar News