காஷ்மீரில் நிலநடுக்கம்... லியோ படக்குழுவுக்கு என்ன ஆச்சு?
காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள நிலையில் லியோ படக்குழுவுக்கு என்ன ஆச்சு என ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.;
லியோ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக காஷ்மீரில் நடந்து வருகிறது. விரைவில் படப்பிடிப்பு முடிந்துவிடும் என்று கூறப்பட்டு வரும் நிலையில், காஷ்மீரில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் ஆறுதலாக எந்தவித அசம்பாவிதமும் காஷ்மீரில் ஏற்படவில்லை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் லியோ படக்குழுவும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது. leo kashmir shooting
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வருகிறது லியோ திரைப்படம். செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸ் லலித்குமார் தயாரிக்க, அனிருத் இசையில் படம் ஜெட் வேகத்தில் வளர்ந்து வருகிறது.
தயாரிப்பாளர்களின் ஃபேவரைட் இயக்குநரான லோகேஷ் தலைமையில் சென்னை, கொடைக்கானல் ஷெட்யூல்களை முடித்துக் கொண்டு கடந்த ஜனவரி மாதம் காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டது லியோ படக்குழு. kashmir earthquake leo team update
விஜய், திரிஷா, அர்ஜூன், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த், மிஷ்கின், கௌதம் மேனன், சஞ்சய் தத் உள்ளிட்ட பலரும் இந்த படப்பிடிப்பில் கலந்து கொண்டனர். முதலில் மிஷ்கின் நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு அவரை பேக்அப் செய்து அனுப்பியது படக்குழு. அவரும் படத்தைப் பற்றியும் லோகேஷ் கனகராஜ், விஜய் ஆகியோரைப் பற்றி புகழ்ந்து டிவீட் செய்திருந்தார். அவரைத் தொடர்ந்து கௌதம் மேனன் காட்சிகள் படமாக்கப்பட்டது. leo movie update today
கௌதம் மேனனைத் தொடர்ந்து அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரின் காட்சிகள் மட்டும் பாக்கி இருப்பதாக கூறப்பட்டது. மன்சூர் அலிகான் காட்சிகள் ஏற்கனவே கொடைக்கானலில் எடுக்கப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், இன்றுடன் மொத்தம் காஷ்மீர் ஷெட்யூலும் முடிந்து சென்னை திரும்புகிறது படக்குழு. இதனிடையே நேற்றே நடிகர் விஜய் சென்னை திரும்பிவிட்டதாகவும் அதற்கு ஆதாரமாக சென்னை விமான நிலையத்தில் விஜய் வரும் வீடியோ வெளியாகியுள்ளது. ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. முன்னதாக நேற்று காஷ்மீரில் பூமி அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. படக்குழுவினர் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. leo movie latest update
சென்னை திரும்பிய பிறகு 10 நாட்களில் அடுத்த ஷெட்யூல் துவங்குகிறது. அது ஹைதராபாத்தில் நடக்கும் எனவும் அதற்காக மிகப் பெரிய ஏர்போர்ட் செட் போடப்பட்டு வருகிறதாம். இந்த ஷெட்யூலில் விஜய், திரிஷா, அர்ஜூன், சஞ்சய் தத் ஆகியோரும் இந்த காட்சியில் இருக்கிறாராம். thalapathy 67 update today
23 ம் தேதி சென்னை திரும்பும் லியோ படக்குழு அடுத்து 10 நாட்கள் ஓய்வெடுக்கிறது. காஷ்மீரில் கடும் குளிரில் இருந்தவர்கள் இப்போது சென்னையில் சில தினங்கள் ஓய்வெடுக்க தயாரிப்பு தரப்பே அனுமதி அளித்துள்ளதாம். அதேநேரம் திரிஷா பொன்னியின் செல்வன் 2 புரமோசனுக்கு செல்கிறார். ஏற்கனவே சொன்னது போல ஹைதராபாத் செட் வேலைகள் மும்முரமாக நடந்து வருகிறதாம். 40 நாட்களில் முழு செட்டையும் போட டைம் கேட்டிருக்கிறார்களாம். ஏப்ரல் மாதம் இரண்டாவது வாரத்தில் படப்பிடிப்பு துவங்கி, ஹைதராபாத் ஷெட்யூலை முடித்துவிட்ட அடுத்த ஷெட்யூலுக்கு சென்னையில் 1 வாரம் திட்டமிட்டிருக்கிறார்களாம். அத்துடன் படமும் முடிவடைய இருக்கிறது என்கிறார்கள். thalapathy 67 latest news