டிரைலரில் வருவது கார்த்திதான்...! எகிறும் பல்ஸ்..!

இவர்கள் கைதி 2 படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்திலேயே இணைவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது.;

Update: 2024-08-12 08:58 GMT

கங்குவா டிரைலரில் கார்த்தி | Karthi in Kanguva Trailer

சிறுத்தை சிவா பிறந்த நாளான இன்று அவர் இயக்கியுள்ள கங்குவா படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளது படக்குழு. டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், டிரைலரின் இறுதிக் காட்சியில் குதிரை மீது வரும் ஒரு நபர் குறித்து அனைவரும் பேச ஆரம்பித்துள்ளார்கள்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் வரும் அக்டோபர் 10ம் தேதி ரிலீஸ் ஆக காத்திருக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான போதே மிகப்பெரிய எதிர்பார்ப்பும் சேர்ந்தே எழுந்தது. இந்த படம் நிச்சயமாக மிகப்பெரிய ஹிட்டாகி சூர்யாவுக்கும் சிவாவுக்கும் மிகப்பெரிய படமாக அமையும் என கோலிவுட்டே எதிர்பார்த்து வருகிறது.

சூர்யா கெரியரிலேயே மிகப்பெரிய பட்ஜெட் படமாக உருவாகியுள்ள கங்குவாவில் அவருக்கு ஜோடியாக திஷா பதானி நடித்துள்ளார். இவர்களுடன் பாபி தியோல் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். படத்தின் பட்ஜெட் மட்டும் 200 கோடி என்று கூறப்படுகிறது. ஆனால் திரைக்கு வரும் முன்பே 400 கோடி பிசினஸ் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதன்மூலம் படம் இப்போதே லாபமாக இருக்கிறது.


கங்குவா டிரைலரில் கார்த்தி | Karthi in Kanguva Trailer

படத்தில் பாதி பீரியட் படமாகவும் மீதி தற்கால படமாகவும் உருவாக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காக கடுமையான உழைப்பை போட்டிருக்கிறார் சிவா. அவருடன் இயக்குநர் குழுவும் நடிகர்களும் மெனக்கெட்டிருக்கிறார்கள் என்பது டிரைலரிலேயே தெரிகிறது. இந்த டிரைலரிலேயே கடைசியில் ஒருவர் குதிரையில் வருவது போல காட்சி அமைத்திருக்கிறார்கள். அது யார் யார் என்று பலரும் பேசி வரும் நிலையில் அது நடிகர் கார்த்திதான் என்று சிலர் பேசி வருகின்றனர்.

டிரைலரைப் பார்த்த பலரும் அந்த குதிரையில் வரும் நபர்தான் கார்த்தி என்று கூறியுள்ளனர். கங்குவா படத்தில் கார்த்தி நடிப்பது ஏறக்குறைய உறுதியான தகவல்தான் என்றாலும் அதனை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை. இப்படி இருக்கையில் டிரைலரின் ஹைப்பை கூட்டி காண்பிக்க படக்குழு செய்துள்ள சாணக்கியத்தனமாக இது இருக்கலாம் என்றும் சிலர் பேசி வருகின்றனர்.


கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாகத்தை இந்த ஆண்டிலும் இரண்டாம் பாகத்தை அடுத்த ஆண்டிலும் வெளியிட காத்திருக்கிறார் சிவா. இரண்டாம் பாகத்தில் மிகப்பெரிய சர்ப்ரைஸ் வைத்திருக்கிறார் அவர். இயக்குநர் சிறுத்தை சிவாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியான கங்குவா டிரைலர் குறித்த உங்களின் பார்வை என்ன என்பதை கருத்துக்கள் பகுதியில் தெரிவியுங்கள்.

சூர்யா தற்போது தனது அடுத்த படமான கார்த்திக் சுப்பராஜ் படத்துக்கு சென்றுவிட்டார். விபத்திலிருந்து மீண்டு வந்த சூர்யா 44 படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். கார்த்தி கைவசம் இரண்டு படங்களுடன் இருக்கிறார். அடுத்ததாக இவர்கள் கைதி 2 படத்தில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், இந்த படத்திலேயே இணைவது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக இருக்கிறது. 

Tags:    

Similar News