சர்வதேச திரைப்பட விழாவில் தனுஷ் நடித்த கர்ணன் திரையிடப்படுகிறது
நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான 'கர்ணன்' திரைப்படம் ஜெர்மனி திரைப்பட விழாவில் திரையிடப்படுகிறது.;
மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் 'கர்ணன்'. இதில் ரஜிஷா விஜயன், யோகிபாபு, லால் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி தாணு தயாரித்த இப்படம் தமிழ், மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெரும் வெற்றி பெற்றது.
இத்திரைப்படம் வெளியானபோது, கொரோனா இரண்டாவது அலை காரணமாகத் திரையரங்குகள் மூடப்பட்டிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றிபெற்றது. மேலும் ஓடிடி தளத்தில் ஆங்கில சப் டைட்டிலுடன் வெளியான இப்படம் பிற மொழிகளைச் சேர்ந்தவர்களை வெகுவாக கவர்ந்தது.
இந்நிலையில் 'கர்ணன்' திரைப்படம் ஜெர்மனியில் நடைபெறவுள்ள, நியூ ஜெனரேஷன் இன்டிபென்டன்ட் இன்டியன் ஃபிலிம் பெஸ்டிவலில் திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளது. இதனை படத்தின் இயக்குநர் மாரி செல்வராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.