சூர்யா பிறந்த நாளில் ட்ரீட்! கங்குவா பட அப்டேட்!
சூர்யா 42 கங்குவா படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. சூர்யா பிறந்தநாளில் ரசிகர்களுக்கு டிரீட் காத்திருக்கிறது.;
சூர்யா 42 கங்குவா படத்தின் சூப்பர் அப்டேட் ஒன்று கிடைத்துள்ளது. அதன்படி சூர்யாவின் பிறந்தநாளில் கங்குவா படத்தின் முக்கியமான அப்டேட் ஒன்று வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் புதிய படம் கங்குவா. மாறுபட்ட தோற்றங்களில் சூர்யா நடிக்கும் இந்த படம் வரலாற்று பின்னணியில் அமைந்த ஒரு ஆக்ஷன் படமாக உருவாகி வருகிறது. இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நாயகி திஷா பதானி நடித்து வருகிறார். இவர்களுடன் ஏராளமான நட்சத்திரங்களும் படத்தில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதுகுறித்த தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது கோடை வெயிலால் விடுமுறையில் இருக்கும் படக்குழு அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறது. வரும் ஜூன் 20ம் தேதி அடுத்தக் கட்ட படப்பிடிப்பு துவங்கும் என்று கூறப்படுகிறது. இதில் சூர்யா கலந்துகொள்வார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்காக சூர்யா தனது குடும்பத்துடன் ஐரோப்பாவில் இருக்கும் நாடுகளில் சுற்றுலா மேற்கொண்டு இருப்பதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த வாரம் மும்பைக்கு திரும்புகிறார் சூர்யா.
இந்த படப்பிடிப்பில் சூர்யா - திஷா இணைந்து நடனமாடும் பாடல் காட்சியை படமாக்க இருக்கிறார்கள். 8 நாட்கள் நடைபெறும் இந்த படப்பிடிப்புக்கு பிறகு கொடைக்கானலில் தொடர்ந்து மற்ற காட்சிகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது. இந்த படம் அடுத்த ஆண்டு ரிலீஸாகும் என்றும் கூறப்படுகிறது. அநேகமாக 2024 கோடை விடுமுறைக்கு படம் வெளியாக வாய்ப்பிருக்கிறது.
இந்த படத்தைத் தொடர்ந்து சூர்யா கையில் தற்போது வாடிவாசல் திரைப்படம் இருக்கிறது. வெற்றி மாறன் இயக்கத்தில் இந்த படத்துக்கான தயாரிப்பு வேலைகள் நடந்து வருகின்றன. காளைகளுடம் சூர்யா இருக்கும் புகைப்படங்களும் வீடியோக்களும் சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது வைரலாகி வருகின்றன. இதற்கிடையில் சூர்யா மீண்டும் சுதா கொங்கராவுடன் இணைய இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜி வி பிரகாஷ் - சுதா - சூர்யா கூட்டணியில் மீண்டும் ஒரு படம் வரப்போகிறது. இதற்கான அறிவிப்பும் சூர்யா பிறந்தநாளில் வெளியாகுமாம்.
இதன்பிறகு சூர்யா மகாபாரதம் படத்தில் நடிக்கிறாராம். பாலிவுட் படம் என்றாலும் இது தமிழ், தெலுங்கு மொழிகளிலும் உருவாகும் படமாக அமையும் என்றும் இந்த படத்தின் கதை மகாபாரதத்தை மையமாகக் கொண்டு எழுதப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்தில் சூர்யா கர்ணன் கதாபாத்திரத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து வாடிவாசல் படத்துக்கு செல்வார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாகத் தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கி அங்கே சென்றிருப்பதாக கூறப்படுகிறது.