கங்குவா போஸ்டரா இது? அப்பப்பா வெறித்தனமான லுக்கில் சூர்யா!

'கங்குவா' படத்தில் நடிகர் சூர்யாவின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களை மட்டுமல்ல சினிமா ஆர்வலர்கள் எல்லோரையும் கவர்ந்துள்ளது. வசூலில் இந்த படமும் மாஸ் காட்டுமா..?;

Update: 2023-06-05 07:28 GMT

தமிழ் சினிமாவின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருவதும் அதில் சூர்யா பல கெட்டப்களில் நடிப்பதும் ஏற்கனவே அறிந்த செய்திதான். இந்நிலையில் சூர்யாவின் தோற்றம் தற்போது பலரையும் கவர்ந்துள்ள நிலையில், அதனடிப்படையில் உருவாகக்ப்பட்ட போஸ்டர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. சூர்யாவின் தோற்றம் வெறித்தனமாக இருப்பதாக பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.


தமிழ் சினிமாவின் முன்னணி இடத்துக்கான போட்டியில் இருப்பவர் சூர்யா. இவரின் தற்போதைய படங்கள் மிகவும் பிரம்மாண்டமாகவும் தமிழகத்தைக் கடந்து பார்க்கப்படுபவையாகவும் இருக்கின்றன. இவருக்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் பல ரசிகர்கள் இருக்கிறார்கள். பாலிவுட்டிலும் சூர்யாவுக்கு அறிமுகம் இருக்கிறது. இந்நிலையில் கங்குவா படத்தை இந்தியாவில் அனைவரும் காணும் வகையில் அந்தந்த மொழிகளில் உருவாக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். kanguva suriya 42, kanguva AI images, kanguva fan made Ai images, suriya 42 update, suriya 42 latest news, suriya 42 new update, suriya 42 new poster


ஸ்டூடியோ கிரீன் ஞானவேல்ராஜா தயாரிக்கும் பிரம்மாண்ட படமான கங்குவாவின் பாதி படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புகளுக்கு முன்னதாக சற்று ஓய்வில் இருக்கிறது படக்குழு. அடுத்து முழு நேர ஷெட்யூல் போட்டு படத்தை விரைவில் நிறைவு செய்ய திட்டமிட்டிருக்கிறார் சிவா.


கங்குவா படப்பிடிப்பு நடந்துகொண்டிருக்கும்போதே அதன் தியேட்டர் உரிமை, மொழிமாற்ற உரிமை, டிஜிட்டல், சாட்டிலைட் உரிமைகள் என அனைத்தும் பெரிய விலைக்கு கேட்கப்பட்டு வருகின்றன. இதனால் இந்த படத்தின் தயாரிப்பு செலவு இப்போதே வந்துவிடும் போல இருக்கிறது. ரிலீசுக்கு பிறகு வரும் வசூல் போனஸாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய சினிமாவில் 500 கோடி ரூபாய் வசூல் திரைப் படங்கள் கடந்த சில வருடங்களாக வந்துகொண்டிருக்கின்றன. இந்த படமும் அந்த வரிசையில் சேரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. kanguva suriya 42, kanguva AI images, kanguva fan made Ai images, suriya 42 update, suriya 42 latest news, suriya 42 new update, suriya 42 new poster


பிரம்மாண்ட பொருட்செலவில், சூர்யா நடிக்கும் இந்த படத்தில் அவரின் லுக் மாஸாக இருக்கிறது. அவரின் உருவத்தை வைத்து ஆர்ட்டிபிஸியல் இன்டலிஜெண்ஸ் தோற்றத்தை வைத்து உருவாக்கப்பட்ட இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


தத்ரூபமாக அப்படியே ஒரிஜினலாக இருக்கிறது என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சூர்யாவே இந்த புகைப்படங்களை வைத்து அடேங்கப்பா என அசந்து போய்விட்டாராம். அடுத்த ஆண்டு கோடை விடுமுறைக்கு இந்த படம் ரிலீஸ் செய்யப்படும் என்று கூறப்படுகிறது. விரைவில் இந்த படத்திலிருந்து அப்டேட் வெளியாகும் என்றும் தகவல் வந்துள்ளது. 

Tags:    

Similar News