கமலின் 'விக்ரம்': ஓடிடி ரிலீசிலும் சாதனை..! ஹாட்ரிக் வெற்றி.....வெற்றி ...வெற்றி....

கமல்ஹாசனின் 'விக்ரம்' கடந்த 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி, ஆறேழு நாட்களிலேயே முத்தான மூன்று சாதனைகளைப்படைத்துள்ளது.;

Update: 2022-07-15 02:45 GMT

விக்ரம் பட போஸ்டர்.

நடிகர் கமல்ஹாசனின் 'விக்ரம்' திரைப்படம் கடந்த ஜூன் 3-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்கங்களில் வெளியாகியது. நான்காண்டுகளுக்குப் பிறகு கமல் இத்திரைப்படத்தின் மூலம் திரையில் தோன்றினார். லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் உருவான இப்படத்தில் கமலுடன் நடிகர்கள் ஃபஹத் ஃபாசில், விஜய் சேதுபதி, நரேன் உள்ளிட்டவர்களுடன் சூர்யா கௌரவத் தோற்றத்தில் நடித்தார்.

படம் வெளியான நாள்முதல் வசூலில் ஏறுமுகமாகவே தொடர்ந்து தற்போது, 500 கோடி ரூபாயைக் கடந்து புதியதோர் சாதனையைப் படைத்துள்ளது. இந்தநிலையில், 'விக்ரம்' படம், கடந்த ஜூலை 8-ம் தேதி ஓடிடி தளத்தில் வெளியாகி மூன்று சாதனைகளை படைத்துள்ளது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

ஓடிடியின் வெளியீட்டுக்காக காத்திருந்த ஏராளமான ரசிகர்கள், ஓடிடியில் வெளியான இரவே படத்தைப் பார்த்தனர். முதலாவதாக டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடியில் வார இறுதியில் அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட படமாக 'விக்ரம்' படம் சாதனை புரிந்துள்ளது. இரண்டாவதாக, படத்தை பார்ப்பதற்காக புதிய சந்தாதாரர்களை ஈர்த்த படமாக மாறியுள்ளது. அதேபோன்று, மூன்றாவதாக இதுவரை டிஸ்னி ஓடிடி தளத்தில் வெளியான தமிழ் படங்களில் அதிக நேரம் பார்க்கப்பட்ட படம் என்கிற பெருமையையும் பெற்றுள்ளது.

அவ்வகையில், கமல்ஹாசனின் 'விக்ரம்' திரையரங்க வெளியீட்டில் பெருஞ்சாதனை புரிந்ததோடு, ஓடிடி தளத்தில் வெளியான நான்கைந்து நாட்களிலேயே, முத்தான மூன்று சாதனைகளைப் படைத்த படமாக ஓடிடி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

Tags:    

Similar News