கமல், விஜய், கௌதம் மேனன் திரைப்பட கூட்டணி அமைய போகுதுங்கோ...
Vijay Thalapathy 67 -தமிழ் திரை உலகில் கமல், விஜய், கௌதம் மேனன் திரைப்பட கூட்டணி அமைய போவதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
Vijay Thalapathy 67 -நடிகர் விஜய் தற்போது வம்சி பைடிபள்ளி இயக்கும் வாரிசு படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தளபதி 67' படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்
இந்நிலையில், விஜய் நடிக்கும் புதிய படத்தில் கமல், கெளதம் மேனன் என அல்டிமேட்டான கூட்டணி இணையவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 'பீஸ்ட்' வெளியானதுமே வாரிசு படத்தின் ஷூட்டிங்கில் கலந்துகொண்டார். விஜய். தெலுங்கு இயக்குநர் வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் வாரிசு, அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. 'வாரிசு' படத்தின் ஷூட்டிங் முடிந்ததுமே லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் இணைகிறார் விஜய். ஏற்கனவே மாஸ்டர் படத்தில் மாஸ் காட்டிய இக்கூட்டணி, அடுத்ததாக 'தளபதி 67'-ல் இணைந்துள்ளது எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
vijay thalapathy 67, thalapathy 67 directorஅரசியல் பயணத்தில் இருந்து மீண்டும் சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுத்த கமல், 'விக்ரம்' படம் மூலம் வெறித்தனமான கம்பேக் கொடுத்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படம், ஓடிடியில் வெளியான பின்னரும் திரையரங்குகளில் 100 நாட்கள் ஓடி சாதனைப் படைத்துள்ளது. இதனால் உற்சாகமான கமல், சிவகார்த்திகேயன் நடிக்கும் ஒரு படத்தை தயாரிக்கிறார். அடுத்ததாக சிம்பு நடிப்பில் ஒரு படத்தையும், விஜய் நடிக்கும் ஒரு படத்தையும் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது
கமல் தயாரிப்பில் விஜய் நடிப்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில், மேலும் ஒரு புதிய தகவல் கிடைத்துள்ளது. அதன்படி, கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கலாம் என எதிர்பார்க்கப்படும் படத்தை, கெளதம் மேனன் இயக்குவார் என சொல்லப்படுகிறது. சிம்புவின் வெந்து தணிந்தது காடு படத்தை இயக்கி முடித்துள்ள கெளதம் மேனன், அடுத்து அதே படத்தின் இரண்டாம் பாகம் அல்லது கமல் நடிப்பில் வேட்டையாடு விளையாடு 2ம் பாகம் இயக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
vijay thalapathy 67, thalapathy 67 directorஇந்நிலையில், கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்கலாம் என வெளியாகியுள்ள தகவல், விஜய் ரசிகர்களை குஷியாக்கியுள்ளது. ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் 'யோஹன் : அத்தியாயம் ஒன்று' என ஒரு படம் தொடங்கப்பட்டது. விஜய்யின் ஸ்டைலிஷான போஸ்டர்களுடன் அறிவிப்பு மட்டுமே வெளியானது, அதன் பிறகு எந்த தகவலும் இல்லாமல் போனது. இந்நிலையில், தற்போது கமல் தயாரிப்பில் விஜய் நடிக்கும் படத்தை கெளதம் மேனன் இயக்கலாம் என்ற தகவல் உண்மையாக வேண்டும் என, ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2