ரஜினி சீக்கிரம் குணமடைய வேண்டும்: ம.நீ.ம. கமல் டிவிட்டரில் உருக்கம்

நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப விரும்புகிறேன் என நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Update: 2021-10-30 00:30 GMT

கமல்ஹாசன்

தாதா சாகேப் பால்கே விருது பெற்ற, நடிகர் ரஜினிகாந்த் திடீர் உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்றுமுன் தினம் அனுமதிக்கப்பட்டார்.

முதலில், வழக்கமான உடல் பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டதாக கூறப்பட்டது. பின்னர், அவருக்கு இன்பார்க்ட் எனும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரஜினிகாந்த் குணமடைய வேண்டி முதல்வர் ஸ்டாலின், டிடிவி தினகரன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில், "மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் என் இனிய நண்பர் ரஜினிகாந்த் விரைவில் குணமடைந்து பூரண நலமுடன் வீடு திரும்ப வேண்டுமென விரும்புகிறேன்" என உருக்கமுடன் பதிவிட்டுள்ளார்.

Tags:    

Similar News