லோகி அக்மார்க் 100% கமல் ஃபேன் பாய் தான்பா! இத்தனை ரெஃபரென்ஸா?
லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளிவந்துள்ள லியோ திரைப்படத்தில் எக்கச்சக்க கமல்ஹாசன் பட ரெபரென்ஸ் இருப்பதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.;
லியோ படத்தில் கமல்ஹாசன் நடித்த படங்களின் தொடர்பு காட்சிகள், வசனங்கள் என எக்கச்சக்க ரெஃபரென்ஸ் வைத்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ். இதனை அறிந்துகொண்ட ரசிகர்கள், யப்பா லோகேஷ் நீதான்பா நிஜமான கமல் ஃபேன்பாய் என கொண்டாடி வருகின்றனர்.
பார்த்திபன், சத்யா தம்பதியினருக்கு சித்தார்த், சிண்ட்டு என இரு குழந்தைகள். அமைதியாக மலைப்பிரதேசத்தின் ஒரு பகுதியில் வாழ்ந்து வரும் இவர்களது வாழ்வில் ஒரு இரவில் நடக்கும் செயலால், தங்களது அமைதியையும் மகிழ்ச்சியையும் இழந்து ஓட வேண்டி வருகிறது. பார்த்திபன் ஓடினாரா எதிர்த்து அடித்தாரா? லியோ யார், ஆண்டனி, ஜெரால்டு தாஸ் யார் என ஒரு சூப்பரான கதையை தந்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.
இந்த படத்தில் கமல்ஹாசன் நடித்த படங்களின் ரெஃபரென்ஸ் என ரசிகர்களால் குறிப்பிடப்படும் விசயங்களை இங்கு காண்போம்.
1 மூன்றாம் பிறை
மூன்றாம் பிறை படத்தில் கமல்ஹாசன், ஸ்ரீதேவி வளர்க்கும் ஒரு நாய்க்குட்டிக்கு சுப்பிரமணி என்று பெயர் வைத்திருப்பார்கள். அதனை லியோ படத்தில் ஹைனாவுக்கு வைப்பார் விஜய்.
2. மகாநதி
மகாநதி படத்தில் கமல்ஹாசனும் சுகன்யாவும் ஒரு அழுத்தமான காட்சியில் நடித்திருப்பார்கள். ஒட்டுமொத்த ஆடியன்ஸும் அழும் இடமாக அது இருக்கும். அந்த காட்சியின் முடிவில் அழுகையை நிறுத்த ஒரு அழகான லிப்லாக் முத்தக் காட்சி வரும். இதேமாதிரியான ஒரு காட்சிதான் லியோ படத்தில் விஜய், திரிஷா இடையே வைக்கப்பட்டிருக்கும்
3. சத்யா
திரிஷாவின் பெயர் சத்யா என்பது கமல்ஹாசன் நடித்த சத்யா திரைப்படத்தின் தாக்கம் என்று சொல்கிறார்கள்.
4. குருதிப்புனல்
குருதிப்புனல் படத்தில் வரும் ஒரு காட்சியில் பிரேக்கிங் பாய்ண்ட் பற்றிய டயலாக் ஒன்று இருக்கும். அதாவது எல்லாருக்கும் ஒரு பிரேக்கிங் பாய்ண்ட் இருக்கும் அது உடைந்து வரும்போது அவரது சுயரூபம் வெளிய வரும் என்பதுபோல. அதேமாதிரியான ஒரு வசனம்தான் லியோ படத்திலும் இடம்பெறும். பார்த்திபன்தான் லியோவா என சந்தேகப்படும் கௌதம் மேனன் இந்த வசனத்தைப் பேசுவதாக இருக்கும்.
5 விருமாண்டி
கொலை செய்துவிட்டு அதை நல்லதுக்காக செய்ததாக இருந்தாலுமே அந்த குற்ற உணர்ச்சியை அழகாக வெளிப்படுத்தியிருப்பார் விஜய். தன் குழந்தையைக் கொல்ல வந்தவர்களை கொன்றுவிட்டேன் என இல்லாமல், அய்யோ நம்மால் இத்தனை உயிர் போய்விட்டதே என வருத்தப்பட்டு கலங்கி அழுவார். இதுவும் விருமாண்டி படத்தில் வரும் ஒரு காட்சியை நினைவூட்டுவதாக ரசிகர்கள் கூறுகின்றனர்.
6. விக்ரம்
லியோ படம் எல்சியூவில் வருவதால் விக்ரம் படத்தின் கதாபாத்திரத்தையே உள்ளே கொண்டு வந்திருப்பார் லோகேஷ், அதிலும் கமல்ஹாசன் பேசும் யாரென்று தெரிகிறதா வசனம் அடுத்து இன்னும் சில படங்களில் விஜய், கமல் சேர்ந்து நடிக்க வாய்ப்பு பிரகாசமாக ஆகியிருப்பதை காட்டுகிறது.
7. விக்ரம்
மேலும் விக்ரம் படத்தில் வரும் மாயா கதாபாத்திரம் இதிலும் வரும். லியோ படத்தில் பார்த்திபன் நடத்தி வரும் ஹோட்டலில் யாரோ ஒரு பெண் அமர்ந்து வேவு பார்ப்பதாக ஜனனி, பார்த்திபனிடம் சொல்வார். அவர் Pleasure is Mine என்று எழுதி வைத்துவிட்டு செல்வார்.
8. நம்மவர்
நம்மவர் படத்தில் கமல்ஹாசன் ஓங்கி அடிச்சா ரைட்ல இருந்து பாத்தா சிரிச்சமாதிரியே செத்துப்போயிடுவ என்று ஒரு வசனம் பேசியிருப்பார். அந்த வசனத்தை லியோ படத்தில் விஜய் பேசுவதுமாதிரி காட்சி அமைக்கப்பட்டிருக்கும்.
9 மகாநதி
மகாநதி படத்தில் ஜெயிலுக்குள் இருக்கும் கமல்ஹாசனை பார்க்க வரும் காட்சியைப் போல கிட்டத்தட்ட ஒரு காட்சியை இந்த லியோ படத்திலும் காட்டியிருப்பார்கள்.
கௌதம், வழக்கறிஞருடன் சிறைக்கு வரும்போது அந்த காட்சி அமைப்பு வழக்கமான படங்களைப் போல இல்லாமல், மகாநதி படத்தில் காட்டியது போல உண்மைக்கு நெருக்கமாக அமைந்திருக்கும்.
10. விஸ்வரூபம்
கமல்ஹாசன், விஜய்யுடன் பேசும்போது யாரென்று தெரிகிறதா என்று பேசுவார். அது கமல்ஹாசன் தயாரித்து, இயக்கி, நடித்த விஸ்வரூபம் படத்தில் இடம்பெற்றுள்ள பாடலின் முதல் வரி என்பதால் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
11. பயம் மயம்
தெனாலி படத்தில் ஒரு நீண்ட வசனம் வரும். எல்லாம் சிவமயம் என்று சொல்வார்கள் எனக்கு எல்லாம் பயமயம். இந்த வசனத்தில் கமல்ஹாசன் அது பயம், இது பயம் என அனைத்தையும் பேசிவிடுவார். அதேமாதிரியான பயம் எனும் சொல்லைப் பயன்படுத்தி ஆங்கிலத்தில் எழுதியிருக்கும் பாடல்தான் I am Scared. லியோ படத்தில் வரும் இந்த பாடல் பலரையும் கவர்ந்திழுத்தது.