கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா? அது பொய்யாம் கோபால்!

கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் புதிய படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடிகையும் இருக்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. இது எதுவும் உண்மையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்ற தகவல்களை வெளியில் பரவ விடுவது யார் என்பது தெரியாமல் படக்குழுவும் குழப்பத்தில் இருக்கிறது.

Update: 2023-04-21 15:24 GMT

கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் புதிய படத்தில் கமல்ஹாசன் ஜோடியாக நயன்தாரா நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், இந்த நடிகையும் இருக்கிறார் எனவும் பேசப்பட்டு வருகிறது. இது எதுவும் உண்மையில்லை என்பது ஒருபுறம் இருந்தாலும் இதுபோன்ற தகவல்களை வெளியில் பரவ விடுவது யார் என்பது தெரியாமல் படக்குழுவும் குழப்பத்தில் இருக்கிறது.

சினிமா செய்தியாளர் எனும் போர்வையில் பலர் தங்கள் வாய்க்கு வந்ததை அடித்து விடுவதும் அதனை வைத்து யூடியூப் சேனல்கள் சம்பாதிப்பதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. இதில் ஒன்றுதான் கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் படத்தில் நயன்தாரா நடிக்கிறார் என்பதும்.

யூடியூப் சேனலிடம் தனக்கென ஒரு கமிஷன் வாங்கிக்கொண்டு பல விசயங்களை அடித்து விடும் இவர்களை ரசிகர்களும் கண்டுகொள்வதில்லை. ஆனாலும் இவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதை கேட்கலாமே என வீடியோ பார்ப்பதால் யூடியூப் சேனல்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கிறது.

லியோ படத்தில் என்ன நடக்கிறது என்பதை லோகேஷ் கனகராஜுக்கே தெரியாமல் இவர்கள் யூடியூபில் பதிவிடுகிறார்கள். விஜய்க்கும் இன்னொரு நடிகைக்கும் நெருக்கம் எனவும், அதனால் அவரது மனைவியுடன் விவாகரத்து வரை போனது எனவும் யூடியூபில் பேசியது மட்டுமின்றி, சூர்யா அவரது அப்பாவுடன் சண்டை போட்டுக் கொண்டு மும்பை சென்றுவிட்டார் என்றும் கிளப்பி விட்டனர்.

இதுமட்டுமின்றி கமல்ஹாசன் எப்போதும் ஆண்ட்ரியா வீட்டிலேயே கிடையாய் கிடக்கிறார் எனவும் பேசி யூடியூபில் வியூஸ்களை பெறுகின்றனர். மேற்சொன்ன எதுவுமே உண்மை இல்லை. கமல்ஹாசன் இந்தியாவிலேயே இல்லை. விஜய் மனைவி குழந்தைகளுடன் வெளிநாடு டூர் சென்றிருக்கிறார், சூர்யா தனது ஹிந்தி பட தயாரிப்பு வாய்ப்புகளுக்காக மும்பை சென்றார் என அனைத்தும் சில நாட்களிலேயே வெளிவந்துவிட்டது. ஆனாலும் இவர்கள் ஏதாவது பூதாகரமாக பேசி அதை எதிர் தரப்பு ரசிகர்களை வைத்து டிரெண்ட் ஆக வைத்து காசு சம்பாதிக்கிறார்கள்.

சரி அப்போ நயன்தாரா கமல்ஹாசன் ஜோடியாக நடிப்பதுவும் பொய்யா என்றால் அது குறித்த தகவல்கள் இதுவரை தெரியவில்லை. ஏனென்றால் இந்தியன் 2 படத்துக்கு பிறகு கமல்ஹாசன் யார் படத்தில் நடிப்பது என்றே இன்னும் குழப்பத்தில் இருக்கிறது. ஹெச் வினோத், மணிரத்னம் இரண்டு பேரும் கதையை தயார் செய்து ஸ்கிரிப்ட் பண்ணி வைத்துக்கொண்டுள்ளனர். அவர்கள் கதாநாயகி புக் செய்யும் ஸ்டேஜ்க்கே இன்னும் வரவில்லை என்கிறார்கள்.

அப்படி என்றாலும் நயன்தாராவை நிச்சயமாக மணிரத்னமும் சரி, கமல்ஹாசனும் சரி தனது படத்தில் நடிக்க வைக்க நினைக்க மாட்டார்கள். இவர்கள் புதுமுகமான நடிகைகள் அதுவும் நன்கு நடிக்க தெரிந்த நடிகைகளையே தேர்வு செய்வார்கள். அநேகமாக ஸ்டார் நடிகைகள் இல்லாமல் சாதாரணமாக கேரக்டர் ஆர்ட்டிஸ்டாக நடிக்கத் தெரிந்த நடிகைகளையே முன்னுரிமை கொடுத்து ஏற்பார்கள் என்று தகவல் தெரிவிக்கிறது. என்ன இருந்தாலும் கமல்ஹாசன் - மணிரத்னம் தரப்பு இதை வெளியிடாமல் நாமே ஏதாவது ஒன்றை பேசிக் கொண்டிருப்பது அர்த்தமற்றது. 

Tags:    

Similar News