கமல் - மணிரத்னம் படத்தில் இப்படி ஒரு விசயம் இருக்கா?

கமல்ஹாசனும் மணிரத்னமும் நீண்ட காலத்துக்கு பிறகு இணையும் படத்தில் ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கிறது.

Update: 2023-11-09 10:30 GMT

கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து 6 மாத இடைவெளியில் வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதற்கடுத்த 6 மாதத்திலேயே கமல்ஹாசன் - மணிரத்னம் இணையும் தக் லைஃப் திரைப்படமும் வெளியாகும் என்று பேசப்பட்டு வருகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

கட்சி தொடங்கி அரசியல்வாதியாக மாறியிருந்த கமல்ஹாசனுக்கு விக்ரம் படத்தின் மிகப் பெரிய வெற்றி மீண்டும் சினிமாவை 24 மணி நேரமும் நேசிக்க வேண்டும் என்கிற கடமையை அறிவுறுத்தியது போல. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மிகப் பெரிய வசூல் சக்ரவர்த்தியான கமல்ஹாசன் மீண்டும் திரைத்துறையை ஆள ஆளவந்தானாக கிளம்பியிருக்கிறார். இப்போது பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கருடன் இந்தியன் 2, 3, இந்திய சினிமாவின் நேர்த்தியான இயக்குநர் மணிரத்னம், அகில உலக இசை ஜாம்பவான் ஏ ஆர் ரஹ்மான், உலக நாயகன் கமல்ஹாசன் இணையும் தக் லைஃப் திரைப்படம், வளர்ந்து வரும் இளம் இயக்குநரான ஹெச் வினோத்துடன் இணையும் படம், தெலுங்கில் பிரபாஸ் நடிக்கும் கல்கி திரைப்படம் என அடுத்தடுத்து பல படங்களில் ஒப்பந்தமாகி கடுமையான பிஸி ஷெட்யூலில் இருக்கிறார் கமல்ஹாசன்.

பிக்பாஸ் சர்ச்சைகள்

இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் வாரா வாரம் அனைவரது இல்லத்துக்கும் சென்றுவிடுகிறார். நவம்பர் 7ம் தேதி அவரது பிறந்தநாள் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அவரின் சினிமா ரசிகர்களும், நற்பணி நாயகர்களான அரசியல் தொண்டர்களும் பிரமாதப்படுத்திவிட்டார்கள்.

இந்நிலையில், மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிக்கும் படத்துக்கு பெயர் வெளியிட்டு அதனுடன் பர்ஸ்ட் லுக் டீசரும் வெளியிட்டார்கள். அதில் கமல்ஹாசன் அட்டகாசமான சண்டைக் காட்சி ஒன்றை நடத்தியிருந்தார். அன்பறிவ் மாஸ்டர்கள் இணைந்து உருவாக்கிய இந்த சண்டைக்காட்சி மிகப் பிரம்மிப்பாக அமைந்திருந்தது.

இந்தியன் 2 மற்றும் 3

கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்திலிருந்து ஸ்டில்கள் சில இணையத்தில் வெளியாகியிருந்தது. ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தின் காட்சிகள் அதிகம் எடுக்கப்பட்டு விட்டதாலும் அவை அனைத்துமே படத்துக்கு தேவையான காட்சிகள் என்பதாலும் அவற்றை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.

இந்தியன் 2 மற்றும் இந்தியன் 3 ஆகிய படங்கள் அடுத்தடுத்து 6 மாத இடைவெளியில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. அதிலும் இப்போது எடுத்துள்ள காட்சிகளை வைத்துக் கொண்டு இந்தியன் 3 படத்தை முழுவதுமாக எடிட் செய்துவிட முடியும். ஆனால் இந்தியன் 2 படத்துக்கு 30 நிமிட காட்சிகள் தேவைப்படுகிறதாம். அதற்காக கமல்ஹாசனிடம் 35 நாட்கள் கால்ஷூட் கேட்டிருக்கிறார்கள்.

இதில் பெரும்பான்மையான நாட்கள் சண்டைக் காட்சிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்ட ஒரு சண்டைக் காட்சி இந்தியன் 3 படத்துக்கு போய்விட்டதால், இந்த படத்துக்கு ஒரு காட்சி வேணும் என புதிதாக திட்டமிட்டு எடுத்து வருகிறார்கள் என்று தெரிகிறது.

ஷூட்டிங் எப்போது?

கமல்ஹாசன் பங்குபெறும் காட்சிகளின் படப்பிடிப்பு நவம்பர் 7ம் தேதி தொடங்கி டிசம்பர் 15ம் தேதியுடன் நிறைவடைய வேண்டும் என திட்டமிட்டுள்ளார்கள். அதற்கிடையில் ஹெச் வினோத் படம் கொஞ்சம் தாமதமாகியுள்ளது. டிசம்பர் 15 முதல் அந்த படமும் துவங்கும் என்றும், கமல்ஹாசன் எப்போது பங்கேற்பார் என்பது பின்னர்தான் தெரியவரும் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்துதான் மணிரத்னம் - கமல்ஹாசன் - ஏ ஆர் ரஹ்மான் இணையும் பிரம்மாண்ட படம் வரும் பிப்ரவரி 2024 முதல் தொடங்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஹெச் வினோத் படத்துக்கு 40 நாட்களே போதும் என்று கூறியிருப்பதாகவும் தகவல் உண்டு. பிப்ரவரியில் ஆரம்பிக்கும் மணிரத்னம் திரைப்படம் ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் இரண்டாவது வாரம் வரை நீடிக்கும் என்கிறார்கள். 6 மாதங்களில் படப்பிடிப்பை முடித்துக்கொண்டு போஸ்ட் புரொடக்ஷன் பணிகளைத் துவங்கிவிடுவார்கள்.

படம் ரிலீஸ்

இந்தியன் 2 திரைப்படம் ஏப்ரல் மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ள நிலையில், இந்தியன் 3 படத்தை வரும் 2024 தீபாவளிக்கு ரிலீஸ் செய்யலாமா என யோசித்து வருகிறதாம் தயாரிப்பு தரப்பு. ஒருவேளை இது நடக்கும் பட்சத்தில் அடுத்த படமான கமல்ஹாசன் 234 படம் 2025 பொங்கல் அல்லது அந்த ஆண்டு கோடை விடுமுறையின்போது விருந்தாக படைக்கப்படும் என்றும் தெரிகிறது. 

Tags:    

Similar News