Indian 2 மீண்டும் பெண் வேடத்தில் கமல்ஹாசன்!

கமல்ஹாசன் மீண்டும் பெண் வேடத்தில் நடிக்க இருக்கிறாராம்.;

Update: 2023-09-15 05:30 GMT

இந்தியன் 2 படத்தில் ஷங்கர் இயக்கத்தில் நடித்து வரும் கமல்ஹாசன் இந்த படத்தில் Kamal Haasan Indian 2 Lady Getup ஒரு லேடி கெட்டப்பில் தோன்ற இருக்கிறாராம். இதனால் ரசிகர்கள் குதூகலமாகி இருக்கிறார்கள்.

தமிழ் சினிமாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று இந்தியன் 2. கடந்த சில ஆண்டுகளாகவே இந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. முதலில் சாதாரணமாக துவங்கிய இந்த படம் பட்ஜெட் பிரச்னை, கிரைன் விபத்து பிரச்னை, ஷங்கர் - லைகா பிரச்னை, பண பற்றாக்குறை பிரச்னை என தொடர்ந்து தாமதமாகி வந்தது. பின்னர் இந்த படத்தில் ரெட் ஜெயண்ட் மூவிஸ் பார்ட்னராக சேர்ந்த பிறகு படம் திரும்பவும் ஆரம்பிக்கப்பட்டது.

கமல்ஹாசனின் அட்டகாசமான தோற்றத்தில், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி ஷங்கர், சித்தார்த், காளிதாஸ் ஜெயராம், குல்சன் குரோவர், விவேக்(Late), நெடுமுடிவேணு (Late), பாபி சிம்ஹா சமுத்திரக்கனி, குரு சோமசுந்தரம், டெல்லி கணேஷ், ஜெயபிரகாஷ், மாரிமுத்து, மனோபாலா (Late), ஜார்ஜ் மரியான் என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்து வருகிறது.

இந்தியன் படத்தின் கதாபாத்திரமான சேனாதிபதியுடன் புதிய கதாபாத்திரங்கள் தோன்றும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது. இந்த படத்தின் இரண்டாம் பாகமே இரண்டு பாகங்களாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தை வரும் 2024 பொங்கல் தினத்திலும், அடுத்த பாகத்தை அடுத்த ஆண்டும் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

கமல்ஹாசன் இந்த படத்தில் மிகவும் மெனக்கெட்டு வயதான கெட்டப் மற்றும் இளமையான கெட்டப் இரண்டிலும் நடித்திருக்கிறார். இளமையான கெட்டப்புக்காக ஹாலிவுட்டில் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி கமல்ஹாசனை 25 வயதுள்ள இளைஞராக காட்ட இருக்கிறார்களாம். அதுமட்டுமின்றி முக்கியமான ஒரு காட்சியில் கமல்ஹாசன் பெண் வேடத்தில் வருகிறார்.

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸாக வரும் இந்த தோற்றம் Kamal Haasan Indian 2 Lady Getup ஒரு வேடமாக வருகிறதாம். அதாவது கதாபாத்திரமாக இல்லாமல், முக்கியமான சூழ்நிலையில் மாறுவேடத்தில் செல்லும் வகையில் இந்த தோற்றம் படத்தில் இடம் பெறுகிறதாம். 

Tags:    

Similar News