யாரிது கமல்ஹாசனா? அலற விட்ட ஆண்டவர்!
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட டிரெய்லர்களே வெளியாகின.;
கல்கி பட டிரெய்லரில் உலக நாயகன் கமல்ஹாசனைப் பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளனர். அவரின் ஹீரோ இமேஜையும் பொருட்படுத்தாது இப்படி ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறாரே என அவர்கள் கொண்டாடி வருகின்றனர்.
கல்கி 2898ஏடி எனும் பெயரில் கமல்ஹாசன், பிரபாஸ், அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி, அன்னா பெண், பசுபதி உள்ளிட்ட பல நடிகர்கள் இணைந்து நடித்துள்ள திரைப்படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழி ரசிகர்களும் ஆர்வத்துடன் காத்திருந்த நிலையில், முதலில் ஹிந்தி மற்றும் தெலுங்கு பட டிரெய்லர்களே வெளியாகின. இதனால் தமிழ் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். அதேநேரத்தில் அடுத்தடுத்து மலையாள மொழி டிரெய்லர் வெளியானது. அதனைத் தொடர்ந்து தமிழ் மொழி டிரெய்லரும் வெளியானது. இந்த டிரெய்லரைப் பார்த்த பலருக்கு இதில் கமல்ஹாசன் இடம்பெறவில்லை என்றே தோன்றியது.
கமல்ஹாசன் எங்கே என்று தேடிய பலரும் ஏமாந்து போயினர். ஆனால் தீவிர கமல்ஹாசன் ரசிகர்கள் அவரைக் கண்டுபிடித்துவிட்டனர். அவரின் தோற்றமே வேறுமாதிரியாக மாறியிருக்கிறது இந்த படத்தில். அவர் வருவதோ வெறும் 3 நொடிகள்தான். அதிலும் அவர் டயலாக் அவரது குரலில் கொஞ்சம் மாற்றி அமைக்கப்பட்டு வெளியாகியிருக்கிறது. அவரை பலரும் கண்டுபிடிக்க முடியாமல் இருந்த நிலையில், சிலர் அவர்தான் கமல் என எடுத்து போட நேற்று நள்ளிரவு முதல் திரைத் தீப்பிடித்து எரிகிறது. சமூக வலைத்தளங்களில் கமல்ஹாசன் பற்றிய பேச்சே முன்னணி செய்தியாக இருக்கிறது.