கமலுடன் மீண்டும் இணையும் காளிதாஸ்!

காளிதாஸ் ஜெயராமன் மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து கமல்ஹாசன் படங்களில் நடிப்பதற்கு அவரின் தந்தை கமல்ஹாசனின் நண்பர் என்பது காரணமல்ல என்பது முக்கியமான விசயமாகும்.;

Update: 2023-04-05 14:10 GMT

கமல்ஹாசனுடன் மீண்டும் இணைகிறார் ஜெயராமின் மகன் காளிதாஸ். ஏற்கனவே விக்ரம் படத்தில் நடித்த அவர் தற்போது இந்தியன் 2 படத்திலும் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் மணிரத்னம் இயக்கும் புதிய படத்தில் காளிதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரித்து நடித்த படம் விக்ரம். இந்த படத்தின் மூலம் மீண்டும் தான் யார் என்பதை தமிழ் சினிமாவுக்கு மட்டுமல்ல இந்திய சினிமாவுக்கே உணர்த்தினார் கமல்ஹாசன். இந்த படத்துக்கு பிறகு கமல்ஹாசனின் மார்க்கெட் வேற லெவலுக்கு உயர்ந்துவிட்டது. அவரது அடுத்தட்ட லைன் அப்கள் கோலிவுட்டில் உற்றுப் பார்க்கப்பட்டு வருகிறது. ஷங்கர், மணிரத்னம், ராஜமவுலி என அடுத்தடுத்து அவர் பண்ணப்போகும் படங்கள் வேற லெவலுக்கு இருக்கும். லோகேஷ் கனகராஜ், ஹெச் வினோத், பா ரஞ்சித், வெற்றிமாறன் என மிகச் சிறந்த இயக்குநர்கள் அனைவரிடமும் கதை தயார் செய்ய சொல்லியிருக்கிறார்.

விக்ரம் படத்தில் கமல்ஹாசன் மகனாக நடித்திருப்பவர் காளிதாஸ் ஜெயராமன். அவர் இப்போது இந்தியன் 2 படத்திலும் நடிக்கிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது. இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்னை, திருப்பதி ஆகிய நகரங்களில் எடுக்கப்பட்டு வந்தது. பின் வெளிநாட்டிலும் படமாக்கப்பட்டது. தைவானில் 8 நாட்கள் ஷூட்டிங் செய்கின்றனர் இந்தியன் 2 படக்குழு. இப்போது தைவானில் ஷூட்டிங் முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு செல்கிறார்களாம்.

இந்தியன் 2 படத்தின் தென்னாப்பிரிக்கா ஷெட்யூல் மொத்தம் 2 வாரங்கள் நடக்கிறதாம். முழுக்க முழுக்க கமல்ஹாசன் நடிக்கும் காட்சிகள் மட்டுமே அங்கு படமாக்கப்படுகிறதாம். இதில் ஒரு சண்டைக் காட்சியும், ஒரு பாடல் காட்சியும் அடங்கியுள்ளது. ஷங்கர், கமல்ஹாசன் தவிர மற்ற யாரெல்லாம் தென்னாப்பிரிக்கா செல்கிறார்கள் என்கிற விவரங்கள் வெளியாகவில்லை.

இந்தியன் 2 படத்தைத் தொடர்ந்து கமல்ஹாசன் ஹெச் வினோத் இயக்கத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. அதே நேரம் பொன்னியின் செல்வன் 2 படத்தை ரிலீஸ் செய்து விட்டு அடுத்ததாக கமல்ஹாசன் புராஜக்டுக்கு செல்கிறார் என்கிறார்கள். விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா உள்ளிட்டோருடன் இந்தியா முழுக்க புரமோசன் செய்ய பயணிக்கத் திட்டமிட்டுள்ள படக்குழு வரும் 9ம் தேதி முதல் புரமோசனைத் துவங்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காளிதாஸ் ஜெயராமன் மணிரத்னம் இயக்கும் படத்திலும் கமல்ஹாசனுடன் சேர்ந்து நடிக்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அடுத்தடுத்து கமல்ஹாசன் படங்களில் நடிப்பதற்கு அவரின் தந்தை கமல்ஹாசனின் நண்பர் என்பது காரணமல்ல என்பது முக்கியமான விசயமாகும். காரணம் இதில் எந்த படத்திலும் கமல்ஹாசன் நேரடியாக காளிதாஸை கமிட் செய்யவில்லை. இந்தியன் 2வில் அவர் நடிக்கிறாரா என்பது இன்னமும் உறுதியாகவில்லை. 

Tags:    

Similar News