காஜல் அகர்வால் படத்திலேயே இல்லை! இந்தியன் 2 அப்டேட் கொடுத்த ஷங்கர்...!

இந்தியன் 3 திரைப்படத்தில்தான் காஜல் அகர்வாலின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் இடம்பிடித்துள்ளன என்கிறார்கள்.;

Update: 2024-06-03 07:15 GMT

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தியன் 2 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த ஜூன் 1ம் தேதி நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், நெல்சன் திலீப்குமார் உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றிருந்தனர். இதில் பேசிய இயக்குநர் ஷங்கர், படத்தில் காஜல் அகர்வால் இல்லை என்று தெரிவித்துள்ளார்.

விக்ரம் படம் மூலம் லோகேஷ் கனகராஜும், ஜெயிலர் படம் மூலம் நெல்சன் திலீப்குமாரும் மிகப் பெரிய இயக்குநர்களாக இந்தியா முழுமைக்கும் அறியப்படுகின்றனர். இவர்கள் தவிர சிம்புவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டிருந்தார். சிம்பும் கமல்ஹாசனுடன் ஏற்கனவே தக் லைஃப் படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிப்பில் சிம்பு 48 படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.


கமல்ஹாசன் நடிப்பில் விரைவில் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் முதல் பாடல் பாரா முந்தைய வாரமும், நீலாற்பம் பாடல் இந்த வாரமும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், இன்று இசை வெளியீட்டு விழா நடைபெறும் இதே நேரத்தில் அனைத்து பாடல்களையும் வெளியிட்டுள்ளது படக்குழு. இதனால் கமல்ஹாசன் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இவர்கள் மட்டுமின்றி அனிருத் ரசிகர்கள், தமிழ் சினிமா இசை ரசிகர்கள் அனைவருமே மகிழ்ச்சியடைந்துள்ளனர். பாடல்கள் அனைத்துமே சிறப்பாக இருப்பதாக கருத்து தெரிவித்துள்ளனர்.


பா விஜய் வரிகளில் போர் பாடலாக பாரா பாடல் அமைந்துள்ளது. விடுதலை போராட்ட காலத்துக்கு முந்தைய காலக்கட்டத்தை இது காண்பிக்கும் என்று கூறப்படுகிறது.

அடுத்த பாடலான காலண்டர் பாடல், அழகான பெப்பி இசையில் பார்ட்டி பாடலாக வந்துள்ளது. இந்த பாடலை கபிலன் வைரமுத்து எழுதியுள்ளார். நீலோற்பம் தாமரை வரிகளில் இன்னுமொரு இனிமையான கீதம் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

ஷகா ஷகா எனும் பின்னணி இசை, அனிருத்தின் அட்டகாசமான பிஜிஎம் இது. தாத்தா வர்றாரு ஃபாஸ்ட் பீட் பாடலாக அனைவரையும் ஆட்டம் போட வைக்கும் ஒரு பாடலாக இது அமைந்துள்ளது.

இசை வெளியீட்டு விழாவை மிகவும் பிரம்மாண்டமாக நடத்த படத் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளது. முன்னதாக லைகா சுபாஷ்கரன், ரஜினிகாந்த், பாலிவுட் நடிகர் ஷாருக்கான், டோலிவுட் நடிகர்கள் சிரஞ்சீவி, ராம்சரண் உள்ளிட்டோரும் இந்த விழாவில் கலந்து கொள்ள ஏற்பாடுகள் நடந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அவர்களில் பெரும்பாலானோர்கள் வரவில்லை என்பது ரசிகர்களுக்கு சற்று அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது.


இந்த விழாவில் பேசிய இயக்குநர் ஷங்கர், இந்த படத்தில் இந்தியன் 2 திரைப்படத்தில் காஜல் அகர்வால் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஏற்கனவே இந்தியன் 2 டீசர் வெளியான போதும் அவர் எங்கேயுமே தென்படவில்லை. ஏற்கனவே ரசிகர்கள் இதுகுறித்த சந்தேகங்களைத் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்த படத்தில் காஜல் அகர்வால் இல்லை என்பதை ஷங்கரே தெரிவித்துள்ளார்.

இந்தியன் 3 திரைப்படத்தில்தான் காஜல் அகர்வாலின் ஆக்ஷன் காட்சிகள் அனைத்தும் இடம்பிடித்துள்ளன என்கிறார்கள். இந்தியன் 3 திரைப்படம் அடுத்த ஆண்டுதான் வெளியாகும் என்று கூறப்படுகிறது. 2025 ஜனவரியில் இந்த படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு வருகின்றனராம்.

ஜூலை மாதம் வெளியாக இருக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் மீது இந்தியாவே கண் வைத்திருக்கிறது என்கிறார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பிரம்மாண்டமாக வெளியிட திட்டமிட்டிருக்கின்றனர்.

Tags:    

Similar News