"காத்துவாக்குல ரெண்டு காதல்" படத்தின் செட்டில் இருந்து
இப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டதாக சமந்தா தெரிவித்து சில அற்புதமான புகைப்படங்களை வெளியிட்டுளார்;
காத்துவாக்குல ரெண்டு காதல் இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா, சமந்தா நடிக்கும் காதல் திரைப்படம். இப்படத்தினை தயாரிப்பாளர் லலித் குமார் தயாரிக்க, இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார்.
இத்திரைப்படம் இயக்குனர் விக்னேஷ் சிவன், விஜய் சேதுபதி மற்றும் நயன்தாராவின் கூட்டணியில் இரண்டாவது படமாகும். இவர்களது கூட்டணியில் உருவான முதல் திரைப்படமான நானும் ரவுடி தான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை அளித்தது.
இந்த படம் விக்னேஷ் சிவன் எழுதி இயக்கிய தமிழ் காதல் நகைச்சுவை திரைப்படமாகும். கதை நவீன பார்வையாளர்களை கவர்ந்த ஒரு முக்கோண காதலை உள்ளடக்கியது. ரவுடி பிக்சர்ஸ் மற்றும் செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை உதயநிதி ஸ்டாலின் தனது ரெட் ஜெயண்ட் மூவிஸ் மூலம் விநியோகிக்கிறார்.