ரவுடி பேபி சூர்யா மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய நீதிபதி மறுப்பு
ரவுடி பேபி சூர்யா மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர் நீதிபதி மன்ற நீதிபதி மறுத்துள்ளார்.
ரவுடி பேபி சூர்யா மீதான குண்டர் சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்து விட்டது.
டிக் டாக் என்றொரு செயலி பிரபலமாக இருந்த காலகட்டத்தில் அதில் கன்னா பின்னா என்று வீடியோ பதிவுகளையும் பல்வேறு பிரமுகர்களை தாக்கியும் தங்களது சொந்த வாழ்க்கை பற்றிய வீடியோக்களையும் பதிவிட்டு அத்துடன் ஆபாசமாக சிலருடன் சண்டை போட்டும் பிரபலமானவர்கள் ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி, மதுரையை சேர்ந்த சிக்கந்தர்ஷா மற்றும் தூத்துக்குடி மாவட்டம் உடன்குடியைச் சேர்ந்த ஜி.பி முத்து.
ரவுடி பேபி சூர்யா என்கிற சுப்புலட்சுமி திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்தவர். ஆனால் இவர் கோவை பகுதியில் குடியேறி அங்கு பிரபலமாகி உள்ளார். ஒரு கட்டத்தில் இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதால் இவர்கள் அனைவரும் யூடியூபா சேனலுக்கு மாறினார்கள். இதில் ஜி. பி. முத்து ரவுடி பேபி சூர்யாவுடன் ஏற்பட்ட முதல் காரணமாக தனியாக செயல்பட தொடங்கினார்.
ஆனால் ரவுடி பேபி சூர்யாவும் சிக்கந்தர் சாவும் அடிக்கடி யூடியூப்சேனல்களில் ஆபாச வீடியோக்களை பதிவிட்டு ஆபாச பேச்சுகளை பேசியும் தொடர்ந்து செயல்பட்டு வந்தார்கள். இவர்களின் இந்த செயலுக்கு ஏராளமான ரசிகர்கள் இருந்தாலும் இவர்களது செயல்பாடுகள் மீது மக்களுக்கு அதிருப்தியும் ஏற்பட்டது. இதன் காரணமாக ஏராளமான புகார்களும் வந்தன.
ரவுடி பேபி சூர்யா சிக்கந்தர் ஷா என்கிற சிக்கா இவர்களுக்கு திருமணம் ஆகி தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்தாலும் இணைந்து டூயட் பாடினார்கள். அவ்வப்போது தகராறு செய்து கொண்டனர் .ஆபாசமாக திட்டிக் கொண்டும் அதனை வீடியோக்களாக பதிவிட்டனர். இவர்களது செயல்பாடுகள் மீது அதிருப்தி அடைந்த சமூக ஆர்வலர்கள் சிலர் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் செய்தனர். இதனைத் தொடர்ந்து கோவை சைபர் கிரைம் போலீசார் கடந்த ஜனவரி மாதம் ரவுடி பேபி சூர்யா மற்றும் சிக்கா ஆகிய இருவரையும் கைது செய்து நீதிமன்ற காவலில் வைத்தனர். பின்னர் இருவரும் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ள இவர்கள் தங்கள் மீதான குண்டர் தடுப்பு சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் எனக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.இந்த மனுக்கள் மீது விசாரணை நடைபெற்றது. மனுக்களை விசாரித்த நீதிபதி இவர்கள் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பான வீடியோக்களை பார்த்தனர். அவை ஆபாசமாகவும் எல்லை மீறிய வகையில் இருந்ததால் நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஆதலால் அவர்கள் அவர்கள் மீதான குண்டர் தடுப்பு சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்து விட்டனர். வழக்கு விசாரணை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.