ரஜினி மகள் வீட்டில் நகை திருட்டு சம்பவம்: கைதான இருவருக்கும் ஜாமீன்
நடிகர் ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவின் வீட்டில் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட விவகாரத்தின் கைதான இருவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.;
பைல் படம்.
கடந்த மாதம் நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா, தனது வீட்டில் இருந்த வைர நகைகள், பழங்கால தங்கநகைகள், நவரத்தினங்கள், ஆவணங்கள் என சுமார் 60 சவரன் நகைகள் காணாமல் போனதாக சென்னை தேனாம்போட்டை காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த வழக்கில் ஐஸ்வர்யா வீட்டில் வேலை செய்த ஈஸ்வரி மற்றும் கார் ஓட்டுநர் வெங்கடேஷ், வினால்க் சங்கர்நவாலி ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து எவ்வளவு நகைகள் திருடப்பட்டது குறித்தும், திருடப்பட்ட நகைகள் வாங்கியதற்கான ரசீது உள்ளிட்ட ஆவணங்கள் குறித்தும் ஐஸ்வர்யாவிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
இந்நிலையில், கைதான பணிப்பெண் ஈஸ்வரி மற்றும் ஓட்டுநர் வெங்கடேஷ் ஆகிய இருவருக்கும் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் இவர்கள் இருவருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.