இன்றைக்கு பிறந்த நாள் கொண்டாடும் சூர்யா நடிக்கும் பட டைட்டில் ஜெய் பீம்

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக உங்கள் சினிமா டீம் தரும் ஸ்பெஷல் ரிப்போர்ட்.

Update: 2021-07-23 13:07 GMT

 சூர்யா நடிக்கும் ஜெய் பீம்

இன்றைக்கு பிறந்த தினம் கொண்டாடும் சூர்யா நடிக்கும் ஒரு பட டைட்டில் ஜெய் பீம் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதை ஒட்டி நம் இன்ஸ்டாநியூஸ் வாசகர்களுக்காக உங்கள் சினிமா டீம் தரும் ஸ்பெஷல் ரிப்போர்ட்.


ஜெய் ஹிந்துக்கு முன்பே தோன்றிய ஜெய் பீம். ஆண்டு 1818 ஜனவரி 1 , பிரிட்டிஷ் படையினருக்கும், மராத்திய படையயை சேர்ந்த பேஷ்வா என்கிற உயர்ஜாதி படையினருக்கும் ஒரு பெரும் போர் நடக்கிறது. அது குறித்து கொஞ்சம் விரிவாகச் சொல்வதானால் 1800-களில் பார்ப்பன பேஷ்வாக்கள் மராட்டியத்தை ஆண்டு வந்தனர்.

அப்போது,இந்துமத வேதப்பண்பாடுகளும், மனுசாஸ்திரக் கொடுமைகளும் மிகக்கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டன. தலித்துகள் பகலில் தெருக்களில் நடமாடக்கூடாது. நடந்தாலும் தெருவில் எச்சில் துப்பிவிடக்கூடாது. எச்சிலைத் துப்புவதற்கு தம் கழுத்தில் ஒரு மண் கலயத்தைக் கட்டித்தொங்க விட்டுக்கொண்டு வரவேண்டும். தலித்களின் கால் தடத்தைப் பார்ப்பனர்கள் மிதித்தால் பார்ப்பனர்களுக்குத் தீட்டாகிவிடும்.

அதனால் அவர்கள் பின்பகுதியில் ஒரு பனை ஓலையைக் கட்டிக்கொண்டு நடக்க வேண்டும். அந்தப் பனைஓலை தனது கால் தடத்தை அழித்துக்கொண்டே வரவேண்டும்.தலித்கள் கல்வி கற்கக்கூடடாது.ஆயுதம் வைத்திருக்கக் கூடாது. இவைபோன்ற எண்ணற்ற சாஸ்திர, சம்பிரதாயக் கொடுமைகளுக்கு எதிராக, தாழ்த்தப்பட்ட மகர் மக்களும்,பிற்படுத்தப்பட்ட மக்களும், சிறுபான்மை இஸ்லாமியரும் இணைந்து ஆயுதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

"பீம்" ஆற்றின் ஒரு கரைக்கும் மறு கரைக்கும் நடுவில் நடக்கும் அந்த போரின் பெயர் "கோரேகாவுன் போர் (Koregaon Battle )". ஆம்.. முதல் முறையாக தீண்டத்தகாதவர்கள் என்று கருதப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட மஹர் இன சிப்பாய்கள் முதல் முறையாக மராத்தியர்கள் பக்கம் போரிடாமல் பிரிட்டிஷ் படையினருடன் சேர்ந்து பேஷ்வாக்களுக்கு எதிராக போரிட்டார்கள்.

பீம் ஆற்றின் ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு செல்ல மஹர் சிப்பாய்கள் ஆற்றைகடக்கும் போது எழுப்பிய போர் முழக்கம்தான் "ஜெய் பீம்". 25000 பேர்கள் கொண்ட மராத்திய படையை வெறும் 900 மஹர் சிப்பாய்கள் கொண்ட பிரிட்டிஷ் படை வீழ்த்தி போரில் வெற்றி கொண்டது. இந்த போர் தலித்துக்கள் செய்த முதல் போர் புரட்சியாக கருதப்படுகிறது. இதில் பிரிட்டிஷ் படையின் சார்பில் 49 பேர் கொல்லப்பட்டனர் அதில் 22 பேர் மஹர் சிப்பாய்கள். அவர்கள் பெயர்கள் பாதிக்கப்பட்ட ஒரு போர் நினைவு தூண் புனேயில் இருக்கிறது

அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அந்த நினைவிடத்திற்கு ஜனவரி 1, 1927 ஆம் ஆண்டு முதல் முறை சென்று பார்த்து தன் அஞ்சலியை செலுத்தினார். "ஜெய் பீம்" என்று முழங்கினார் .

அன்று ஒலித்தாலும் அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடத்தின் போது மறுபடியும் "ஜெய் பீம்" ஒலித்தது. அன்றில் இருந்து இன்று வரை மஹாராஷ்டிரா மற்றும் வடஇந்தியாவில் இந்த முழக்கம் வணக்கம் சொல்கிற முறையில் தலித் ஆர்வர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.


இப்பேர்பட்ட தலைப்பை தன் படத்துக்கு சூட்டி விரைவில் அரசியலில் குதிக்க சூர்யா ஆயத்தமாகி விட்டார் என்பதையும் நம்ம சினிமா டீம் உறுதிபடச் சொல்கிறது என்பதுதான் அடிசினல் எக்ஸ்குளூசிவ் ரிப்போர்ட் ( கொளுத்திப்போடு)

Tags:    

Similar News