இறைவன் பட ரகசியத்தை உடைத்த ஜெயம் ரவி! அப்படி ஒன்னு உலகத்துலேயே நடக்கலயாம்!

இறைவன் படத்தில் ஒரு காட்சியைப் பற்றி விவரித்த ஜெயம் ரவி.

Update: 2023-09-25 07:00 GMT

இறைவன் படத்தில் சார்லி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அவர் நடித்த காட்சி ஒன்றை விவரித்த ஜெயம் ரவி அப்படி ஒரு விசயம் இந்த உலகத்துல வேறு எந்த படத்துலயும் வந்ததில்லை என்று கூறியுள்ளார். இதனால் அதை காண ரசிகர்கள் ஆர்வமாகியுள்ளனர்.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஜெயம் ரவி. சமீபகாலமாக இவரின் படங்கள் பெருமளவு வரவேற்பை பெறாவிட்டாலும், பொன்னியின் செல்வன் படம் இவருக்கு ஒரு சிறப்பான அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது.

அந்தப் படத்திற்கு பிறகு ஜெயம் ரவி நடிப்பில் வெளிவர இருக்கும் திரைப்படம் ‘இறைவன்’. என்றென்றும் புன்னகை, மனிதன் போன்ற படங்களை இயக்கிய அகமதுதான் இந்த இறைவன் திரைப்படத்தையும் இயக்கியிருக்கிறார்.

இந்தப் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். நயன் மற்றும் ஜெயம் ரவி இணையும் மூன்றாவது படமாக இந்த இறைவன் திரைப்படம் அமைகிறது. ஏற்கனவே தனி ஒருவன்1, தனி ஒருவன்2 போன்ற படங்களிலும் நயன்தான் ஜோடி.

இறைவன் திரைப்படம் வருகிற 28 ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது. இந்தப் படத்தின் புரோமோஷனுக்காக ஜெயம் ரவியும் படத்தின் இயக்குனரும் பல பேட்டிகளில் தங்களது படத்தை பற்றியும் படத்தில் நடித்த நடிகர்களை பற்றியும் அனுபவங்களையும் பகிர்ந்து வருகிறார்கள்.

இந்தப் படத்திலும் ஜெயம் ரவி போலீஸாகத்தான் நடிக்கிறார். தனி ஒருவன், போகன், மிருதன், அடங்கமறு போன்ற படங்களிலும் போலீஸாகத்தான் நடித்திருப்பார். ஆனால் இறைவன் படத்தில் ஒரு சைக்கோ போலீஸாக இருக்கும் என்று கூறியிருக்கிறார் ஜெயம்ரவி.

இந்தப் படத்தில் நடிகர் சார்லியும் நடித்திருக்கிறாராம். சார்லியை பற்றி பேசும் போது ஜெயம் ரவி ஒரு சுவாரஸ்யமான தகவலை கூறியிருக்கிறார். அதாவது சார்லி சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்கும் போது இயக்குனர் சார்லிக்கு மேல் இருந்து ஒரு ஷார்ட் வைத்தாராம்.

அந்த ஷார்ட்டை இதுவரை எந்த சினிமாவிலேயும் பார்த்ததில்லை என்றும் இதுதான் முதல் தடவை என்றும் கூறினார். 1000 பக்கங்களில் இருக்கும் கதையை சொல்ல வருவதை அந்த ஒரே ஷார்ட்டில் காட்டியிருப்பார் இயக்குனர் என்றும் படம் ரிலீஸாகும் போது உங்களுக்கு தெரியும் என்றும் ஜெயம் ரவி கூறினார்.

படத்தின் கதை

இறைவன் திரைப்படம் ஒரு சைக்கோ த்ரில்லர் படம். ஜெயம் ரவி ஒரு சைக்கோ போலீஸாக நடிக்கிறார். ஒரு கொலை வழக்கை விசாரிக்கும்போது, அது ஒரு மிகப்பெரிய சதிக்கான தொடக்கமாக இருப்பதை அவர் கண்டுபிடிக்கிறார். அந்த சதியை அவிழ்க்க அவர் போராடுகிறார்.

படத்தின் எதிர்பார்ப்பு

ஜெயம் ரவியின் நடிப்பையும், அகமத்தின் இயக்கத்தையும் நம்பும் ரசிகர்கள் இந்தப் படத்திற்கு அதிக எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். சார்லியின் சஸ்பென்ஸ் காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

படத்தின் முக்கிய அம்சங்கள்

  • ஜெயம் ரவி ஒரு சைக்கோ போலீஸாக நடிக்கிறார்.
  • நயன்தாரா ஜெயம் ரவியின் ஜோடியாக நடிக்கிறார்.
  • இயக்குனர் அகமது இயக்கியுள்ளார்.
  • படம் 28ஆம் தேதி திரைக்கு வருகிறது.

படத்தின் எதிர்காலம்

ஜெயம் ரவியின் நடிப்பும், அகமத்தின் இயக்கமும் படத்திற்கு வெற்றிக்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. சார்லியின் சஸ்பென்ஸ் காட்சியும் ரசிகர்களை ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News