பிக்பாஸ் வீட்டுக்குள் எல்லாமே நடிப்புதான் - ஜனனி 'ஓபன் டாக்'
janany bigg boss- பிக்பாஸ் வீட்டுக்குள், எல்லோருமே நல்லவர்கள்தான். ஆனால், நடிக்கிறார்கள். நேரத்துக்கு ஏற்ப மாறி விடுகிறார்கள், என கடந்த வாரம் வெளியேற்றப்பட்ட ஜனனி மனம் திறந்து கூறியுள்ளார்.
janany bigg boss, bigg boss tamil season 6- தமிழில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. 70 நாட்களை கடந்த நிலையில், தற்போது 10 போட்டியாளர்கள் விளையாடி வருகின்றனர்.
இனிவரும் நாட்களில், ஒவ்வொருவரும் பிக்பாஸ் வீட்டில் தங்களை தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே மிக முக்கியம் என்பதால், அனைத்து போட்டியாளர்களும் தங்கள் சிறப்பான ஆட்டத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அதே போல, ஆரம்பம் முதலே விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் பிக்பாஸ் சென்று கொண்டிருக்கும் வேளையில், இதற்கு மிக முக்கிய காரணமாக அங்கே கொடுக்கப்படும் டாஸ்க்கும் பார்க்கப்படுகிறது. பொம்மை டாஸ்க், பேக்டரி டாஸ்க், ராஜா ராணி டாஸ்க், ஏலியன்கள் - பழங்குடி இன மக்கள் டாஸ்க் உள்ளிட்ட பல டாஸ்க்குகள் இடையே போட்டியாளர்கள் மத்தியில் நடந்த சண்டை, வாக்குவாதம், மோதல் போன்றவை பிக்பாஸ் பார்வையாளர்கள் மத்தியில், அதிக பரபரப்பை ஏற்படுத்தியது.
அதே போல, சமீபத்தில் நடந்து முடிந்த 'சொர்க்கம் – நரகம் – ஷார்ட்கட்' டாஸ்க்கில் கூட நிறைய சண்டைகள் மற்றும் குழப்பங்கள் பிக்பாஸ் போட்டியாளர்கள் மத்தியில் அரங்கேறி இருந்தது. முன்னதாக, பிக்பாஸ் இறுதி சுற்று வரை முன்னேறுவார் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்ட ஜனனி, கடந்த வார இறுதியில் வீட்டில் இருந்து வெளியேறினார். ஜனனி பாதியில் வெளியேறியது அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில், தற்போது தனியார் சேனலுக்கு பிரத்யேக பேட்டி ஜனனி அளித்துள்ளார். இதில், பிக்பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் குறித்தும், தனது கேம் குறித்தும் பல சுவாரஸ்யமான தகவல்களை ஜனனி பகிர்ந்து கொண்டார்.
ஜனனி கூறியதாவது,
'நாமினேஷன்' காரணமாக, உள்ளே இருப்பதே பயமாக இருந்தது, பேசினாலும் பயம், பேசாமல் இருந்தாலும் பயம், சண்டை போட்டாலும் பயம் என கூறி, எப்படி இருந்தாலும் வந்து சண்டை போட்டு கொண்டே இருப்பார்கள்.
முதலில் ஷிவின் என்னிடம் நன்றாக பழகினாள். ஆனால் என்னையே டார்கெட் செய்கிற மாதிரி அப்புறம் இருந்தது. அது உண்மையா பொய்யா என்று தெரியவில்லை. எல்லா இடங்களிலும், என்னையே சொல்லுவார். முதலில் சாதாரணமாக விட்டு விட்டேன். அதற்கு பிறகு, இவள் ஏன் அடிக்கடி என் பெயரை சொல்லிக்கொண்டு இருக்கிறாள், என்று தோன்றியது.
அந்த வீட்டை பொருத்தவரை திங்கள் முதல் வெள்ளி வரை, ஒரு மாதிரி இருப்பார்கள். சனி, ஞாயிறு வந்துவிட்டால், வேறு மாதிரி மாறி விடுவார்கள். எல்லோருமே, ஒரு விதமாக நடிப்பார்கள். டாஸ்க் என்று வந்து விட்டால், அப்படியே மாறி விடுவார்கள். ஆனால், அனைவருமே நல்லவர்கள்தான். எல்லோரையும் விட நான் வயது குறைந்தவள்தான். ஆனால், அக்கா, அண்ணா என்று அவர்களை வீட்டுக்குள் அழைக்கவில்லை. ஏனென்றால், பாசம் காரணமாக, டாஸ்க்குகளை விளையாட முடியாது. ஆனால், வெளியே அவர்கள் வந்த பிறகு, அவர்களை சந்தித்தால் அனைவரையுமே, அக்கா, அண்ணா என்றுதான் அழைப்பேன், என ஜனனி கூறியுள்ளார்.