ஜெயிலர் 'கிளிம்ப்ஸ்' வெளியீடு; ரஜினி காட்டிய 'மாஸ்'
Jailer Official Glimpse Video- நடிகர் ரஜினி நடித்துவரும் 'ஜெயிலர்' படத்தின் 'கிளிம்ப்ஸ்' நேற்று வெளியானது. இதில், ரஜினி 'மாஸ்' காட்டியிருப்பது, ரசிகர்களை உற்சாகப்படுத்தி உள்ளது.;
Jailer Official Glimpse Video, rajinikanth jailer movie update- நடிகர் ரஜினிகாந்த் நடித்துவரும் 'ஜெயிலர்' படத்தின் மேக்கிங் கிளிம்ப்ஸ் வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் மாஸ் ஆன காட்சிகள் அதில் இடம்பிடித்துள்ளன.
'சிறுத்தை' சிவா இயக்கத்தில், 'அண்ணாத்த' படத்தை தொடர்ந்து இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில், 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருடன் ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, விநாயகன், யோகி பாபு மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் 'ஜெயிலர்' படத்தின் நட்சத்திர நடிகர்களாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
அதே நேரத்தில் ஐஸ்வர்யா ராய் பச்சன், தமன்னா மற்றும் பிரியங்கா மோகன் ஆகியோரும் இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்க, விஜய் கார்த்திக் கண்ணன் கேமராவை கவனிக்கிறார்.
இந்தப் படத்திற்கான கதை விவாதம் உள்ளிட்ட முதற்கட்ட பணிகள் நான்கு மாதங்களுக்கு மேல் நடைபெற்று வந்ததையடுத்து கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி படப்பிடிப்பு துவங்கியதாக, 'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் அறிவித்தது. சென்னை, கிழக்கு கடற்கரை சாலை மற்றும் எண்ணூர் ஆகியப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடந்து வருகிறது.
இதற்கிடையே நேற்று, 'ஜெயிலர்' படப்பிடிப்பில் நடிகர் சிவராஜ்குமார் இணைந்திருப்பதாக, 'அப்டேட்' வெளியிட்டது சன் பிக்சர்ஸ். இந்நிலையில் தற்போது நடிகர் ரஜினிகாந்தின் மேக்கிங் 'கிளிம்ப்ஸ்' வெளியிடப்பட்டுள்ளது. படப்பிடிப்பு தளத்தில் ரஜினி இருக்கும் 'மாஸ்' ஆன காட்சிகள் அதில் இடம் பிடித்துள்ளன. அதனை இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
மேக்கிங் 'கிளிம்ப்ஸ்' சில், ரஜினியின் ஸ்டைலிஷ் ஆன நடை, உடை, பாவனைகளை கண்டு அசந்துபோன ரஜினி ரசிகர்கள், 'தலைவருக்கு 71 வயசு ஆகுதுன்னு யாரு சொன்னது? எப்பவும் எங்க தலைவரு தான் மாஸ் என்று புளகாங்கிதம் அடைந்து வருகின்றனர். 'தலைவா, நீங்க வேற லெவல்' என, கமெண்ட் செய்து வருகின்றனர்.
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கிய 'கோலமாவு கோகிலா' படம், காமெடி கலந்த, த்ரில்லிங் படமாக அமைந்தது. அதைத்தொடர்ந்து, சிவகார்த்திகயேன் நடித்த, பள்ளி சிறுமிகளை கடத்தும் கதையை கருவாக கொண்ட 'டாக்டர்' படம், பலத்த வெற்றி பெற்றது. காமெடி கலந்த இந்த படமும், மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த 'பீஸ்ட்' படம், எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. படத்தில் இடம்பெற்ற தீவிரவாத காட்சிகளும், கதையமைப்பும் மிகையாக இருந்ததால், விஜய் ரசிகர்களே, இந்த படத்தை ஏற்றுக்கொள்ளவில்லை.
இந்த படங்களை தொடர்ந்து, நெல்சன் திலீப்குமார் இயக்கி வரும் படம்தான் 'ஜெயிலர்'. சிவகார்த்திகேயன் நடித்த 'டாக்டர்' படத்தின் வெற்றியை அடுத்தே, இந்த படவாய்ப்பு நெல்சனுக்கு ரஜினி தரப்பில் வழங்கப்பட்டது. ஆனால், 'ஜெயிலர்' படத்தின் ரஜினியின் உடை, கண் கண்ணாடி, முகபாவனை அப்படியே, 'டாக்டர்' படத்தில் வந்த சிவகார்த்திகேயன் கெட்டப்பில் இருப்பதாக விமர்சனம் எழுந்தது. மேலும், 'பீஸ்ட்' தோல்வியால், ரஜினி தரப்பில் குழப்பம் ஏற்பட்டதாகவும் அப்போது கூறப்பட்டது.
ஆனால், தற்போது வெளியாகி உள்ள ஜெயிலர் மேக்கிங் கிளிம்ப்ஸ், படம் 'மாஸ்' ஆக இருக்கும் என்ற நம்பிக்கையை ரசிகர்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.