ஜெயிலர் படத்தில் சசிகலா? இதுமட்டும் உண்மையா இருந்தா!

ஜெயிலராக இருக்கும் ரஜினிகாந்த், தப்பு செய்யும் அந்த அரசியல்வாதி செய்யும் அராஜகத்தை கண்டுபிடித்து தண்டிப்பது போல ஒரு காட்சி வருகிறதாம். இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.;

Update: 2023-02-16 10:09 GMT

மங்களூருவில் வேகமாக வளர்ந்து வரும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்த், ஷிவராஜ்குமார் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சுவாரஸ்யமாக சசிகலா காட்சியும் படத்தில் இருப்பதாகவும் இதனால் படத்துக்கு எதிர்ப்பு வருமா இல்லை சுவாரஸ்யமாக மாறுமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள்.

சென்னையிலிருந்து கடந்த திங்கள்கிழமை மங்களூருக்கு பயணம் செய்தார் ரஜினிகாந்த். சென்னை விமான நிலையம் வந்த அவரை ரசிகர்கள் பலரும் சூழ்ந்து புகைப்படங்கள், வீடியோக்கள் எடுக்க அவர்களுக்கு மகிழ்ச்சியுடன் போஸ் கொடுத்து விடைபெற்றார் ரஜினிகாந்த்.

பலரும் ரஜினிகாந்த் ஹைதராபாத் செல்கிறார் என்றே நம்பினார்கள். மேலும் பல ஊடகங்களிலும் ஹைதராபாத்தில் ஜெயிலர் பட ஷூட்டிங் நடப்பதாக எழுதப்பட்டது. ஆனால் உண்மையில் அன்றைய தினம் மங்களூருக்குத் தான் சென்றார் ரஜினிகாந்த். மங்களூரிவில் பனம்பூர் கடற்கரையில் இந்த படப்பிடிப்பு நடந்து வருகின்றதாம். ரஜினிகாந்தும் ஷிவராஜ்குமாரும் அமர்ந்து பேசியதும் பனம்பூர் பகுதியிலிருக்கும் ஒரு ரிசார்ட்தானாம்.

மங்களூருவில் ரஜினி - ஷிவா காம்பினேசன் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதில் சுவாரஸ்யமாக சசிகலா சிறையில் இருந்த சமயத்தில் ஷாப்பிங் சென்ற விசயத்தை காமெடியாக சித்தரித்தோ அல்லது கிரைமாக யோசித்தோ வைத்திருக்கிறார்களாம்.

ஜெயிலராக இருக்கும் ரஜினிகாந்த், தப்பு செய்யும் அந்த அரசியல்வாதி செய்யும் அராஜகத்தை கண்டுபிடித்து தண்டிப்பது போல ஒரு காட்சி வருகிறதாம். இதனால் ஜெயிலர் படத்தின் மீதான எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது.

ரஜினிகாந்துடன் இந்த படத்தில் மோகன்லால், ஷிவராஜ்குமார் உள்ளிட்ட பல சூப்பர் ஸ்டார்கள் நடித்தாலும் அவர்கள் அவ்வப்போது வந்து செல்லும் வகையில்தான் கதை இருக்கிறதாம். முழு நேரமும் ரஜினிதான் படத்தில் மின்னுவார் என்கிறார்கள். ரஜினியின் அறிமுக காட்சியில்தான் இந்த சசிகலா விசயம் வருகிறதாம். பிரச்னை வராமல் இருக்க அதை ஆணாக மாற்றியிருக்கிறார்கள். அதாவது ஆண் அரசியல்வாதி ஒருவர் ஷாப்பிங் சென்றுவிட்டு சிறைக்கு ஜாலியாக வருவது போல காட்டியிருக்கிறார்களாம். 

Tags:    

Similar News