ஜெயிலர் மெகா ஹிட்.. ரஜினிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பாளர்

ஜெயிலர் பட வெற்றியைத் தொடர்ந்து ரஜினிக்கு பிஎம்டபுள்யூ காரை கலாநிதி மாறன் பரிசாக வழங்கினார்.;

Update: 2023-09-01 07:24 GMT

நடிகர் ரஜினிகாந்த்துக்கு காரை பரிசளிக்கும் கலாநிதி மாறன்.

ஜெயிலர் திரைப்படம் மெகா வெற்றியைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தை சந்தித்த படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சிறப்பு பரிசு ஒன்றை வழங்கினார்.

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் கடந்த ஆகஸ்ட் 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியானது. இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சுனில், சிவராஜ்குமார், ஜாக்கி ஷெராஃப், யோகிபாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த படம் ரசிகர்களிடையே  பலத்த வரவேற்பை பெற்றுள்ள நிலையில்,  முதல் வாரத்திலேயே உலகளவில் சுமார் ரூ.375.40 கோடிக்கும் மேல் வசூல் சாதனை செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தெரிவித்தது. இதுவரை சுமார் ரூ.525 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக தற்போது அறிவித்துள்ளது.

ஜெயிலர் திரைப்படம் மெகா ஹிட்டானதை அடுத்து நடிகர் ரஜினிகாந்தை தயாரிப்பாளர் கலாநிதி மாறன் நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது ரஜினிக்கு காசோலை ஒன்றை அவர் பரிசாக வழங்கினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைராலாகியுள்ளன.

இந்த நிலையில்,  ரஜினிக்கு பிஎம்டபுள்யூ காரை கலாநிதி மாறன் இன்று பரிசாக வழங்கியுள்ளார். வெவ்வேறு கார்கள் ரஜினிக்கு காண்பிக்கப்பட்ட நிலையில், அவர் BMW X7 காரை தேர்வு செய்துள்ளார். மேலும் காரினில் அமர்ந்து வசதிகளை பரிசோதித்து பார்த்தார். ரஜினிகாந்த் தேர்வு செய்துள்ள புத்தம் புதிய BMW X7 விலை ரூ.1.24 கோடி  எனக் கூறப்படுகிறது. 

Tags:    

Similar News