ஆரம்பமே இப்படியா ஆகணும்? ரஜினி ரசிகர்கள் வருத்தம்!
ஜெயிலர் இசைவெளியீட்டு விழா ஏற்பாடு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் விபத்து ஏற்பட்டுள்ளது.;
ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா ஏற்பாடு நடைபெற்று Jailer Audio Launch Latest Update வரும் நிலையில் விபத்தில் ஊழியர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இதனால் ரஜினி ரசிகர்கள் வருத்தத்தில் இருக்கிறார்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்யும் நபர்கள் பொறுப்புணர்வுடன் இருந்து கவனிக்க வேண்டும் இல்லையென்றால் அது தேவையில்லாமல் படத்துக்குதான் அவப்பெயராக முடியும் என்று சமூக வலைத்தளங்களில் அவர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இப்போது நடித்துள்ள படம் ஜெயிலர். இன்னும் 2 வாரங்களில் திரைக்கு வரவிருக்கும் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை சென்னையில் நடக்க இருக்கிறது.
ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவுக்கான ஏற்பாடுகள் தடபுடலாக தயாராகி வருகின்றன. நேரு உள்விளையாட்டரங்கில் மொத்தம் 7000 பேர் பங்கேற்கும் வகையில் இந்த விழா பிரம்மாண்டமாக நடக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதில் கலந்து கொண்டு சிறப்பிக்க ரஜினி ரசிகர்கள் உட்பட பலரும் காத்திருக்கின்றனர்.
விழாவுக்கான மேடை அலங்காரங்கள், நாற்காலி மேசைகள், டிஜிட்டல் போர்டுகள், அலங்கார படிக்கட்டுகள் என ஊழியர்கள் மும்முரமாக இதனை தயாரித்து வருகின்றனர். இந்நிலையில் வேலை செய்துகொண்டிருந்த ஊழியர் அலங்கார மின் விளக்குகளைக் கையாண்டு கொண்டிருந்த சமயத்தில் எதிர்பாராதவிமாக சரிந்து விழ அதனைப் பிடிக்க போய், கவனக்குறைவாக மின்சாரம் தாக்கப்பட்டு சம்பவ இடத்திலேயே துடிதுடித்துக் கொண்டிருக்க உடன் வேலை செய்தவர்கள் அவருக்கு முதலுதவி அளிக்க முற்பட்டனர். பின் உடனடியாக வண்டியில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றதாகவும் சம்பவ இடத்திலிருந்து கிடைத்த தகவலில் கூறப்பட்டுள்ளது.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த், மோகன்லால், சிவராஜ்குமார், சுனில், ஜாக்கி ஷெரோப் என பெரும் நடிகர்கள் இணைந்துள்ள இந்த படம் வரும் ஆகஸ்ட் 10ம் தேதி திரைக்கு வர இருக்கிறது. இந்த படத்தில் தமன்னா ஆடிய காவாலா பாடல் முதல் பாடலாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதற்கு பிறகு வெளியான இரண்டு பாடல்களும் பெரிய அளவில் தாக்கம் ஏற்படுத்தவில்லை என்றாலும் படத்துக்கு வழக்கம்போல நல்ல எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த முறையாவது ரஜினிகாந்த் அவர்களின் படம் மிகப் பெரிய வசூலைப் பெற வேண்டும் என ரஜினிகாந்த் ரசிகர்கள் விரும்புகின்றனர்.
நாளை ஜூலை 28ம் தேதி நேரு உள் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இசை வெளியீட்டு விழாவில் Jailer Audio Launch Latest Update ரஜினிகாந்துடன், மோகன்லால், சிவராஜ்குமார் உள்ளிட்டோர் ஒரே மேடையில் அமர்ந்து இந்த பிரம்மாண்ட நிகழ்வை சிறப்பிக்க இருக்கின்றனர்.