வருகிறது ஜெயிலர் 2.. நெல்சனின் அடுத்த ப்ளான் இதுதானாம்...!

ஜெயிலர் 2 படத்தில் என்ன என்ன இருக்கு? நெல்சன் திலீப்குமாரின் அசத்தல் பிளான்!;

Update: 2023-08-17 06:33 GMT

விரைவில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ஜெயிலர் படத்தின் அடுத்த பாகம் உருவாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் ரஜினிகாந்த் நடிக்க இருக்கிறாரா என்பது குறித்த தகவல் எதுவும் இல்லை என்றாலும் அவரை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிகிறது.

ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கியுள்ள ஜெயிலர் திரைப்படம் வேற லெவலில் வசூல் செய்து கொண்டிருக்கிறது. இந்த படத்தின் வெற்றியைப் பார்த்த சன்பிக்சர்ஸ் நிறுவனம் நெல்சன் திலீப்குமாரையே அடுத்த படத்துக்கும் கமிட் பண்ணலாம் என்று முடிவு செய்திருக்கிறார்களாம். ஆனால் அந்த படத்தில் யாரு ஹீரோ என்று இப்போது வரை முடிவு எடுக்கப்படவில்லையாம்.

நெல்சனின் அடுத்த படம் கண்டிப்பாக சிவகார்த்திகேயனுடன்தான் இருக்கும் என்று ஒரு பேச்சு இருந்து வருகிறது. அதே நேரம் அவரை வைத்துப் படம் எடுக்க சன்பிக்சர்ஸ் நிறுவனமும் தயாராகத்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். அதுகூடவே தளபதி விஜய்யும் நெல்சனிடம் இன்னொரு படம் சேர்ந்து பண்ணலாம் என்று சொல்லியிருக்கிறாராம்.

நெல்சன் இன்னும் ஒரு படத்தில் ரஜினியுடன் இணையலாம் என்று காத்திருக்கிறாராம். ரஜினி ஏற்கனவே தனது கடைசி படம் லோகேஷுடன்தான் என்று கூறியுள்ள நிலையில், நெல்சனுடன் அடுத்த படத்தில் இணைவதற்கு எந்த அளவுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று தெரியவில்லை. ஆனால் ஜெயிலர் 2 திரைப்படம் நிச்சயமாக வரும் என்று கூறப்படுகிறது.

நெல்சன் இயக்கத்தில் சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ஜெயிலர் 2 படத்தில் சிவராஜ்குமார், மோகன்லால் ஆகியோரின் கதையை படமாக எடுக்கலாம் என்றும் அந்த படத்தில் ரஜினி கேமியோ ரோல் பண்ண வாய்ப்பிருக்கிறது என்றும் சொல்கிறார்கள். ஒருவேளை ரஜினிகாந்த் மனதை மாற்றிக்கொண்டு நெல்சன் படத்தில் நடிக்கிறேன் என்று சொன்னால் ஜெயிலர் 2 தான் அவருடைய கடைசி படமாக அமைய வாய்ப்பிருக்கிறது.

ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்தின் மாஸ் சீன்களை விட அதிகம் பேசப்பட்டது மோகன்லால் மற்றும் சிவராஜ்குமாரின் மாஸ் சீன்கள்தான். மூனாவதா ஒருத்தன் இருப்பானே என்று முத்துவேல் பாண்டியன் சொன்னது அங்கே டிஷ்யூ பேப்பர் பாக்ஸுடன் உள்ளே நுழையும் சிவராஜ்குமாரின் மேனரிசமும் அந்த சீனும் தியேட்டரையே அதிர வைத்தது. அடுத்து மோகன்லாலும் அதுமாதிரியான ஒரு சீனில் பிரித்து மேய்ந்திருப்பார்.

இவர்கள் இருவரையும்வைத்தே தனி படம் எடுக்கலாமே அவர்களின் பின்னணி குறித்தும், அவர்கள் எப்படி இந்த நிலைமைக்கு வந்தார்கள் எனவும் அவர்களுக்கும் முத்துவேல் பாண்டியனுக்கும் எப்படி தொடர்பு ஏற்பட்டது. அது எப்படி நட்பாக மாறியது என்று பல விசயங்களை திரையில் காட்டலாம் என்றும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதனால் ஜெயிலர் 2 கண்டிப்பாக வரவேண்டும் எனவும் பேசி வருகிறார்கள் ரசிகர்கள். 

Tags:    

Similar News