நெல்சனுக்கு சூப்பர் ஸ்டாரின் அன்பு பரிசு

நெல்சனுக்கு இருசக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கிறார் ஜாக்கி ஷெராப். இதனை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நெல்சன்.;

Update: 2023-03-07 16:25 GMT

ஹிந்தி திரையுலகின் சூப்பர் ஸ்டார் முதல் தமிழின் சூப்பர் ஸ்டார் வரை 5 மொழி கலைஞர்களையும் இணைக்கும் படம் ஜெயிலர். இந்த படத்தை இயக்கி வருகிறார் நெல்சன் திலீப் குமார். இப்போது அவருக்கு ஜெயிலர் படத்தில் நடித்துள்ள ஹிந்தி சூப்பர் ஸ்டார் சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றைத் தந்துள்ளார்.


சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மலையாளத்திலிருந்து மோகன்லால், கன்னடத்திலிருந்து சிவராஜ்குமார், தெலுங்கில் சுனில், ஹிந்தியில் ஜாக்கி ஷெராப் என பலரும் நடித்து வருகின்றனர். படம் வேகமாக வளர்ந்து வரும் நிலையில், இப்போது படத்தின் முக்கியமான சண்டைக் காட்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றதாம்.

ரஜினிகாந்த், சிவராஜ்குமார் இடையேயான சண்டைக் காட்சி ஒன்று கடந்த வாரம் படமாக்கப்பட்டது. இப்போது மோகன்லாலின் காட்சிகள் படமாக்கப்பட தயாராக இருக்கிறதாம். அடுத்து உடனடியாக ஜாக்கி ஷெராப் காட்சிகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இந்நிலையில், ஜாக்கி ஷெராப் இயக்குநர் நெல்சனுக்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் ஒன்றை பரிசாக தந்திருக்கிறார்.


நெல்சனுக்கு இருசக்கர வாகனம் ஒன்றை பரிசளித்திருக்கிறார் ஜாக்கி ஷெராப். இதனை சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு அவருக்கு நன்றி தெரிவித்துள்ளார் நெல்சன்.

ஜெயிலர் படத்தில் ரஜினியை வேறு லெவலுக்கு காட்டியிருந்தார் நெல்சன். அவரின் ஒரிஜினல் வயசுக்கு ஏற்ப கதாபாத்திரமாக அமையும் என தெரிகிறது. படத்தில் அரிவாளும் இருக்கிறது. ஆனால் நெல்சனைப் பற்றி தெரியும் அவர் படம் மிகவும் வித்தியாசமானதாக இருக்கும்.

ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் இயக்கும் ஜெயிலர் படத்தில் ரஜினிகாந்துடன் தமன்னா, ரம்யாகிருஷ்ணன், மோகன்லால், ஷிவராஜ்குமார், ஜாக்கி ஷெராப், சுனில் என பல நடிகர்கள் நடிக்கிறார்கள். மேலும் சிவகார்த்திகேயனும் படத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு மிக நேர்த்தியாக துரித கதியில் நடந்து வருகிறது. மேலும் இன்னும் 1 மாதம் அல்லது 45 நாட்களில் படப்பிடிப்பை முடித்துக் கொண்டு போஸ்ட் புரடக்ஷன் பணிகளை ஆரம்பித்து விடுவார்கள் என்று கூறப்படுகிறது.


இப்படி பம்பரமாய் சுற்றி சுற்றி வேலை செய்யும் நெல்சனுக்கு ஜெயிலர் படத்தில் தரப்பட்டுள்ள சம்பளம் 30 கோடியாம். தமிழின் இளம் இயக்குநர்களில் அட்லீக்கு அடுத்து அதிக சம்பளம் பெறும் ஒருவராக நெல்சன் திலீப்குமார் இருக்கிறார். 

Tags:    

Similar News