'லவ் டுடே' படத்தின் 100 வது நாள் கொண்டாட்டத்தில் நடிகை இவானா துறு துறு

Love today100Days Celebration-பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தின் 100வது நாள் கொண்டாட்டம் சென்னையில் நடைபற்றது.

Update: 2023-02-16 10:00 GMT

பைல் படம். 

Love today100Days Celebration-ஜெயம் ரவி நடிப்பில் 2019-ஆம் ஆண்டு வெளியான கோமாளி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான படம் 'லவ் டுடே'. இப்படத்தை ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்திருந்தது. பிரதீப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தில் சத்யராஜ், ராதிகா, யோகி பாபு, ரவீனா மற்றும் ஆதித்யா கதிர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்திருந்த இப்படம் கடந்த நவம்பர் 4-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இப்படம் வெளியாகி 100 நாட்களை கடந்துள்ளது. இதனை படக்குழு பிரம்மாண்ட நிகழ்ச்சி நடத்தி கொண்டாடினர். இதில் படக்குழு, திரையுலகினர் உள்ளிட்ட பலரும் கலந்துக் கொண்டனர். இந்நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட ஜிபி முத்து மேடையில் படத்தின் கதாநாயகி இவானா மற்றும் நடன இயக்குனர் சாண்டி மாஸ்டருக்கு மத்தியில் குத்தாட்டம் போட்டுள்ளார்.


மேலும் இவானாவிடம் உங்களுக்கு நடிகர் ரங்கநாதனை பிடிக்குமா?, டைரக்டர் ரங்கநாதனை பிடிக்குமா? இல்லை சக மனிதர் ரங்கநாதனை பிடிக்குமா என நிகழ்ச்சி நெறியாளர் கேள்வி எழுப்பியதற்கு, எனக்கு எல்லாமுமாக பிரதீப் ரங்கநாதனை பிடிக்கும் என கூறினார். அப்போது அரங்கம் முழுவதும் கைத்தட்டல் விண்ணை பிளந்தது. இது தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Tags:    

Similar News