சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் 'பாலோ' பண்ணும் இசைப்புயல்!

A.R. Rahman follows serial actress Divya Krishnan - இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்கள் மட்டுமின்றி, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.;

Update: 2022-07-24 06:20 GMT

A.R. Rahman follows serial actress Divya Krishnan - சீரியல் நடிகையை இன்ஸ்டாகிராமில் ‘பாலோ’ பண்ணும் இசைப்புயல்!

A.R. Rahman follows serial actress Divya Krishnan - 'சமையல் மந்திரம்' நிகழ்ச்சியில் தொகுப்பாளராக அறிமுகம் ஆகி, தற்போது சீரியல் நடிகையாக கலக்கிக் கொண்டு இருக்கும் திவ்யா கிருஷ்ணனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை, 'இசைப்புயல்' ஏ.ஆர். ரகுமான் பின்தொடர்ந்து வருகிறார்.

சின்னத்திரை ரசிகர்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மட்டுமல்லாது சீரியல்களுக்கு அருவிருந்து படைத்து வருகிறது விஜய் டிவி. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'வேலைக்காரன்' சீரியலில், தனது நடிப்பின் மூலம், பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்பக்கம் ஈர்த்து உள்ளவர் திவ்யா கிருஷ்ணன். இந்த சீரியலில், வில்லி கேரக்டரில் தனது அசாத்திய நடிப்பினை அவர் வெளிப்படுத்தி வருகிறார்.

A.R. Rahman follows serial actress Divya Krishnan - சமையல் மந்திரம் என்ற நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் தொகுப்பாளராக அறிமுகம் ஆன திவ்யா கிருஷ்ணன், தற்போது சீரியல்களில் முழுக்கவனம் செலுத்தி வருவதோடு மட்டுமல்லாது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களிலும் மிகவும் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிடும் ரீல்ஸ் வீடியோக்களுக்கு என்றே தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.

இசைப்புயல் இன்ப அதிர்ச்சி : தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை, இசைப்புயல் ஏ.ஆர். ரகுமான் பாலோ செய்வது தனக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளதாகவும், தன் பக்கத்தை பின்தொடர்வதற்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக, திவ்யா கிருஷ்ணன் குறிப்பிட்டு உள்ளார்.

A.R. Rahman follows serial actress Divya Krishnan - இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ், போட்டோக்கள் மட்டுமின்றி, தினம் ஒரு திருக்குறள் என்ற தலைப்பில் தினமும் வீடியோக்களை வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News