யூடியுபர் ஜி.பி.முத்து கைதா? கொந்தளித்த ரசிகர்கள்
Is YouTuber GP Muthu Arrest? Upset fans;
ஜி.பி. முத்துவை போலீசார் கைது செய்வது போன்ற வீடியோ பதிவு.
gp muthu arrested, gp muthu arrested by policeதூத்துக்குடி மாவட்டம் உடன்குடி என்ற ஊரைச்சேர்ந்தவர் ஜி.பி.முத்து. மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள இவர் தனது குடும்பத்தினர் செய்து வந்த கார்பென்டர் வேலையை உடன்குடியில் பார்த்து வந்தார். வேலையின் இடையே அவ்வப்போது செல்போன்களை நோண்டும் பழக்கத்திற்கு அடிமை ஆனதால் கார்பென்டர் வேலையை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.
gp muthu arrested, gp muthu arrested by policeஆனால் செல்போனில் அவர் விளையாடிய டிக்டாக் பொழுது போக்கு விளையாட்டு அவரை பிரபலம் ஆக்கியது. ஒரு கட்டத்தில் இந்திய அரசு டிக்டாக் செயலிக்கு தடை விதித்ததால் அவரது பார்வை இன்னொரு சமூக வலைத்தளமான யூடியுப் பக்கம் திரும்பியது. ஜி. பி. முத்து ஒரு நாளைக்கு 75 வீடியோக்களை வெளியிட்டு வந்தார். இதன் மூலம் தனது நடிப்பு திறன், நடன திறன்களை இவர் வெளிக்கொண்டு வந்தார்.
gp muthu arrested, gp muthu arrested by policeபலர் அவரை விமர்சனம் செய்தாலும் வெகுளித்தனமான நெல்லை வட்டார மொழியில் அவர் பேசிய பேச்சுக்களை சிலர் ரசித்தனர். நாளடைவில் யூடியுபில் அவரை பாலோ அப் செய்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. ஒரு லட்சம் இரண்டு லட்சம் என்ற அவரது ரசிகர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைடி தொட்டதால் யூடியூப் நிறுவனமும் அவரை கவுரவித்தது. பல விருதுகளையும் பெற்றார். இதனை மூலதனமாக வைத்துக்கொண்ட ஜி.பி.முத்து நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் 6 பொழுதுபோக்கு நிகழ்ச்சியில் பங்கேற்க தேர்வானார். பிக்பாஸ் 6தமிழ் சீசன் நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து கலந்து கொண்டார். இவர்தான் முதல் போட்டியாளராக அந்த பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தார்.
gp muthu arrested, gp muthu arrested by policeபிக்பாஸ் வீட்டிற்குள்ளும் அவரது செயல்பாடுகள் ரசிக்கும் படியாக தான் இருந்தது. இந்த நிலையில் அவரது மகனுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதை சுட்டிக்காட்டி ஜி.பி. முத்து 13 நாட்களிலேயே வெளியேற முடிவு செய்தார். நடிகர் கமல்ஹாசனை சந்தித்து தனது மகனுக்கு சுகம் இல்லை, பிள்ளை பாசம் என்னை வீட்டிற்கு அழைக்கிறது என கண்ணீர்மல்க கூறி வெளியேறினார். அவர் மட்டும் பிக்பாஸ் வீட்டில் இருந்திருந்தால் அவர்தான் வெற்றியாளர் என பலர் கூறி வந்தனர்.
gp muthu arrested, gp muthu arrested by policeபிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் ஜி.பி.முத்து உடன்குடியில் உள்ள வீட்டில் தனது குழந்தைகளுக்கு பிரியாணி ஊட்டி மகிழ்ந்தார். இது தொடர்பான வீடியோ சூட்களையும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டார். இந்த நிலையில் இவர் ஓ மை கோஸ்ட் எனும் படத்தில் நடித்துள்ளார். இந்த பட விழாவில் சன்னி லியோனுக்கு இவர் பால்கோவா ஊட்டியதையும் ரசிகர்கள் பார்த்து மகிழ்ந்தனர்.அது போல் சன்னி லியோனும் அவர் மீது பாசமாக பழகினார்.
gp muthu arrested, gp muthu arrested by policeபிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜி.பி. முத்து பங்கேற்று வெளியேறிய பின்னர் அவரது ரசிகர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் ஜி.பி. முத்துவை இரு போலீஸார் கைது செய்தது போல் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். எங்கள் தலைவர் என்ன செய்தார், அவரை ஏன் கைது செய்தீர்கள் என கேட்டு கொந்தளிப்பான வாசகங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டனர். இதையடுத்துதான் அந்த சீன் பரோல் படத்திற்கான புரமோஷன் வீடியோ என்பது தெரியவந்தது. இந்த வீடியோவில்தான் ஜி.பி. முத்து கைது செய்யப்படுவது போல் காட்சி அமைந்தது. இதைத்தான் ரசிகர்கள் புகைப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
gp muthu arrested, gp muthu arrested by policeஜி.பி. முத்துவின் யூடியூப் சேனலில் வெளியான வீடியோவில் ஆரம்பத்தில் போலீஸ் கெட்டப்பில் வரும் இருவர் ஜி.பி. முத்துவை கைது செய்வது போன்று இருந்தது. அந்த சீனின் ஸ்கிரீன்ஷாட்டைதான் சிலர் சமூகவலைதளங்களில் பரப்பியுள்ளனர். இந்த வீடியோவை பார்த்த சிலர் ஜி.பி. முத்து கைதாகிவிட்டதாகவே நினைத்துவிட்டதன் விட்டதன் விளைவே இத்தனை கலேபரத்திற்கும் காரணம் என்பது இப்போது தெரிந்து விட்டது.