அடுத்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க போகிறாரா, இயக்குனர் பிரதீப்?

Jayam Ravi Next Movie 2023 -அடுத்த படத்திலும் கதாநாயகனாக நடிக்க போகிறாரா, இயக்குனர் பிரதீப் என்ற கேள்வி எழுந்துள்ளது.;

Update: 2022-11-08 11:14 GMT
ஜெயம் ரவியுடன் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன்.

Jayam Ravi Next Movie 2023 -தமிழ் திரையுலகில் லவ் டுடே என ஒரு படம் வெளியாகி உள்ளது. இந்தப் படத்தை இயக்கியிருப்பதோடு அதில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். பிரதீப் ரங்கநாதன் கோமாளி என்ற ஒரு படத்தை ஏற்கனவே இயக்கி இருந்தார். அந்த படத்தில் ஜெயம் ரவி கதாநாயகனாக நடித்திருந்தார்.

jayam ravi next movie 2023, jayam ravi upcoming movies, jayam ravi next film director pradeep ranganathanஇரண்டாவதாக இயக்கி நடிக்கும் படம் தான் லவ் டுடே. ஐ டி கம்பெனியில் வேலை பார்க்கும் பிரதீப், இவானா இருவரும் காதலர்கள். இவர்கள் காதல் விவகாரம் இவனாவின் தந்தை சத்யராஜுக்கு தெரிய வருகிறது. அவர் பிரதிப்பை வீட்டிற்கு வரவழைத்து பேசி பிரதீப், இவானா மொபைல் போன்களை இருவரிடமும் மாற்றி கொடுத்து ஒரு நாள் காத்திருங்கள் என்கிறார். மாற்றிக்கொண்ட மொபைல் போன்கள் மூலமாக ஒருவர் ரகசியம் மற்றவருக்கு தெரியவர பிரதீப் சண்டை போட ஆரம்பிக்கிறார்கள். அந்த சண்டை பிரிவு வரை செல்கிறது. அதன் பின்னர் என்ன நடக்கிறது என்பதுதான் மீதி கதை.

jayam ravi next movie 2023, jayam ravi upcoming movies, jayam ravi next film director pradeep ranganathanஅறிமுகமான முதல் படத்திலேயே தனது நடிப்பை பற்றியும் பேச வைத்து விட்டார் பிரதீப். காதல், எமோஷன், காமெடி என எல்லாம் கலந்த உத்தமன் பிரதீப் என்ற கதாபாத்திரத்தில் நடிப்பில் உத்தமமாய் இருக்கிறார். எந்த காட்சியிலும் கதாபாத்திரத்திற்காக நடித்திருக்கிறார் என்று சொல்ல முடியாதபடி பாத்திரமாகவே மாறி இருக்கிறார். தன்னைப் பற்றிய தவறுகளை மறைத்து விட்டு காதலில் செய்த தவறுகளை மட்டும் பெரிதுப்படுத்தி பேசும் ஒரு கதாபாத்திரம் தன்னைப் பற்றிய உண்மைகள் தெரியவந்ததும் அதை சமாளிக்க அவர் செய்யும் விஷயங்கள் பலரது நிஜமான கேரக்டர் கிளைமாக்ஸ் காட்சிகளை கண்கலங்கவும் வைத்திருக்கிறது.

jayam ravi next movie 2023, jayam ravi upcoming movies, jayam ravi next film director pradeep ranganathanஇத்தகைய சிறப்புக்குரியவர் பிரதீப் ரங்கநாதன் .ஜெயம் ரவி நடித்த 'கோமாளி' படத்தை இயக்கியவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நாயகனாக நடித்து, இயக்கியுள்ள 'லவ் டுடே' படம் ரசிகர்களிடையே பலத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்த இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

jayam ravi next movie 2023, jayam ravi upcoming movies, jayam ravi next film director pradeep ranganathanஇந்நிலையில், அதே நிறுவனத்துக்கு பிரதீப் ரங்கநாதன் மீண்டும் ஒரு படம் இயக்குகிறார். அதில், ஜெயம் ரவி ஹீரோவாக நடிக்கலாம் என்று கூறப்படுகிறது. இதுபற்றி ஏ.ஜி.எஸ். நிறுவன தரப்பில் விசாரித்தபோது, "பிரதீப் இயக்குவது உறுதியாகி இருக்கிறது. அதில் ஜெயம் ரவி நடிப்பாரா? பிரதீப்பே நாயகனாக நடித்து இயக்குவாரா என்பது முடிவாகவில்லை" என்று கூறப்பட்டது..




அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News