திருச்சி கல்லூரியில் சர்வதேச திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு

திருச்சி தூய வளனார் கல்லூரியில் சர்வதேச திரைப்படங்கள் திரையிடல் நிகழ்வு மாணவர்கள் மத்தியில் நடைபெற்றது.

Update: 2023-09-11 15:28 GMT

திருச்சி கல்லூரியில் சர்வதேச திரைப்படங்கள் மாணவர்கள் மத்தியில் திரையிடப்பட்டது.

திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள புனித வளனார் கல்லூரியில் பயிலும் காட்சி தொடர்பியல் துறையை சேர்ந்த மாணவ மாணவிகளுக்கு சர்வதேச மற்றும் தேசிய அளவிலான திரைப்படம் மற்றும் குறும்படம் திரையிடும் நிகழ்வு கூகாய் திரைப்பட நிறுவனம் சார்பில் கல்லூரி வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் ஈரான் நாட்டை சேர்ந்த ஆவண பட இயக்குனர் அலி அட்ஷானி  இயக்கத்தில் உருவான பேப்பர் டிரீம், அயர்லாந்து நாட்டை சேர்ந்த இயக்குனர் கால்ம் பேரெட் இயக்கத்தில் உருவான கெயட் கேர்ள், ஸ்பெயின் நாட்டின் காலா சைமன் இயக்கத்தில் உருவான ஆல்கராஸ், தமிழில் இயக்குனர் ரமேஷ் கண்ணன் இயக்கத்தில் உருவான சாதிவருது,  ஜெயஸ் இயக்கத்தில் உருவான ஆர்யமாலா, வடமொழியில் பாத்திமா இயக்கத்தில் உருவான வெயில்ட் இன்ஷஸ், குணால் வட்சவா இயக்கத்தில் உருவான தி மெர்சன்ட் ஆப் வினாஷ்னா உள்ளிட்ட படங்கள் திரையிடப்பட்டது.

அதனை தொடர்ந்து இப்படங்களின் இயக்குனர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் ஆகியோருடன் மாணவ மாணவிகள் இணையதளம் வாயிலாக கலந்துரையாடி பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து கொண்டு பல்வேறு படைப்புகள் உருவான விதம் குறித்த தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டனர்.


இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர் கீரா  இயக்கத்தில் விரைவில் வெளிவரவுள்ள வீமன் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டது. இந்நிகழ்வில் கூகாய் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் சக்திவேல்,  வீமன் திரைப்பட இயக்குனர் கீரா தேசிய விருது பெற்ற திரைபடத்தின் நடிகையும் வீமன் திரைப்படத்தின் நாயகியுமான வெண்மதி,  குறும்பட இயக்குனர் ரிஸ்வான் தேசிய விருது பெற்ற குறும்பட நடிகரும் மாற்றம் அமைப்பின் நிர்வாகியுமான ஆர்.ஏ.தாமஸ், அமைப்பின் நிர்வாகிகள் வழக்கறிஞர் கார்த்திகா, இணை செயலாளர் அல்லிக் கொடி, விளையாட்டு பிரிவு செயலாளர் எழில் மணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.


கூகாய் திரைபட நிறுவனம் சார்பில் வீமன் படத்தில் நடித்த நாயகி வெண்மதிக்கு சிறந்த நடிகைக்கான விருதும் நடிகருக்கான விருது வினு விற்கும் வழங்கப்பட்டது. இந்நிகவிற்கான ஏற்பாடுகளை புனித வளனார் கல்லூரி காட்சி தொடர்பியல் துறை தலைவர் முனைவர்  தமிழரசி, பேராசிரியர்கள் சதீஷ்,              சி.முருகவேல் ஆகியோர் தலைமையில் மாணவ மாணவிகள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர். நிகழ்வின் முடிவில் மாணவ மாணவிகள் இத்திரையிடல் நிகழ்வு மிகவும் பயனுள்ளதாக இருந்ததாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News