பவுன்சர்கள் உதவியுடன் படப்பிடிப்பில் கலந்து கொண்ட கமல்

Indian 2 update-இந்தியன் 2 படப்பிடிப்புக்காக பிரசாந்த் லேபை மொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.;

Update: 2022-09-24 11:45 GMT

பைல் படம்

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 படபிடிப்பு சில காரணங்களால் தடைப்பட்ட நிலையில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் நடைபெற்று வரும் இந்த படப்பிடிப்பில் காஜல் அகர்வால், கமல் போன்றோர் நடித்து வருகிறார்கள்.

Indian 2 update-இந்தியன் 2 படத்தை லைக்கா நிறுவனம் தயாரித்து வருகிறது. மேலும் உதயநிதி ஸ்டாலின் இப்படத்தின் தமிழ்நாட்டு உரிமையை பெற்றுள்ளார். இந்நிலையில் இந்தியன் 2 படப்பிடிப்புக்காக பிரசாந்த் லேபை மொத்தமாக கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.

அங்கு உள்ள சுற்று வட்டாரம் மொத்ததையுமே இந்தியன் 2 படம் கைப்பற்றியுள்ளது. இதனால் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு அங்கு இந்தியன் 2 படப்பிடிப்பு வேலை தான் நடக்கும் என கூறப்படுகிறது. இதற்கான டீம் அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகிறார்களாம்.

மேலும் கமல் படப்பிடிப்பில் கலந்து கொண்ட நிலையில் நேற்று 15 பவுன்சர்களுடன் யாருக்கும் தெரியாமல் ஒருவரை உள்ளே அழைத்துச் சென்றுள்ளனர். இவ்வாறு பலத்த பாதுகாப்புடன் யாரை அழைத்துச் செல்கிறார்கள் என வெளியில் உள்ளவர்கள் குழப்பத்தில் இருந்துள்ளனர்.

Indian 2 update-அதன் பின்பு அந்த நபர் யார் என்று விசாரித்தால் கமலுக்கு டூப் என்று தெரியவந்துள்ளது. ஏனென்றால் இந்தியன் படத்தில் கமல் இரட்டை வேடத்தில் நடித்திருப்பார். இதனால் இப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் கமல் இரட்டை வேடத்தில் வருவார் என எதிர்பார்க்கலாம்.

மேலும் படக்குழுவிடம் கமல் சில விஷயங்களை சொல்லி எச்சரித்துள்ளாராம். படத்தின் புகைப்படங்கள் மற்றும் படத்தைப் பற்றிய விஷயங்கள் வெளியில் வரக்கூடாது என சொல்லி உள்ளாராம். ஆனால் அதையும் மீறி இந்த செய்தி வெளியே வந்துள்ளது.

Tags:    

Similar News